AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தர்மன் படத்தில் ரஜினிகாந்திற்கு வில்லனாகும் பிரபல தெலுங்கு நடிகர்? வைரலாகும் தகவல்

Rajinikanths Dharman Movie Villain Role Update | தமிழ் சினிமாவில் நடிகர் ரஜினிகாந்த் தற்போது நடித்து வரும் படம் தர்மன். இந்தப் படத்தில் வில்லனாக பிரபல தெலுங்கு நடிகர் நடிக்க உள்ளதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது.

தர்மன் படத்தில் ரஜினிகாந்திற்கு வில்லனாகும் பிரபல தெலுங்கு நடிகர்? வைரலாகும் தகவல்
தர்மன்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 20 Aug 2026 12:35 PM IST

தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் அடுத்ததடுத்தப் படங்களின் படப்பிடிப்பு தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. தொடர்ந்து தமிழ் சினிமாவில் பிசியான நாயகனாக வலம் வரும் நடிகர் ரஜினிகாந்த் தற்போது அடுத்தடுத்தப் படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அதன்படி நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் தர்மன். இது நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகும் 173-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தினை தற்போது இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து எழுதி இயக்கி வருகிறார். ஆனால் முன்னதாக இந்தப் படத்தை இரண்டு இயக்குநர்கள் இயக்குவதாக அறிவிக்கப்பட்டு பிறகு படத்தில் இருந்து அவர்கள் விலகுவதாக தொடர்ந்து அறிவிக்கப்பட்டது. தொடர் தடங்களுக்கு பிறகு இந்தப் படத்தின் பணிகள் தற்போது தொடங்கி விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது.

அதன்பிறகு படத்தின் படப்பிடிப்பு தொடங்கி விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. இந்த நிலையில் தர்மன் படத்தில் நடிக்கும் நடிகர்கள் தொடர்பான தகவல்களும் சினிமா வட்டாரங்களில் வெளியாகி தொடர்ந்து ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

தர்மன் படத்தில் ரஜினிகாந்திற்கு வில்லனாகும் பிரபல தெலுங்கு நடிகர்:

அந்த வகையில் தற்போது வெளியான தகவலின்படி ரஜினிகாந்தின் தர்மன் திரைப்படத்தில் ராம் பொத்தினேனி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் இரண்டாம் கட்டமாக நடைபெற்று வருகிறது. ராம் பொத்தினேனி மூன்றாம் கட்டப் படப்பிடிப்பில் இணையவுள்ளார். லிங்குசாமி இயக்கத்தில் வெளியான தி வாரியர் படம் மூலம் ஏற்கனவே தமிழில் அறிமுகமான ராம் பொத்தினேனி, தற்போது இப்படம் வாயிலாக மீண்டும் தமிழ் சினிமாவிற்குத் திரும்புகிறார். ரஜினிகாந்தின் தர்மன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க அவர் அதிகாரப்பூர்வமாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இப்படத்தில் சிம்ரன் மற்றும் ராஷி கண்ணா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Also Read… விஜய் சேதுபதி – சாய் பல்லவி படத்தின் ஷூட்டிங் நிலவரம் என்ன? வைரலாகும் தகவல்

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… விஸ்வநாத் & சன்ஸ் படத்தின் வசூல் எனக்கு மெய்சிலிர்ப்பை ஏற்படுத்துகிறது – இயக்குநர் வெங்கி அட்லூரி

Follow Us