AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சியான் விக்ரமுடன் அடுத்த திரைப்படத்தை உறுதி செய்த விஷ்ணு எடவன்!

Vishnu Edavan About Vikram: தமிழ் சினிமாவில் பிரபலமான பாடல் ஆசிரியராக இருந்துவருபவர் விஷ்ணு எடவன். இவர் நயன்தாரா மற்றும் கவினின் ஹாய் திரைப்படத்தின் மூலம் இயக்குநராகவும் நுழைந்துள்ளார். இந்த படத்திற்கு பின் நடிகர் விக்ரமுடன் புதிய திரைப்படத்தில் இணைவதை உறுதி செய்துள்ளார். அது குறித்து பார்க்கலாம்.

சியான் விக்ரமுடன் அடுத்த திரைப்படத்தை உறுதி செய்த விஷ்ணு எடவன்!
விக்ரம் மற்றும் விஷ்ணு எடவன்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 20 Aug 2026 17:24 PM IST

கோலிவுட் சினிமாவில் முதல்வர் விஜய் (CM Vijay) முதல் சூர்யா (Suriya) உள்ளிட்ட பல்வேறு நடிகர்களின் படங்களில் பாடலாசிரியராக பணியாற்றிவந்தவர் விஷ்ணு எடவன் (Vishnu Edavan). இவர் தற்போது சினிமாவில் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். இவர் இயக்குநராக இயக்கியுள்ள புதிய திரைப்படம்தான் ஹாய் (Hi). இதில் கவின் மற்றும் நயன்தாரா (Nayanthara) லீட் நடிகர்களாக இணைந்து நடித்துள்ளனர். இதில் நயன்தாரா தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ரௌடி பிக்ச்சர்ஸ் நிறுவனத்தின் கீழ் தயாரிக்க, ஜென் மார்ட்டின் இதற்கு இசையமைத்துள்ளார். சிறப்பான காதல் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படம் வரும் 2026ம் ஆண்டு ஆகஸ்ட் 26ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகிறது. அதை முன்னிட்டு இந்த படத்தின் பாடல்கள் எல்லாம் வெளியாகி இணையத்தள வைரலாகிவருகிறது.

இப்படத்தின் புரோமோஷன் பணிகள் வெகு தீவிரமாக நடைபெற்றுவரும் நிலையில், சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் இயக்குநர் விஷ்ணு எடவன் பேசியிருந்தர். அதில் அவர் ஹாய் படத்திற்கு பின் விக்ரமுடன் (Vikram) புதிய திரைப்படத்தில் இணைவதை உறுதி செய்துள்ளார்.

இதையும் படிங்க: மண்டாட்டி படத்திற்கு என்ன சென்சார் கிடைத்துள்ளது? வெளியானது அப்டேட்

சியான் விக்ரமுடன் இணையும் புதிய திரைப்படம் குறித்து பேசிய இயக்குநர் விஷ்ணு எடவன்:

அந்த பேட்டியில் பேசிய சியான் விக்ரம், “விக்ரம் சாருக்கு நான் சொன்ன கதை ரொம்பவே பிடித்திருந்தது. அவர் என்னிடம் கேட்டது எல்லாமே முழுக்க ஆக்ஸட் பொழுதுபோக்கு கதைதான். மேலும் அதனுடன் காமெடி, பேமிலி கதைக்களம் எல்லாம் சேர்ந்த ஒரு கதையாக கேட்டாரு. மேலும் விக்ரம் சார் மிகவும் நகைச்சுவையான நபர், படங்களுக்காக அவரின் அர்ப்பணிப்பை பற்றி சொல்லவே வேண்டாம்.

இதையும் படிங்க: தனுஷ் அரசியலுக்கு வந்தால் ஆதரிப்பீர்களா? – ஜி.வி.பிரகாஷ் சொன்ன பதில்!

அவரின் வைப் ரொம்பவே நல்ல இருக்கும். இந்த படத்தின் ஷூட்டிங்கை எப்போது தொடங்கலாம் என சார் சொன்னாலும் தொடங்கிவிட்டலாம். ஹாய் படத்தின் ரிலீசிற்கு பின் இப்படத்தின் பணிகளை தொடங்கிவிட்டிடுவேன்” என அதில் இயக்குனர் விஷ்ணு எடவன் தெரிவித்திருந்தார்.

விக்ரமுடன் திரைப்படத்தில் இணைவது குறித்து விஷ்ணு எடவன் பேசியது தொடர்பான வீடியோ பதிவு :

நடிகர் விக்ரம் தற்போது இயக்குநர் ஆனந்த் சங்கர் இயக்கத்தில் புதிய திரைப்படத்தில் நடித்துவருகிறார். இதை தற்காலிகமாக படக்குழு சியான்63 என அறிவித்துள்ளது. இதற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துவரும் நிலையில், படத்தின் பாடல்கள் ஷூட்டிங் நடைபெற்றுவருகிறது. இப்படமும் முழுக்க பேமிலி ஆக்ஷன் கதைக்களத்தில் உருவாகிவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us