AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Tamil Nadu ByElection 2026 Result: இடைத்தேர்தல் – தாராபுரம் மற்றும் மதுராந்தகத்தில் தவெக அபார வெற்றி!

Tamil Nadu ByElection 2026 Result:  தாராபுரம் சட்டமன்றத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் சத்தியபாமா 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அதிமுகவுக்கும் தவெகவுக்கும் இடையே 19 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசம் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tamil Nadu ByElection 2026 Result: இடைத்தேர்தல் – தாராபுரம் மற்றும் மதுராந்தகத்தில் தவெக அபார வெற்றி!
சத்யபாமா - மரகதம் குமரவேல்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 09 Oct 2026 16:11 PM IST

சென்னை, அக்டோபர் 9 : தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் சத்தியபாமா 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அதிமுகவுக்கும் தவெகவுக்கும் இடையே 19 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசம் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மதுராந்தகம் தொகுதியிலும் தவெக வேட்பாளர் மரகதம் குமாரவேல் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தாராபுரம் மற்றும் மதுராந்தகத்தில் தவெக அபார வெற்றி!

கடந்த 2026 ஏப்ரல் மாதம் நடைபெற்ற, தமிழக சட்டமன்ற தேர்தலில், மதுராந்தகம் தனித் தொகுதியில் அதிமுக சார்பில் மரகதம் குமரவேல் வெற்றிப் பெற்றார். அதே போல தாராபுரம் தனித் தொகுதியில் அதிமுகவின் பி.சத்தியபாமா வெற்றி பெற்றிருந்தார். இந்த நிலையில் தேர்தல் முடிவுகள் வெளியான ஒரு சில வாரத்திலேயே இருவரும் தங்களது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர். இதனால் இவ்விரு தொகுதிகளும் காலியானதாக அறிவிக்கப்பட்டு, இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.

இதையும் படிக்க : டெபாசிட் இழந்த திமுக.. நோட்டாவை விடக் குறைந்த வாக்குகளைப் பெற்ற நாதக.. புதுச்சேரி இடைத்தேர்தல் முடிவுகள் அலசல்!

அந்த வகையில் கடந்த அக்டோபர் 6, 2026 அன்று நடைபெற்ற மதுராந்தகம் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில், ஆளும் தவெக சார்பில் மரகதம் குமரவேல் வேட்பாளராக போட்டியிட்டார். பிரதான எதிர்க்கட்சியான திமுக சார்பில் பரந்தாமனும் அதிமுக சார்பில் கணிதா சம்பத், சிபிஎம் சார்பில் சுகந்தி, நாதக சார்பில் ஜானகிராமன் ஆகியோர் களத்தில் இருந்தனர். இவர்கள் உட்பட மொத்தம் 27 வேட்பாளர்கள் மதுராந்தகம் தொகுதியில் போட்டியிட்டனர்.

அதனைத் தொடர்ந்து தாராபுரம் தொகுதியில், தவெக சார்பில் பி.சத்தியபாமா, திமுக சார்பில் எஸ்.சுகன்யா, அதிமுக சார்பில் கே.பானுமதி, நாம் தமிழர் கட்சி சார்பில் எம்.கார்த்திகா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ப. லட்சுமணன் ஆகியோர் முக்கிய வேட்பாளர்களாக களத்தில் இருந்தனர். இத்தொகுதியில் மொத்தம் 14 சுயேச்சை வேட்பாளர்கள் உள்பட மொத்தம் 22 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

இந்த நிலையில்  அக்டோபர் 9, 2026 அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இந்த நிலையில் மதுராந்தகம் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே தவெகவின் மரகதம் குமரவேல் முன்னிலை வகித்தார். தாராபுரம் தொகுதியை பொறுத்தவரை ஆரம்பத்தில் தவெக வேட்பாளர் சத்தியபாமா முன்னிலை வகித்தாலும், சில மணி நேரங்களிலேயே அதிமுகவின் கணிதா சம்பத் முன்னிலை வகித்தார். இதனால் அந்த தொகுதியில் அதிமுக வெற்றி பெறும் சூழ்நிலை உருவானது. இந்த நிலையில் இந்த மதியத்துக்கு மேல் அந்த நிலை மாறியது.  சத்தியபாமா தொடர்ந்து முன்னிலை வகிக்கத் தொடங்கினார்.

இதையும் படிக்க : மதுராந்தகத்தில் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட வாக்கு எண்ணிக்கை.. நடந்தது என்ன?

இந்த நிலையில் மதியம் 3 மணி நிலவரப்படி தாராபுரம் தொகுதி தவெக வேட்பாளர் சத்தியபாமா 7000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்தார். இதனையடுத்து அவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து மதுராந்தகம் தொகுதியில் தவெக வேட்பாளர் மரகதம் குரமவேலும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். 2 தொகுதிகளிலும் திமுக 2 ஆம் இடமும், அதிமுக 3 ஆம் இடமும் பிடித்தது.

Follow Us