AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

“திமுகவில் வயது வரம்பு அதிரடி!”.. 13 மாவட்டச் செயலாளர்கள் பதவிக்குச் செக்.. மு.க.ஸ்டாலின் அதிரடி!!

DMK Fixes Age Limit for District Secretaries: திமுக செயற்குழுவில் மாவட்டச் செயலாளர்களுக்கு 70 வயது உச்சவரம்பு நிர்ணயித்து அதிரடித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனால் முன்னாள் அமைச்சர்கள் உட்பட 13 மாவட்டச் செயலாளர்கள் மாற்றப்படவுள்ளனர். மேலும் மாவட்டங்களின் எண்ணிக்கை 110 ஆக உயர்த்தப்பட்டு, இளைஞர் மற்றும் மகளிர் அணியினருக்குப் புதிய வாய்ப்புகள் வழங்கப்படவுள்ளன.

“திமுகவில் வயது வரம்பு அதிரடி!”.. 13 மாவட்டச் செயலாளர்கள் பதவிக்குச் செக்.. மு.க.ஸ்டாலின் அதிரடி!!
திமுக செயற்குழுக் கூட்டம்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 22 Aug 2026 13:12 PM IST

சென்னை, ஆகஸ்ட் 22: திராவிட முன்னேற்றக் கழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்குக் கட்சியின் உட்கட்டமைப்பை அடிமட்ட அளவில் இருந்து மறுசீரமைப்பு செய்யும் நோக்கில் மிக முக்கியமான மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் மற்றும் எதிர்கால அரசியல் நகர்வுகளைக் கருத்தில் கொண்டு, சென்னை அண்ணா அறிவாலயத்தில் கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளன. கட்சி நிர்வாகத்தை விறுவிறுப்படையச் செய்யவும், புதிய இரத்தத்தைப் பாய்ச்சும் வகையிலும் அமைப்பில் பல்வேறு அடுக்கிலான வயது வரம்புகள் அதிகாரப்பூர்வமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

மேலும் படிக்க: வாரவிடுமுறைக்கு சொந்த ஊர் செல்ல திட்டமா?அரசு சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு.. முழு விவரம் உள்ளே!

70 வயதைக் கடந்த 13 மூத்த மா.செக்கள்:

செயற்குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின்படி, திமுகவின் மாவட்டச் செயலாளர்களுக்கான அதிகபட்ச வயது வரம்பு 70 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது வரை உள்ள 78 மாவட்டக் கழகங்களில், 13 மாவட்டச் செயலாளர்கள் 70 வயதைக் கடந்த மூத்த தலைவர்களாகவும் முன்னாள் அமைச்சர்களாகவும் இருக்கின்றனர். குறிப்பாக புதுக்கோட்டை ரகுபதி, செஞ்சி மஸ்தான், திருவண்ணாமலை ஏ.வா.வேலு, ராணிப்பேட்டை காந்தி மற்றும் ஈரோடு முத்துசாமி போன்ற முக்கியத் தலைவர்கள் 70 வயதைக் கடந்தவர்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். இந்த புதிய வயது வரம்பு விதியின் காரணமாக, இவர்கள் விரைவில் மாவட்டச் செயலாளர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுவார்கள் என்றும், இவற்றுக்கான மறுசீரமைப்பு நடவடிக்கைகளை 15 நாட்களுக்குள் முடித்துத் தலைமைக் கழகத்திற்கு அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடும் வயது வரம்புகள் விதிப்பு:

அதேபோல, மாவட்ட அளவில் மட்டுமல்லாமல் கிளை மற்றும் வட்டக் கழகப் பொறுப்புகளுக்கும் கடுமையான வயது வரம்புகள் விதிக்கப்பட்டுள்ளன. கிளைச் செயலாளருக்கு 45 வயது என்றும், வட்டச் செயலாளருக்கு 60 வயது என்றும் உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டு, ஒரு நபர் அதிகபட்சமாக இருமுறை மட்டுமே ஒரே பதவியில் நீடிக்க முடியும் என்ற விதியும் கொண்டு வரப்பட்டுள்ளது. அதேநேரத்தில், மாவட்டச் செயலாளர் பதவியில் இருந்து விடுவிக்கப்படும் மூத்த தலைவர்களைக் கௌரவிக்கும் விதமாகவும் அவர்களின் அனுபவத்தைப் பயன்படுத்தும் வகையிலும், துணைப் பொதுச்செயலாளர், மண்டலச் செயலாளர் மற்றும் மாநில அமைப்பாளர் போன்ற உயர் மாநிலப் பொறுப்புகள் அவர்களுக்கு வழங்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும் படிக்க: எம்எல்ஏக்களுக்கு கார்கள் தேர்வு செய்யும் பணி… தலைமைச் செயலகத்தில் அணிவகுத்த 5 மாடல் கார்கள்!

மாவட்டங்களின் எண்ணிக்கை 110 ஆக உயர்வு:

மேலும், கட்சி நிர்வாகத்தை மேலும் எளிமையாக்கும் வகையில் 5 முதல் 6 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டிருந்த மாவட்டக் கழகங்கள் பிரிக்கப்பட்டு, இனி 2 அல்லது 3 சட்டமன்றத் தொகுதிகளுக்கு ஒரு மாவட்டச் செயலாளர் என மாவட்டங்களின் எண்ணிக்கை 110 ஆக உயர்த்தப்படவுள்ளது. இதன் மூலம் உருவாகும் புதிய மாவட்டச் செயலாளர் பொறுப்புகளுக்கு உதயநிதி ஸ்டாலின் தலைமையிலான இளைஞர் அணி நிர்வாகிகள் மற்றும் மகளிர் அணியைச் சேர்ந்த திறமையான நிர்வாகிகளுக்கு அதிகளவில் முன்னுரிமை அளிக்கப்படவுள்ளது. இளைஞர்களின் அரசியல் கவனத்தை ஈர்க்கவும், வரவிருக்கும் உள்ளாட்சி மற்றும் இடைத்தேர்தல்களைத் தீவிரமாக எதிர்கொள்ளவும் இந்த அதிரடி மாஸ்டர் பிளானை திமுக தலைமை செயல்படுத்தத் தொடங்கியுள்ளது.

Follow Us