Jason Sanjay: அப்படியென்றால் நிச்சயம் நடிப்பேன்.. ஆனால் – ஜேசன் சஞ்சய் ஓபன் டாக்!
Jason Sanjay Reveals Future Acting Plans: இளம் இயக்குநராக தமிழ் மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் புகழ்பெற்றவர் ஜேசன் சஞ்சய். முதலமைச்சார் விஜய்யின் மகனான இவர், சிக்மா என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். அந்த வகையில், இப்படத்தின் வெற்றிக்கு பின் நடிக்க ஆர்வம் உள்ளதாகவும், எப்படிப்பட்ட படங்களில் நடிக்கவிரும்புகிறார் என்பது குறித்து பேசியுள்ளார்.
தமிழக முதலமைச்சர் விஜய்யின் (CM Vijay) மூத்த மகன்தான் ஜேசன் சஞ்சய் (Jason Sanjay). தற்போது முதல்வர் விஜய் முழுமையாக சினிமாவிலிருந்து விலகி, அரசியலில் நுழைந்துவிட்டார். அந்த விதத்தில், அவரின் மகன் ஜேசன் சஞ்சய் தற்போது சினிமாவில் இயக்குநராக நுழைந்துள்ளார். இவரின் இயக்கத்தில் முதல் திரைப்படமாக உருவாகியுள்ளதுதான் சிக்மா (Sigma). இதை ஜேசன் சஞ்சய் இயக்க, லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் கீழ் சுபாஸ்கரன் தயாரித்துள்ளார்.மேலும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் தமன் எஸ் இசையமைத்துள்ள நிலையில், இவரின் இசையில் இதுவரை இரு பாடல்கள் வெளியாகியுள்ளது. இந்த சிக்மா படத்தில் நடிகராக சந்தீப் கிஷன் (Sundeep Kishan) நடிக்க, அவருக்கு ஜோடியாக ஃபரியா அப்துல்லா நடித்துள்ளார்.
இப்படமானது தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழி படமாக உருவாகியுள்ள நிலையில், விரைவில் வெளியாகிறது. சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய ஜேசன் சஞ்சய், நடிப்பின் மீது தனக்கு ஆர்வம் இருப்பதாகவும், எப்படிப்பட்ட படங்களில் நடிக்க விருப்பம் என தெரிவித்துள்ளார். அது குறித்து விவரமாக பார்க்கலாம்.




இதையும் படிங்க: நயன்தாராவின் அந்த படத்தின் டிக்கெட்டை அடிச்சி புடிச்சி வாங்கி பார்த்தேன் – கவின் ஓபன் டாக்!
எப்படிப்பட்ட படங்களில் நடிக்க ஆர்வம் என பேசிய ஜேசன் சஞ்சய்:
அந்த பேட்டியில் பேசிய ஜேசன் சஞ்சய், அதில் “சிக்மா படம் வெளியாகும் வரை, எனது கவனம் முழுவதும் அதில் இருக்க வேண்டும், நான் திசை மாறக்கூடாது. சிக்மா எனக்கு ஒரு பெரிய வாய்ப்பு. சிக்மா வெளியான பிறகு, சுவாரஸ்யமான ஏதாவது வந்தால், நான் நிச்சயமாக நடிப்பேன்.
இதையும் படிங்க: கல்யாண விருந்து.. இளையராஜா இசையில் வெளியானது டோரதி பட ஃபர்ஸ்ட் சிங்கிள்!
நான் நடிக்கத் தொடங்கினால், நானாக இருப்பதற்காக எனது ஆரம்பப் படங்களை ரொமான்டிக் காமெடி (Rom-Com) வகைப் படங்களில் செய்வேன். எனக்கு அறிவியல் புனைகதை (Sci-fi) வகை பிடிக்கும், அதனால் பின்னர் அதையும் முயற்சிப்பேன்” என அந்த நேர்காணலில் அவர் வெளிப்படையாக பேசியுள்ளார்.
சிக்மா திரைப்படம் குறித்து ஜேசன் சஞ்சய் வெளியிட்ட எக்ஸ் பதிவு:
Mark the date for the heist on October 2. 💰 #SIGMA is all set to light up the screens. 🔥 @official_jsj @LycaProductions #Subaskaran @gkmtamilkumaran @sundeepkishan @MusicThaman @fariaabdullah2 #RajuSundaram #SampathRaj @shivpanditt @follow_anbu @yogjapee @MagaAnan… pic.twitter.com/kGcmWQh07Y
— Jason Sanjay Official (@official_jsj) August 18, 2026
ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் உருவாகியிருக்கும் சிக்மா படம் 2026ம் ஆண்டு ஜூலை மதத்திலே வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஜன நாயகன் பட வெளியீட்டின் காரணமாக ரிலீஸாகவில்லை. அந்த வகையில் வரும் 2026ம் ஆண்டு அக்டோபர் 2ம் தேதியில் இப்படம் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. விரைவில் இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் சென்சார் தொடர்பான அப்டேட்டுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.