அரசியல் வருகை குறித்து பேசிய சிலம்பரசன் – வைரலாகும் தகவல்
Actor Silambarasan | தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் சிலம்பரசன். இவர் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட போது அவரிடம் அரசியல் வருகை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு சிலம்பரசன் அளித்தப் பதில் தற்போது இணையத்தில் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
தமிழ் சினிமாவில் நடிகர்களாக இருந்து பலர் தங்களுக்கு அதிக ரசிகர்கள் உள்ளனர் என்ற நம்பிக்கையில் அரசியலுக்கு வந்துள்ளனர். ஆனால் அந்த பட்டியளில் மக்களின் மனதை வென்றவர்களின் எண்ணிக்கையோ மிகவும் குறைவுதான். சினிமாவில் பார்த்து ரசிப்பதற்கும் நாட்டை ஆளும் பொருப்பை மக்கள் கொடுப்பதற்கும் நிறைய வித்யாசம் உள்ளது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் எத்தனையோ ஜாம்பவான்கள் தமிழ் சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்து இங்கு தோல்வியை சந்தித்ததும் குறிப்பிடத்தக்கது. வெற்றியை அரசியலில் ருசித்த திரையுலகினரின் எண்ணிக்கை மிகவும் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் தற்போது அந்த வரிசையில் இடம் பிடித்துள்ளார் தளபதி விஜய். இவர் அரசியலில் வெற்றியடைந்ததைத் தொடர்ந்து அடுத்தடுத்து தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்கள் அரசியல் வருகை குறித்து பேசுவதும் இணையத்தில் தொடர்ந்து வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக தொடர்ந்து ஹிட் படங்களில் நடித்து வருபவர் நடிகர் சிலம்பரசன். இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் ரசிகரக்ளிடையே அதிக அளவில் கவனத்தை ஈர்த்து வருகின்றது. இந்த நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட போது நடிகர் சிலம்பரசனிடம் அரசியல் வருகை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.




அரசியல் வருகை குறித்து பேசிய சிலம்பரசன்:
அதற்கு பதிலளித்து பேசிய நடிகர் சிலம்பரசன் சினிமாவில் தங்களை ரசிக்கும் மக்களின் கூட்டம் அரசியலில் வரும் போது ஆதரிப்பார்கள் என்று நினைப்பது தவறு. என் அப்பா அரசியலுக்கு வருகை தந்தபோது அவர் எத்தனை விசயங்களை கடந்து வந்தார் என்று பார்த்தேன். எனக்கு சிறு வயதில் இருந்தே அரசியலில் ஆர்வமும் இல்லை. அப்படி எதிர்காலத்தில் அரசியல் வருகை இருக்குமா இல்லையா என்பதை தற்போது என்னால் சொல்ல முடியாது. மேலும் தற்போது முதலமைச்சராக உள்ள அண்ணன் விஜய் மீது மக்களுக்கு சினிமாவை தாண்டிய ஒரு நம்பிக்கை இருந்தது. அதனால்தான் அவரை வெற்றியடைய செய்தார்கள். அவரும் தற்போது ஒரு சிறந்த ஆட்சியை அளித்து வருகிறார் என்றும் காலம் தான் அனைத்தையும் முடிவு செய்யும் என்றும் நடிகர் சிலம்பரசன் பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Also Read… டோலிவுட் டூ கோலிவுட்.. இந்த போட்டோவில் இருக்கும் சிறுவன் யார் தெரிகிறதா?
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
#SilambarasanTR about #CMVijay‘s Victory ⭐:
“More than Vijay Anna’s fame, people have developed that immense trust in him.. When someone that trustworthy comes along, only then will people support them..🤝” pic.twitter.com/22AOAGTTxp
— Laxmi Kanth (@iammoviebuff007) August 19, 2026
Also Read… ரியோ ராஜின் ராம் இன் லீலா படத்தின் சென்சார் அப்டேட் என்ன தெரியுமா?