டிசி படத்திற்காக கடுமையான உடற்பயிற்சியில் ஈடுபட்ட லோகேஷ் கனகராஜ் – வைரலாகும் வீடியோ
Lokesh Kanagaraj workout video | தமிழ் சினிமாவில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நாயகனாக அறிமுகம் ஆன படம் டிசி. இந்தப் படத்திற்காக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கடினமான உடற்பயிற்சி மேற்கொள்ளும் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே அதிக அளவில் கவனத்தை ஈர்த்து வருகின்றது.
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களின் ஒருவராக வலம் வருபவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். இவரது இயக்கத்தில் பல முன்னணி நடிகர்களின் நடிப்பில் படங்கள் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வரும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தமிழ் சினிமாவில் தற்போது நாயகனாகவும் அறிமுகம் ஆகி உள்ளார். அதன்படி நடிகர் லோகேஷ் கனகராஜ் நடிப்பில் தமிழ் சினிமாவில் தற்போது திரையரங்குகளில் வெளியாகி உள்ள படம் டிசி. இந்தப் படம் கடந்த 7-ம் தேதி ஆகஸ்ட் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி உள்ள இந்தப் படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.
இயக்குநர் அருண் மாதேஸ்வரன் எழுதி இயக்கிய இந்த டிசி படம் இதுவரை உலக அளவில் 100 கோடிகளை வசூலித்ததாக படக்குழு அதிகாரப்பூர்வ அப்டேட்டை வெளியிட்டுள்ளது. இது இணையத்தில் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வரும் நிலையில் தற்போது டிசி படத்திற்காக லோகேஷ் கனகராஜ் தீவிர உடற்பயிற்சி செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.




டிசி படத்திற்காக கடுமையான உடற்பயிற்சியில் ஈடுபட்ட லோகேஷ் கனகராஜ்:
கதை, அதிரடி காட்சிகள் மற்றும் லோகேஷ் கனகராஜின் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு என அனைத்தும் ஒன்றிணைந்ததே ‘DC’-யின் பிரம்மாண்ட வெற்றிக்குக் காரணமாக அமைந்தது. இவையனைத்தும் இப்படம் 100 கோடி ரூபாய் வசூல் மைல்கல்லை எட்டப் பெரிதும் உதவியுள்ளன. இப்படத்திற்காக லோகேஷ் தனது தோற்றத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்திக்கொண்டதுடன், தீவிரமான கடின உழைப்பையும் மேற்கொண்டார்.
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
Lokesh 2.0
The massive success of #DC is a result of everything coming together — the story, action, and #LokeshKanagaraj’s hard work and dedication. All of these elements have contributed to the film crossing the ₹100 crore mark.
For this film, Lokesh underwent a tremendous…
— Movie Tamil (@_MovieTamil) August 22, 2026