AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

மின்சார வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ்.. 20 ஆயிரம் சார்ஜிங் மையங்கள் அமைக்கப்படும்.. அமைச்சர் சி. டி. ஆர். நிர்மல் குமார்!

Minister CTR Nirmal Kumar Electricity Announced : தமிழகத்தில் 20 ஆயிரம் சார்ஜிங் மையங்கள் அமைக்கப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை சட்டப் பேரவையில் மின்சாரத்துறை அமைச்சர் சி. டி. ஆர். நிர்மல் குமார் வெளியிட்டார். அதனை விரிவாக பார்க்கலாம்.

மின்சார வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ்.. 20 ஆயிரம் சார்ஜிங் மையங்கள் அமைக்கப்படும்.. அமைச்சர் சி. டி. ஆர். நிர்மல் குமார்!
சார்ஜிங் மையங்கள் அமைக்கப்படுவதாக அறிவிப்பு
Gowtham Kannan s
Gowtham Kannan S | Updated On: 21 Aug 2026 17:21 PM IST

தமிழக சட்டப்பேரவையில் எரிசக்தி மற்றும் மின்சாரத்துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், துறை அமைச்சர் சி. டி. ஆர். நிர்மல் குமார் பேசினார். தொடர்ந்து, பல்வேறு அறிவிப்புகளை அவர் வெளியிட்டார். இதில், தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தால் 2026- 2027 ஆம் ஆண்டில் மொத்தம் 50 ஆயிரம் புதிய விவசாய மின் இணைப்புகள் வழங்கப்படும். தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தில் காலியாக உள்ள 2,558 பணியிடங்களை தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையம் மூலமாகவும், 5 ஆயிரம் திறன் சார்ந்த மற்றும் திறன் சாராத மொத்தம் 10 ஆயிரம் பணியாளர்களை ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்திட நடவடிக்கை எடுக்கப்படும். சென்னை பகுதியில் உள்ள 33 கிலோ வாட் துணை மின் நிலையங்களில் ரூ. 104 கோடி மதிப்பீட்டில் கூடுதலாக 33 கிலோ வாட் மின்னூட்டங்கள் படிப்படியாக அமைக்கப்படும்.

20 ஆயிரம் சார்ஜிங் நிலையங்கள் அமைக்கப்படும்

தமிழகத்தில் சுமார் 20,000 சார்ஜிங் நிலையங்கள் அமைக்கப்படும். தமிழ்நாடு தொடர் அமைப்பு கழகத்தின் 10 மிக உயர் அழுத்த துணை மின் நிலையங்களில் மின்மாற்றிகளின் மின்மாற்றிகளின் திறன் ரூ. 110.76 0 கோடி மதிப்பீட்டில் உயர்த்தப்படும். 33 கிலோ வாட் துணை மின் நிலையங்களில் ரூ.129.49 கோடி மதிப்பீட்டில் மின்மாற்றிகளின் திறன் உயர்த்தப்படும். மிக உயர் அழுத்த மின் துணை மின் நிலையங்களில் பாதுகாப்பு மற்றும் தகவல் தொடர்பு சாதனங்களை ரூ.120.32 கோடி மதிப்பீட்டில் கொள்முதல் செய்யப்படும்.

மேலும் படிக்க: “59 திமுக உறுப்பினர்களுக்கும் அரசு வழங்கும் கார் வேண்டாம்!”.. உதயநிதி ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு!!

புதவிட பழுதை கண்டறிய சிறப்பு வாகனம் கொள்முதல்

ஆயுள் காலம் முடிந்த தகவல் தொடர்பு சாதனங்களை ரூ.92.3 கோடி மதிப்பீட்டில் மாற்றி அமைக்கப்படும். சென்னையில் 1750 இடங்களில் உள்ள பகிர்மான மின்மாற்றி கட்டமைப்புகள் ரூ.250 கோடி மதிப்பீட்டில் ஆர். எம். யு. மாற்றி அமைக்கப்படும். மிக உயர் அழுத்த புதைவிட பழுதை கண்டறிவதற்காக ரூ.17 கோடி மதிப்பீட்டில் சிறப்பு வாகனம் கொள்முதல் செய்யப்படும். நுகர்வோர்கள் தங்களது புகார்களை வாட்ஸ் ஆப் ஷாட்பாட் மூலமாக பதிவு செய்வதற்கு ரூ.14 லட்சத்தில் உருவாக்கப்படும். பணியிட மாறுதல் மற்றும் பணி உயர்வு ஆகியவற்றை ஆன்லைன் கவுன்சிலிங் நடத்துவதற்கு விண்ணப்பங்கள் உருவாக்கப்படும்.

கள ஆய்வின்றி வீடுகளுக்கு புதிய மின் இணைப்புகள்

தற்போது, மனிதவள மேலாண்மை அமைப்புடன் இணைந்து அதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும். நீட்டிக்கப்பட்ட அல்லது மேம்பாட்டு பணி எதுவும் தேவைப்படாத ஒரு முறை வீட்டு மின் இணைப்பு விண்ணப்பதாரர்களுக்கு தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தால் கள ஆய்வு இல்லாமல் சுய உறுதிமொழி (செல்ஃப் டிக்ளரேசன்) அடிப்படையில் அடிப்படையில் புதிய மின் இணைப்பு வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை அமைச்சர் வெளியிட்டார்.

மேலும் படிக்க: “மின்வாரிய கடன்.. 45 டெண்டர்களில் முறைகேடு!”.. சட்டமன்றத்தில் செந்தில் பாலாஜி vs நிர்மல் குமார் இடையே கடும் வாக்குவாதம்!!

Follow Us