AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

செங்கல்பட்டு இளைஞர் கொடூர கொலை.. தவெகவில் இருந்து தந்தை- மகன் நீக்கம்!

Father, Son Expelled TVK : செங்கல்பட்டு மாவட்டத்தில் நிகழ்ந்த கொலை சம்பவத்தில் தொடர் புடைய தந்தை மற்றும் மகனை தமிழக வெற்றி க் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கி கட்சியின் தலைமை உத்தரவு பிறப்பித்து உள்ளது .

செங்கல்பட்டு இளைஞர் கொடூர கொலை.. தவெகவில் இருந்து தந்தை- மகன் நீக்கம்!
தவெகவில் இருந்து நீக்கப்பட்ட தந்தை-மகன்.
Gowtham Kannan s
Gowtham Kannan S | Updated On: 22 Aug 2026 21:46 PM IST

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் வட்டம், கேளம்பாக்கம் அருகே உள்ள தையூர் கிராமத்தைச் சேர்ந்த பிரவீன் என்ற இளைஞர் காதல் விவகாரத்தில் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் தொடர்புடைய தந்தை மற்றும் மகன் தமிழக வெற்றி கழகத்தில் உறுப்பினர்களாக இருந்துள்ளனர். அவர்களை கட்சியிலிருந்து நீக்கி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில், திருப்போரூர் ஒன்றியம், தையூர் ஊராட்சியை சேர்ந்த ஏழுமலை மற்றும் அவரது மகன் கௌதம் ஆகியோருக்கு தமிழக வெற்றிக் கழகத்தில் எந்த ஒரு அதிகாரப்பூர்வமான பதவியும் வழங்கப்படவில்லை. அவர்கள் இருவரும் தவெக குடும்பம் என்ற இணையதளத்தின் வாயிலாக கட்சியின் அடிப்படை உறுப்பினராக இணைந்துள்ளனர். இந்த நிலையில், இவர்கள் இருவரும் சட்டத்துக்கு புறம்பாகவும், கட்சியின் விதிமுறைகளை மீறியும் செயல்பட்டதாக தெரியவந்துள்ளது. இதனால், அவர்கள் தமிழக வெற்றி கழகத்தின் அடிப்படை உறுப்பினர் என்ற உரிமையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்கள்.

தையூர் கொலை சம்பவத்தின் பின்னணி

மேலும், கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை விதிமுறைகளின் படி, மாநில மாவட்ட, பேரூராட்சி, நகர உள்ளிட்ட கட்சி தொண்டர்கள் அனைவரும் இனிமேல் இவர்களை கட்சியின் பெயரால் எந்த விதமான தொடர்பும் வைத்துக்கொள்ள கூடாது என அறிவுறுத்தப்படுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தையூர் கிராமத்தை சேர்ந்த இளைஞர் பிரவீனும், அதே பகுதியை சேர்ந்த இளம் பெண் ஒருவரும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இந்த விவகாரம் அந்த பெண்ணின் வீட்டுக்கு தெரிய வந்த நிலையில் இருவரும் ஒரே சமுதாயமாக இருந்தாலும் அந்தஸ்து காரணமாக அவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

மேலும் படிக்க: பரமக்குடியில் பரபரப்பு.. காவல் துணை கண்காணிப்பாளர் சஸ்பெண்ட்… காவல்துறையில் பெரும் ஷாக்!

கூலிப்படையை ஏவி கொலை செய்த தந்தை- மகன்

அத்துடன் பிரவீனுடன் பழகுவதை நிறுத்துமாறு அந்த பெண்ணின் பெற்றோர் தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளனர். இந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் 16- ஆம் தேதி அந்த பகுதியில் பிரவீன் பேசிக் கொண்டிருந்தபோது அந்த வழியாக காரில் வந்த கும்பல் அவரை சரமாரியாக வெட்டி கொன்று விட்டு சென்றது. இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் அந்த இளம் பெண்ணின் தந்தை ஏழுமலை மற்றும் அவரது மகன் கெளதம் ஆகியோர் கூலிப்படையை ஏவி கொலை சம்பவத்தை அரங்கேற்றி இருப்பது தெரியவந்தது.

கூலிப்படை தலைவனுக்கு போலீஸ் வலைவீச்சு

அத்துடன், அவர்கள் தமிழக வெற்றி கழகத்தில் உறுப்பினராக இருப்பதும் விசாரணைகள் தெரியவந்தது. இந்த சம்பவத்தில் ஏழுமலை, கௌதம் மற்றும் கூலிப்படைய சேர்ந்த நிதிஷ், மணிகண்டன் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், கூலிப்படை தலைவன் சதீஷை போலீசார் தேடி வருகின்றனர். இந்த நிலையில் தான், ஏழுமலை, கௌதம் ஆகியோர் தவெகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

மேலும் படிக்க: நெல்லையில் பரபரப்பு.. பெண் அளித்த ஒற்றை புகார்.. தூக்கப்பட்ட இன்ஸ்பெக்டர்.. அதிரடி காட்டிய DIG!

Follow Us