இலங்கையில் பேரதிர்ச்சி.. செம்மணியில் தோண்ட தோண்ட வந்த 582 மனித எலும்புக்கூடுகள்.. மரண ரகசியத்தின் பின்னணி என்ன!
Sri Lanka 582 Human Skeletons Recovered : இலங்கை மாகாணத்தில் செம்மணி என்ற இடத்தில் மேற்கொள்ளப்பட்டிருந்த அகழ்வாராய்ச்சி பணியின்போது, பச்சிளம் குழந்தைகள் மற்றும் சிறுவர்களின் 582 எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது பரபரப்பை அதிகரித்துள்ளது.
இலங்கையில் அகழ்வாராய்ச்சி செய்த தடயவியல் குழுக்கள் ஒரு பிரம்மாண்டமான புதை குழியை கண்டுபிடித்தனர். இதில், பச்சிளம் குழந்தைகள், சிறிய குழந்தைகளின் எலும்புக்கூடுகள் உள்பட 582 மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டன. இந்த சம்பவம், இலங்கையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாட்டின் 26 ஆண்டுகால உள்நாட்டு போர் முடிவடைந்த பின்னர் இலங்கையில் கண்டெடுக்கப்பட்ட மிகப்பெரிய கூட்டு புதைக்குழிகளில் இதுவும் ஒன்றாகும். யாழ்ப்பாண நகருக்கு அருகே உள்ள செம்மணியில் அகழ்வாராய்ச்சியாளர்கள் தனிப்பட்ட பொருட்களின் தொகுப்பை கண்டெடுத்தனர். இதில், பிளாஸ்டிக் பால் பாட்டில்கள், குழந்தைகள் விளையாட்டு பொருட்கள், சிறிய அளவிலான பைகள், காலணிகள் மற்றும் வளையல்கள் இருந்தது தெரிய வந்தது. இது தொடர்பாக சம்பவ இடத்தில் தடயங்களை சேகரித்த நிபுணர்கள் கூறுகையில், பல்வேறு எலும்புக்கூடுகளில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதற்கான தெளிவான அறிகுறிகள் தென்பட்டு உள்ளன.
டி. என். ஏ. பரிசோதனை மேற்கொள்ள முடிவு
குறிப்பாக ஒரு எலும்பு கூட்டின் இரு கைகளும் மார்போடு இறுக்கமாக கட்டப்பட்டிருந்தது. இலங்கையில் அதிகாரப்பூர்வமாக காணாமல் போனவர்களாக பதிவு செய்யப்பட்டவர்களில் தற்போது மீட்கப்பட்ட 582 பேரின் உடல்கள் இடம்பெற்றுள்ளனவா என்பது தற்போது வரை தெளிவாக தெரியவில்லை. இவர்கள் குறித்த அடையாளங்களை உறுதி செய்வதற்கு முன்பு, தடைய அறிவியல் நிபுணர்கள் அந்த தடயங்களை ஆய்வு செய்ய வேண்டி உள்ளது. மேலும், டி. என். ஏ. மாதிரிகள், உயிருடன் இருக்கும் குடும்ப உறுப்பினர்களின் மாதிரிகளுடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.
மேலும் படிக்க: பழைய வீட்டை சீரமைக்கும்போது கிடைத்த புதையல்.. ரூ.98 கோடி மதிப்பு.. ஆச்சர்யத்தை ஏற்படுத்திய சம்பவம்!




கூட்டு புதைக்குழி விசாரணை மையமாக மாறிய செம்மணி
இலங்கையின் வரலாற்றிலேயே ஒரு கூட்டு புதைக்குழி குறித்த மிகப்பெரிய விசாரணையின் மையமாக செம்மணி தளம் மாறி உள்ளது. இலங்கை அரசு பாதுகாப்பு படைகளுக்கும், தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நடைபெற்றது. இதில் சட்டத்துக்கு புறம்பான கொலைகளுடன் நீண்ட காலமாக தொடர்பு படுத்தப்பட்டு வருகிறது. மேலும், நீண்ட கால இன பதட்டங்களுக்கு மத்தியில் உருவான, தமிழ் புலிகள் என்று அழைக்கப்படும் விடுதலைப் புலிகள் இயக்கம், இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் உள்ள தமிழர்களுக்காக ஒரு சுதந்திர தாயகத்துக்காக போராடியது.
உள்நாட்டு போரில் 1 லட்சம் பேர் உயிரிழப்பு
இலங்கை ராணுவம் மற்றும் விடுதலை புலிகள் இயக்கம் ஆகிய இரண்டுமே கடத்தல்கள், கொலைகள், பாலியல் வன்கொடுமைகள் மற்றும் பிற கொடுமைகள் உள்ளிட்ட கடுமையான குற்ற செயல்களில் ஈடுபட்டதாக புகார்கள் உள்ளன. கடந்த 1983- ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு மே மாதம் முடிவடைந்த உள்நாட்டு போரில் சுமார் ஒரு லட்சம் பேர் உயிரிழந்தனர். இதில், ஆயிரக்கணக்கானோர் தமிழ் சிறுபான்மை இனத்தை சேர்ந்தவர்களால் காணாமல் போயினர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: மனித உடலில் 3.1 கிலோ கல்.. உலகையே வியப்பில் ஆழ்த்திய இலங்கை மருத்துவர்களின் வரலாற்றுச் சாதனை!!