AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

டிக்கெட் முன்பதிவை தொடங்கிய டாக்ஸிக் படக்குழு – வைரலாகும் பதிவு!

Toxic Movie Ticket Booking Open Now | தென்னிந்திய மொழிகளில் ரசிகர்களிடையே அதிக வரவேற்பைப் பெற்று வரும் நாயகனாக வலம் வருபவர் நடிகர் யாஷ். இவரது நடிப்பில் பிரமாண்டமாக உருவாகி உள்ள டாக்ஸிக் படத்தின் டிக்கெட் முன்பதிவை படக்குழு தொடங்கி உள்ளது.

டிக்கெட் முன்பதிவை தொடங்கிய டாக்ஸிக் படக்குழு – வைரலாகும் பதிவு!
டாக்ஸிக்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 22 Aug 2026 20:10 PM IST

கன்னட சினிமாவில் நடிகராக அறிமுகம் ஆகி தற்போது பான் இந்திய மொழிகளில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் யாஷ். இவரது நடிப்பில் தொடர்ந்து கன்னட மொழியில் படங்கள் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இவரது நடிப்பில் கன்னட மொழியில் முன்னதாக திரையரங்குகளில் வெளியான கேஜிஎஃப் மற்றும் கேஜிஎஃப் 2 படங்கள் விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. அதன்படி நடிகர் யாஷ் நடிப்பில் வெளியான கேஜிஎஃப் படங்கள் தான் கன்னட சினிமாவில் அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையை படைத்து இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தப் படங்களுக்குப் பிறகே கன்னட சினிமா உலக அளவில் உள்ள சினிமா ரசிகர்களிடையே பரிச்சயமானது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மாபெரும் வெற்றிப் படங்களை கொடுத்த நடிகர் யாஷ் நடிப்பில் தற்போது அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் டாக்ஸிக். இயக்குநர் கீது மோகந்தாஸ் இந்தப் படத்தை இயக்கி உள்ள நிலையில் நடிகர் யாஷ் திரைக்கதையை எழுதி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் பான் இந்திய மொழிகளில் பிரபல நடிகைகளாக உள்ள நடிகைகள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

டிக்கெட் முன்பதிவை தொடங்கிய டாக்ஸிக் படக்குழு:

இந்தப் படம் வருகின்ற 26-ம் தேதி ஆகஸ்ட் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. மேலும் இந்த டாக்ஸிக் படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தது. இந்த நிலையில் படத்தின் வெளியீட்டிற்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் படக்குழு தற்போது டிக்கெட் முன்பதிவை தொடங்கியதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பு ரசிகர்களிடையே தற்போது மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read… Arjun Das: விஜய் சாருக்கு அரசியலில் இன்ட்ரெஸ்ட் இருப்பதே எனக்கு தெரியாது – அர்ஜுன் தாஸ்!

டாக்ஸிக் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… விஸ்வநாத் & சன்ஸ் படத்தின் க்ளைமேக்ஸ் அப்படி இருக்க இதுதான் காரணம் – இயக்குநர் வெங்கி அட்லூரி

Follow Us