AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

ஜி.பே.யில் பணம் – பரிசுப் பொருட்கள் கொடுத்தார்கள்… துரோகத்துக்குக் கிடைத்த இடைக்கால வெற்றி – மு.க.ஸ்டாலின் விமர்சனம்

MK Stalin on TVK Victory : தமிழகத்தில் தாராபுரம், மதுராந்தகம் ஆகிய 2 தொகுதிகளில் தவெக அபார வெற்றி பெற்ற நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இது துரோகத்துக்கு கிடைத்த இடைக்கால வெற்றி என கடுமையாக விமர்சித்துள்ளார். அது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

ஜி.பே.யில் பணம் – பரிசுப் பொருட்கள் கொடுத்தார்கள்… துரோகத்துக்குக் கிடைத்த இடைக்கால வெற்றி – மு.க.ஸ்டாலின் விமர்சனம்
முதல்வர் விஜய் - திமுக தலைவர் ஸ்டாலின்
Karthikeyan S
Karthikeyan S | Published: 09 Oct 2026 17:59 PM IST

சென்னை, அக்டோபர் 9 : தமிழகத்தில் தாராபுரம், மதுராந்தகம் ஆகிய 2 தொகுதிகளில் தவெக அபார வெற்றி பெற்ற நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இது துரோகத்துக்கு கிடைத்த இடைக்கால வெற்றி என விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் தனது பதிவில், பதவி விலகிய இருவரையே வேட்பாளர்களாக அறிவித்து, தேர்தலைச் சந்தித்தது ஆளும்கட்சி. அதிகார பலம், ஆட்சி பலம், பணபலம், போலீஸ் பலம் ஆகியவற்றைப் பக்கபலமாக வைத்து த.வெ.க. இந்தத் தேர்தலை எதிர்கொண்டதாக தெரிவித்துள்ளார்.

துரோகத்துக்குக் கிடைத்த இடைக்கால வெற்றி என மு.க.ஸ்டாலின் விமர்சனம்

இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், சட்டமன்றத் தேர்தல் முடிந்த 5 மாதத்தில் திணிக்கப்பட்டதுதான் இந்த இடைத்தேர்தல். வாக்களித்த மை அழிவதற்கு முன்னால் மக்களின் விருப்பத்தை அழித்துவிட்டு இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் பதவியை விட்டு விலகி, அடுத்த நிமிடமே ஆளும் கட்சியில் சேர்ந்தார்கள். அப்பட்டமான ஜனநாயகப் படுகொலை நடந்தது. அதனால்தான் இந்த இடைத்தேர்தல் நடந்தது.

இதையும் படிக்க : திண்டுக்கல் பள்ளி குடிநீர் தொட்டியில் மனித கழிவு.. இந்த கொடூஞ் செயலை செய்தது இவர்களா? போலீஸ் விசாரணையில் ஷாக் தகவல்!

பதவி விலகிய இருவரையே வேட்பாளர்களாக அறிவித்து, தேர்தலைச் சந்தித்தது ஆளும்கட்சி. அதிகார பலம், ஆட்சி பலம், பணபலம், போலீஸ் பலம் ஆகியவற்றைப் பக்கபலமாக வைத்து தவெக. இந்தத் தேர்தலை எதிர்கொண்டது. சினிமா கவர்ச்சி பலத்தை மட்டுமே நம்பி அரசியல் களத்தில் குதித்து பெரும்பான்மை பலம் இல்லாவிட்டாலும் குதிரை பேரங்களின் மூலமாக முதலமைச்சர் ஆகியுள்ள விஜய், இந்த இடைத்தேர்தலிலும் ரீல்ஸ் காட்சிகளே கைகொடுக்கும் என்று நம்பினார்.

டீ குடித்தார், டிராக்டர் ஓட்டினார், முருங்கைக்காய் பறித்தார், தெருத்தெருவாகப் போனார். எந்தவொரு இடைத்தேர்தலுக்கும், ஒரு முதலமைச்சர் பதவியில் இருப்பவர் இப்படித் தெருத்தெருவாகப் போனது இல்லை. இந்த இரண்டு தொகுதியில் வெற்றி பெற்றால்தான் தனக்கு இனி அரசியல் வாழ்க்கை என்ற முடிவோடு செயல்பட்டார். நான்கு நாட்கள் இரண்டு தொகுதியிலும் இருந்துள்ளார் முதலமைச்சர். வெளியூரில் இருந்து இறக்கிவிடப்பட்ட ஆட்கள், அவர் போகும் சாலைகள் அனைத்தும் வைக்கப்பட்ட பேரிகேட், கொடுக்கப்பட்ட அன்பளிப்புகள், அமைச்சர்களுக்கு மட்டும் எவ்வளவு செலவு செய்துள்ளேன் என்று ஆளும்கட்சி வேட்பாளரே அளித்த வாக்குமூலங்கள் இவை அனைத்தையும் வைத்துப் பார்க்கும்போது இந்த வெற்றியை அடைய த.வெ.க. எவ்வளவு பதற்றத்தில் இருந்துள்ளது என்பதை அறிய முடிகிறது.

ஐந்து நிமிடம் பேசினாலே கொத்து புரோட்டா போட்டுவிடுவார் என்று சொல்லப்பட்டவரை நான்கு நாட்கள் கொளுத்தும் வெயிலில் அலைய வைத்துக் கொத்து புரோட்டா போட்டுவிட்டார்கள் மக்கள். கட்சி, தேர்தல், மக்கள் பணிகள் என்றால் என்னவென்று முதலமைச்சர் விஜய் இனியாவது உணர்ந்து செயல்பட வேண்டும்.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகுதான் மகளிருக்குக் கட்டணமில்லாப் பயண விரிவாக்கம், தாய்மாமன் தங்கமோதிரம், அண்ணன் சீர் போன்ற திட்டங்களை அவர் அறிவித்தார். இதுவே தேர்தல் நடத்தை விதிகளை மீறியதுதான். இப்படி பல்வேறு விதிமீறல்களைச் செய்தே இந்த முடிவை த.வெ.க. பெற்றுள்ளது. என்னைப் பொறுத்தவரையில் துரோகத்துக்கு இடைக்கால வெற்றி கிடைத்துள்ளது. அதே நேரத்தில் பொய் பிம்ப அரசியலின் வீழ்ச்சி தொடங்கிவிட்டது!

இதையும் படிக்க : Tamil Nadu ByElection 2026 Result: இடைத்தேர்தல் – தாராபுரம் மற்றும் மதுராந்தகத்தில் தவெக அபார வெற்றி!

ஜி.பே.யில் பணம் – பரிசுப் பொருட்கள் கொடுத்தார்கள். ஊரையே விலை பேசினார்கள் என்பதை இந்த ஆட்சியை ஆதரிக்கும் கட்சிகளே ஒப்புக்கொண்டு பேட்டி கொடுத்த காட்சிகளையும் நாம் பார்த்தோம். தேர்தலுக்கு முந்தைய இரவு வெளியான வீடியோவில் கோடிகளைக் கொட்டிச் செலவிட்டதை வேட்பாளரே ஒப்புக்கொள்ளும் காட்சிகளையும் பார்த்தோம். தூய சக்தியின் வேடத்தை இது அம்பலப்படுத்தியது என்று தெரிவித்துள்ளார்.

Follow Us