உள் தமிழகத்தில் அதிகரிக்கும் வெப்பநிலை.. எத்தனை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு?
Tamil Nadu Weather Update: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். பகல் நேரங்களில் வெப்பம் அதிகமாக இருந்தாலும், மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் பெரும்பாலான பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆகஸ்ட் 21, 2026: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பல்வேறு மாவட்டங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை கடந்து வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக பாளையங்கோட்டையில் 39.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. திருச்சியில் 38.5, திருத்தணியில் 38.3, ஈரோட்டில் 37.6, கரூரில் 36.8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. சென்னையைப் பொறுத்தவரையில், அதிகபட்சமாக மீனம்பாக்கத்தில் 38 டிகிரி செல்சியஸும், நுங்கம்பாக்கத்தில் 36.3 டிகிரி செல்சியஸும் பதிவாகியுள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக திருத்தணியில் இயல்பை விட 4.3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகமாக பதிவாகியுள்ளது.
உள் தமிழகத்தில் அதிகரிக்கும் வெப்பநிலை:
வரும் நாட்களில் வெப்பநிலையில் பெரிய அளவில் மாற்றம் இருக்காது என கணிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், உள் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: ரேஷன் பொருள்கள் வாங்க கார்டு தேவையில்லை… ஏன் தெரியுமா? அமைச்சர் வெங்கடரமணன் வெளியிட்ட அறிவிப்பு!
சென்னையில் மழைக்கு வாய்ப்பு:
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். பகல் நேரங்களில் வெப்பம் அதிகமாக இருந்தாலும், மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் பெரும்பாலான பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க: தவெக 10 சீட்க்கு மேல் ஜெயிச்சா மீசையை மழிக்கிறேன்.. சவாலை செய்து காட்டிய அதிமுக மாவட்ட செயலர்!
சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் பதிவாகக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 27ஆம் தேதி வரை எங்கெல்லாம் மழை இருக்கும்?
தமிழக கடலோரப் பகுதிகளின் கீழ்மட்ட வளிமண்டலத்தில் பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நிலவி வருகிறது. இதன் காரணமாக அடுத்த சில நாட்களுக்கு தமிழகத்தில் தொடர்ந்து மழை பெய்ய வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
ஆகஸ்ட் 21: தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.
ஆகஸ்ட் 22: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வடகடலோர தமிழகத்தின் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழக பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.
ஆகஸ்ட் 23: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வடகடலோர தமிழகத்தின் ஓரிரு இடங்களில் மழை பெய்யக்கூடும்.
ஆகஸ்ட் 24 மற்றும் 25: கோவை, நீலகிரி மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். ஏனைய மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வடகடலோர தமிழகத்தின் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.