Tamil Nadu Weather report: தமிழகத்தில் அடுத்த 3 நாட்கள் மழை காத்திருக்கு…. வானிலை மையம் எச்சரிக்கை
Tamil Nadu weather today : தமிழ்நாட்டில் அடுத்த 3 நாட்களுக்கு 5 மாவட்டங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் மழை காத்திருக்கிறது
சென்னை, ஆகஸ்ட் 21 : தமிழக கடலோர பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்த தாழ்வுப் பகுதி நிலவுவதகாவும் இதன் காரணமாக தமிழ்நாட்டில் ஆகஸ்ட் 21, 2026 இன்று முதல் ஆகஸ்ட் 23, 2026 ஆகிய 3 நாட்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் அறிவித்துள்ளது. மேலும் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
தமிழகத்தில் அடுத்த 3 நாட்கள் மழைக்கு வாய்ப்பு
தமிழ்நாட்டில் அடுத்த 3 நாட்களுக்கு 5 மாவட்டங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில், தமிழகத்தின் கடலோர பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தப் தாழ்வுப் பாதை நிலவுகிறது.
இதையும் படிக்க : “கடையை திறந்தால் சர்வர் டவுன்!”.. வட்டாட்சியர் அலுவலகத்தில் PoS எந்திரங்களை ஒப்படைத்து ரேஷன் ஊழியர்கள் அதிரடி போராட்டம்!




இதன் காரணமாக ஆகஸ்ட் 21, 2026 இன்று முதல் ஆகஸ்ட் 23, 2026 ஞாயிற்றுக்கிழமை வரை 3 நாட்டகளுக்கு மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்கள், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஆகஸ்ட் 24, 2026 மற்றும் ஆகஸ்ட் 25, 2026 கோயம்புத்தூர், மாவட்டத்தின் மலையோர பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக் கூடும் எனவும், தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் ஒரு சில இடங்களிலும் பதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 26, 2026 மற்றும் ஆகஸ்ட் 27, 2026 ஆகிய 2 நாட்கள் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் ஒரு சில இடங்களில் மிமான மழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : கேரளா, கர்நாடகா, ஆந்திராவின் அதிரடி முடிவு… நதிநீர் உரிமையில் தமிழக அரசுக்கு உருவான புது நெருக்கடி!
சென்னையைப் பொறுத்தவரை சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் ஆகஸ்ட் 21, 2026 இன்றும் ஆகஸ்ட் 22, 20236 நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்யபிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.