70 வயது லிமிட்.. 3 முறை ரூல்.. திமுகவில் தூக்கப்படும் மாவட்ட செயலாளர்கள்.. யார் அந்த 13 பேர்?
DMK 13 District Secretary : திராவிட முன்னேற்றக் கழக செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் படி, மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து விடுவிக்கப்பட இருப்பதாக கூறப்படும் அந்த 13 பேர் யார்... யார்... என்ற விவரத்தை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திராவிட முன்னேற்ற கழகம் தோல்வியை தழுவி இருந்தது. இதனால், திமுகவில் பல்வேறு மறு சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள கட்சியின் தலைமை திட்டமிட்டது. அத்துடன், தேர்தல் தோல்வி குறித்து ஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்டிருந்த குழுவின் அறிக்கை கட்சியின் தலைவர் மு. க. ஸ்டாலின் வசம் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில், திமுகவின் பல்வேறு கட்ட மறு சீரமைப்பு பணிகள் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி வந்தன. அதற்கு அச்சாரமாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக செயற்குழு கூட்டம் இன்று சனிக்கிழமை ( ஆகஸ்ட் 22- ஆம் தேதி) நடைபெற்றது. இதில், திமுகவில் மாவட்ட செயலாளர்களின் அதிகபட்ச வயது 70- ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. அத்துடன், ஒருவர் அதிகபட்சமாக 3 முறை மட்டுமே மாவட்ட செயலாளர் பொறுப்பு வகிக்க முடியும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மேலும் படிக்க: கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிரான சுற்றறிக்கை: கல்வி இணை இயக்குனர்- வட்டாட்சியருக்கு நோட்டீஸ்!
திமுகவில் மா.செ.பதவிகளை இழக்கும் 13 பேர்
அதன்படி, தற்போது 70 வயதை கடந்த 13 மாவட்ட செயலாளர்கள் தங்களது பதவிகளை இழக்க இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. அந்த 13 மாவட்ட செயலாளர்கள் யார்… யார்… என்பதை இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம். இதில்,




- திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளர் எ. வ. வேலு ( 75 வயது).
- சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ். ஆர். சிவலிங்கம் ( 75 வயது).
- காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலர் சுந்தர் ( 72 வயது).
- ராணிப்பேட்டை மாவட்ட செயலாளர் ஆர். காந்தி ( 80 வயது).
- ஈரோடு தெற்கு மாவட்ட செயலாளர் முத்துசாமி ( 77 வயது).
- தேனி தெற்கு மாவட்ட செயலாளர் ராமகிருஷ்ணன் ( 77 வயது).
- விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் செஞ்சி கே. எஸ். மஸ்தான் ( 71 வயது).
- புதுக்கோட்டை தெற்கு மாவட்ட செயலாளர் ரகுபதி ( 76 வயது).
- தஞ்சாவூர் வடக்கு மாவட்ட செயலாளர் சாக்கோட்டை அன்பழகன் ( 72 வயது).
- மதுரை மாநகர செயலாளர் கோ. தளபதி ( 70 வயது).
- விருதுநகர் மாவட்ட செயலர் கே. கே. எஸ். எஸ். ஆர். ராமச்சந்திரன் (77).
- திருநெல்வேலி மேற்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன் ( 81 வயது).
- தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலர் அனிதா ராதாகிருஷ்ணன் ( 74 வயது).
திமுகவில் உள்கட்சி தேர்தல் எப்போது நடைபெறும்
ஆகியோர் திராவிட முன்னேற்ற கழக செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் அடிப்படையில் மாவட்ட செயலாளர் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், புதிய உறுப்பினர்கள் சேர்க்கை நடந்த பின்னர் உள்கட்சி தேர்தல் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: தவெக ஆட்சி நடத்த கம்யூனிஸ்ட் ஆதரவு வேண்டுமா? அல்லது… முதல்வர் விஜய்க்கு சண்முகம் கேள்வி!