நாங்கள் நேருக்கு நேர் தான் பேசுவோம்.. அரசியலில் எடப்பாடி பழனிசாமி காணாமல் போவார்.. அமைச்சர் ஆதவ் அர்ஜூனா கடும் விமர்சனம்!
Minister Aadhav Arjuna : அரசியல் களத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி காணாமல் போவார் என்றும், நாங்கள் எதை கூறினாலும் நேருக்கு நேர் தான் கூறுவோம் என்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தெரிவித்தார். அதனை விரிவாக பார்க்கலாம்.
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு சட்டமன்ற தொகுதிகளில் தமிழக வெற்றி கழகம் வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றி தொடர்பாக தலைமைச் செயலகத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் 10% வாக்குகள் கூட இல்லாத கட்சியாக அதிமுக உள்ளது. 2026 சட்டமன்ற தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைக்க முடிவு செய்து எடப்பாடி பழனிசாமி தோல்வியை தழுவினார். அதிமுகவில் இருந்த முன்னாள் அமைச்சர்கள் பெரும்பாலானோர் தற்போது தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளனர். எம்ஜிஆர் பாவித்த அதிமுகவாக தமிழக வெற்றி கழகத்தை அதிமுகவினர் பார்த்து வருகின்றனர். இரட்டை இலையும், விசில் சின்னமும் ஒன்று என்ற மக்கள் மனநிலையை நாங்கள் பிரச்சாரத்தில் எடுத்துக் கூறினோம். தற்போது திமுகவை எதிர்த்து நிற்கும் ஒரே கழகமாக தமிழக வெற்றி கழகம் உள்ளது.
வாக்குக்கு பணம் கொடுக்காமல் தவெக வெற்றி
சட்டமன்ற பொது தேர்தலில் வாக்குக்கு பணம் கொடுக்காமல் எப்படி வெற்றி பெற்றோமோ. அதே போல, இடைத்தேர்தலிலும் தமிழக வெற்றி கழகம் வெற்றி பெற்றுள்ளது. திருமங்கலம் ஃபார்முலாவையும், ஈரோடு ஃபார்முலாவையும் திமுக முன்னெடுத்தது. ஒரு ஓட்டுக்கு 5000, தங்க மூக்குத்தி ஆகியவற்றை திமுக கொடுத்திருந்தது. ஆளுங்கட்சி ஆன பிறகு திமுக ஊழல் அரசை உருவாக்கியது. அதிமுகவின் கோட்டையாக விளங்கும் மதுராந்தகம், தாராபுரத்தில் பணம் கொடுத்து ஜெயித்து விடலாம் என்ற எண்ணம் எங்களுக்கு வரவில்லை.
மேலும் படிக்க: Puducherry Bypoll Result: தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல்.. என். ஆர். காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி!




அதிமுகவின் உண்மை தொண்டர்கள் தவெகவில் இணைந்தனர்
அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து விட்டனர். மதுராந்தகத்தில் விசில் சின்னத்துக்கு வாக்களிக்காமல் உதயசூரியனுக்கு வாக்களியுங்கள் என்று அதிமுக தொண்டர்கள் பிரச்சாரம் செய்தனர். இதே போல, தாராபுரத்தில் இரட்டை இலை சின்னத்துக்கு வாக்களியுங்கள் என்று திமுக தொண்டர்கள் வாக்கு சேகரித்துள்ளனர். குறிப்பாக பழனிசாமி மீது ஏற்பட்ட கோபத்தினால் அதிமுகவின் வாக்குகள் தவெகவுக்கு வந்துள்ளது.
அரசியல் களத்தில் எடப்பாடி காணாமல் போவார்
எடப்பாடி பழனிசாமி ஒரு பக்தவச்சலமாக மாறி உள்ளார். திமுகவும், அதிமுகவும் ஒப்பந்தம் போட்டு ஒன்றிணைந்து விடுவர். 47 எம்எல்ஏக்கள் வைத்துள்ள எடப்பாடி பழனிசாமி எப்படி முதல்வராக முடியும். மு. க. ஸ்டாலின் உருவ கேலி செய்திருந்தார். அதிமுகவும், விசில் சின்னமும் ஒன்றுதான். அதிமுகவை சேர்ந்த 1000 ஒன்றிய செயலாளர்கள் தமிழக வெற்றி கழகத்தில் இணைய உள்ளனர். அதிமுகவில் எடப்பாடி பழனிசாமியும், அவரது மகன் மிதுனும் தான் கட்சியில் இருப்பார்கள். அரசியல் களத்தில் எடப்பாடி பழனிசாமி காணாமல் போவார்.
மேலும் படிக்க: அதிமுக எப்படியாது வெற்றி பெறணும் அம்மா.. எம்ஜிஆர்- ஜெயலலிதா சிலை முன் தொண்டர்கள் தவம்.. என்ன நடக்கப்போகிறது!