IndvsSL 2nd Test : உலகப்போருடன் தொடர்பா? இந்தியா விளையாடவிருக்கும் மைதானத்தின் வரலாறு
Ind vs SL : இந்தியா - இலங்கை அணிகள் மோதும் 2வது டெஸ்ட் போட்டி இலங்கையின் கொழும்புவில் உள்ள சிங்கள ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் வருகின்ற ஆகஸ்ட் 23, 2026 அன்று நடைபெறவிருக்கிறது. இந்த போட்டி நடைபெறும் மைதானத்துக்கு இரண்டாம் உலகப்போருடன் தொடர்புடையது.
இந்தியா – இலங்கைக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டி இலங்கை கொழும்புவில் உள்ள சிங்கள ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் வருகிற ஆகஸ்ட் 23, 2026 ஞாயிற்றுகிழமை நடைபெறவிருக்கிறது. இந்த போட்டியில் இந்தியா வென்றாலும் டிராவில் முடிந்தாலும் இந்திய அணி தொடரை கைப்பற்றுவது உறுதி. முதல் போட்டியில் அபாரமாக ஆடி வெற்றி பெற்ற நிலையில் 2வது போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் பெரிய மாற்றம் இருக்காது என கூறப்படுகிறது.
இந்திய அணி விளையாடவுள்ள கொழும்பில் உள்ள சிங்கள ஸ்போர்ட்ஸ் கிளப் கிரிக்கெட் மைதானத்துக்கு என தனித்துவ வரலாறு உள்ளது. இலங்கையின் மிகச் சிறந்த மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க கிரிக்கெட் மைதானங்களில் ஒன்றாக அறியப்படும் இந்த மைதானம், ரசிகர்களால் இலங்கையின் லார்ட்ஸ் என்று அழைக்கப்படுகிறது. உள்நாட்டுத் தொடர்களின் முக்கிய இறுதிப் போட்டிகள் முதல் பல மறக்கமுடியாத சர்வதேச டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகள் வரை, இலங்கை கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கு இந்த மைதானம் ஒரு முக்கிய மையமாகத் திகழ்ந்துள்ளது.
இதையும் படிக்க : டக் அவுட்.. டெஸ்ட் வரலாற்றிலேயே மோசமான சாதனை செய்த 3 வீரர்கள்!




1899ல் உருவான சிங்கள ஸ்போர்ட்ஸ் கிளப்
சிங்கள ஸ்போர்ட்ஸ் கிளப் உருவான வரலாறு மிகுந்த சுவாரசியமானது. அதனை தெரிந்துகொள்ள நாம் 19 ஆம் நூற்றாண்டு வரை செல்ல வேண்டும். கடந்த 1899 ஆம் ஆண்டில், ராயல் கல்லூரி, செயின்ட் தாமஸ் கல்லூரி மற்றும் வெஸ்லி கல்லூரி மாணவர்களைக் கொண்ட ஒரு பள்ளி கிரிக்கெட் அணி, வலிமைமிக்க கோல்ட்ஸ் கிரிக்கெட் கிளப்பைவெறும் ஒரு ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
இந்த அதிரடி வெற்றிக்குப் பிறகு, வீரர்களும் ரசிகர்களும் இணைந்து முழுக்க முழுக்க சிங்கள வீரர்களைக் கொண்ட ஒரு கிளப்பை உருவாக்க முடிவு செய்தனர். இதன் விளைவாக கடந்த 1899 ஆம் ஆண்டில் சிங்கள ஸ்போர்ட்ஸ் கிளப் அதிகாரப்பூர்வமாக நிறுவப்பட்டது. ஆரம்பத்தில், இந்த கிளப் விக்டோரியா பூங்காவில குத்தகைக்கு எடுக்கப்பட்ட நிலத்தில் செயல்பட்டது. மணல் நிறைந்த மண் மற்றும் இலவங்க மரங்கள் நிறைந்த இப்பகுதியில் கிளப்பின் ஆரம்பகாலப் பயிற்சி அமர்வுகளும் போட்டிகளும் நடைபெற்றன. பின்னர், 1952 ஆண்டில், கொழும்பில் உள்ள மெய்ட்லேண்ட் பிளேஸில்சுமார் 20 ஏக்கர் நிலத்தைக் குத்தகைக்கு எடுத்து, கிளப் தனது புதிய இருப்பிடத்தை அமைத்துக்கொண்டது.
இதையும் படிக்க : IND vs SL: இலங்கை வீரருடன் ஜெய்ஸ்வால் வார்த்தை போர்! இந்திய அணியின் வெற்றிக்கு காரணமாக அமைந்ததா?
இரண்டாம் உலகப் போருக்கு உள்ள தொடர்பு
தற்போது சிங்கள ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானம் அமைந்துள்ள மெய்ட்லேண்ட் பிளேஸ் பகுதி, இரண்டாம் உலகப் போரின்போது நேச நாட்டுப் படைகளால் விமான ஓடுதளமாகப் பயன்படுத்தப்பட்டது. சிங்கள ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானம் என்பது வெறும் விளையாட்டு மைதானம் மட்டுமல்ல. அது இலங்கை கிரிக்கெட் வரலாற்றின் சாட்சியாகவும் திகழ்கிறது. நீண்ட காலமாக இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் தலைமையகம் இங்குதான் அமைந்திருந்தது. மேலும், இலங்கையின் பிரீமியர் லீக் மற்றும் முக்கிய உள்நாட்டுத் தொடர்களின் இறுதிப் போட்டிகளும் இந்த மைதானத்திலேயே நடைபெறுகின்றன.கிரிக்கெட்டிற்காக மிகச்சிறந்த ஆடுகளம் என பெயர் பெற்ற இம்மைதானம், உலகம் முழுவதிலுமிருந்து வரும் ஜாம்பவான் மட்டையாளர்கள் மற்றும் பந்துவீச்சாளர்களுக்கு ஒரு பெரும் சவாலாக அமைகிறது.