இந்தியாவை வீழ்த்த 2 புதிய வீரர்களை களமிறக்கும் இலங்கை – கைகொடுக்குமா?
India vs Sri Lanka 2nd Test : இந்தியா அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்காக இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. முதல் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்ற நிலையில், 2வது போட்டியில் இலங்கை அணி 2 புதிய வீரர்களை களமிறக்குகிறது.
இந்தியா – இலங்கை இடையிலான 2வது டெஸ்ட் போட்டி இலங்கையின் கொழும்புவில் உள்ள சிங்கள ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் வருகிற ஆகஸ்ட் 23, 2026 அன்று நடைபெறவிருக்கிறது. முதல் டெஸ்ட் போட்டியில் 165 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற நிலையில் 2வது போட்டிக்காக இந்திய அணியில் எந்த மாற்றமும் இருக்காது என கூறப்படுகிறது. ஆனால் இலங்கை அணியில் 2 மிக முக்கிய மாற்றங்கள் செய்யப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.
இந்தியா அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்காக இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. காலேவில் நடைபெற்ற முதல் போட்டயில் இந்திய அணி 165 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதனையடுத்து இந்திய அணி இந்த தொடரில் 1 – 0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இதனையடுத்து 2வது போட்டியில் வெற்றிபெற்றாக வேண்டிய கட்டாயத்தில் இலங்கை அணிக்கு ஏற்பட்டுள்ளது.
இதையும் படிக்க : இலங்கைக்கு எதிராக 2வது டெஸ்ட் – குல்தீப் யாதவுக்கு பதிலாக 33வயது வீரர்? வெளியான தகவல்




இலங்கை அணியில் முக்கிய மாற்றங்கள்
இந்த நிலையில் இலங்கை அணியில் கமில் மிஷாரா மற்றும் சஹான் அராச்சிகே ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இதுவரை பங்கேற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் இலங்கையில் நடைபெற்ற போட்டிகளில் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி நிலையில் இருவருக்கும் இலங்கை அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
குறிப்பாக சஹான் அராச்சிக்கே இந்திய ஏ அணிக்கு எதிரான தொடரில் அதிக ரன்கள் எடுத்த வீரராக அறியப்படுகிறார். இந்த நிலையில் அவர் இலங்கை டெஸ்ட் அணியில் இடம் பிடித்துள்ளார்.
அதே போல கமில் மிஷாராவும் லோக்கல் கிரிக்கெட்டில் தொடர்ந்து சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி வந்த நிலையில், தற்போது இலங்கை அணியில் இடம் படித்துள்ளனர். கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டிய இந்த போட்டியில் 2 அறிமுக வீரர்களை களமிறக்குவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
காயங்களால் தடுமாறும் இலங்கை
இலங்கை அணியில் முக்கிய வீரர்கள் காயம் காரணமாக அவதிப்படுவது அந்த அணிக்கு பின்னடைவாக அமைந்துள்ளது. குறிப்பாக குசல் மெண்டிஸ், தினேஷ் சந்திமால் மற்றும் பதும் நிசங்கா ஆகியோர் காயம் காரணமாக 2வது டெஸ்ட் போட்டியில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குசல் மெண்டிஸ் தொடை பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக அவதிப்பட்டு வருகிறார். பதும் நிசங்கா கையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு இன்னும் முழுமையாக குணமடையவில்லை என கூறப்படுகிறது.
இதையும் படிக்க : இந்தியா – ஆப்கானிஸ்தான் தொடரில் சூப்பர் கேமரா… வருகிறது FIFA டெக்னாலஜி
2வது டெஸ்ட் போட்டிக்கான இலங்கை அணியில் கேப்டன் தனஞ்சய டி சில்வா, லஹிரு உடாரா, கமில் மிஷாரா, பசிந்து சூரியபண்டாரா, கமிந்து மெண்டிஸ், சஹான் அராச்சிகே, சோனால் தினுஷா, நிரோஷன் டிக்வெல்லா, கேஷர நுவன்தா, பிரபாத் ஜெயசூர்யா, மிலன் ரத்நாயக்க, லஹிரு குமாரா, அசித பெர்னாண்டோ மற்றும் விஸ்வ பெர்னாண்டோ ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.