சிறுமியை சீரழித்து கொன்ற வாலிபர்.. சாகும் வரை சிறை தண்டனை விதித்த தூத்துக்குடி நீதிமன்றம்!
Thoothukudi Girl Murder Sentences : தூத்துக்குடி மாவட்டத்தில் 8 வயது சிறுமியை பாலியல் வன் கொடுமை செய்து கொலை செய் த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்து உள்ளது .
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வசித்து வந்தவர் 8 வயது சிறுமி. இந்த சிறுமியை கடந்த 2020- ஆம் ஆண்டு கல்விளை பகுதியைச் சேர்ந்த வல்லவன் என்பவரின் மகன் முத்தீஸ்வரன் ( 26 வயது) என்பவர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தார். இது தொடர்பாக சாத்தான்குளம் போலீசார் போக்சோ உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து முத்தீஸ்வரனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு தொடர்பான விசாரணை தூத்துக்குடி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில், பல்வேறு சாட்சிகளை நீதிபதி முருகன் விசாரணை மேற்கொண்டு இருந்தார். இதில், வழக்கு விசாரணை இறுதி கட்டத்தை எட்டிய நிலையில் இந்த வழக்கில் நீதிபதி தீர்ப்பளித்தார்.
சிறுமி பாலியல் கொலையில் இளைஞருக்கு ஆயுள் தண்டனை
அதில், 8 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்ட இளைஞர் முத்தீஸ்வரனை குற்றவாளி என உறுதி செய்ததுடன், அவருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ. 5 ஆயிரம் விதித்து நீதிபதி முருகன் தீர்ப்பளித்தார். மேலும், பாலியல் கொலை செய்யப்பட்ட சிறுமியின் குடும்பத்துக்கு அரசு நிவாரண நிதியில் இருந்து ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்குமாறு நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார். இந்த பாலியல் கொலை சம்பவம் நடந்து சுமார் 6 ஆண்டுகள் ஆகும் நிலையில், தற்போது தான் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: நெல்லையில் பரபரப்பு.. பெண் அளித்த ஒற்றை புகார்.. தூக்கப்பட்ட இன்ஸ்பெக்டர்.. அதிரடி காட்டிய DIG!




சிறுமி கொலை சம்பவத்தின் பின்னணி
சாத்தான்குளம் பகுதியை சேர்ந்த 8 வயது சிறுமி அந்த பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 3- ஆம் வகுப்பு படித்து வந்தார். விடுமுறை நாட்களில் தனது வீட்டின் அருகே விளையாடுவது வழக்கமாகும். சம்பவத்தன்று சிறுமி தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த முத்தீஸ்வரன் அந்த சிறுமியிடம் பேச்சு கொடுத்து ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்துச் சென்றார். அங்கு, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததுடன், சிறுமி சத்தம் போட்டதன் காரணமாக அங்கேயே அடித்து கொலை செய்து விட்டு தப்பி சென்றார்.
6 ஆண்டுகளாக நடந்த வழக்கில் தீர்ப்பு
இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெறும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது. இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், சாத்தான்குளம் போலீசார் வழக்கு பதிவு செய்து இளைஞர் முத்தீஸ்வரனை கைது செய்து சிறையில் அடைத்திருந்தனர். 6 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: மகனால் தாய்க்கு நேர்ந்த சோகம்.. பிணத்தை புகைப்படம் எடுத்து அண்ணனுக்கு அனுப்பிய பயங்கரம்.. திருச்செந்தூரில் கொடூர சம்பவம்!