AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ஓணம் பண்டிகை! சென்னையில் விமான கட்டணம் பன்மடங்கு உயர்வு – பயணிகள் அதிர்ச்சி

Onam Travel Rush : ஓணம் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாட்டில் இருந்து கேரளாவுக்கு செல்ல பயணிகள் திட்டமிட்டு வருகின்றனர். இந்த நிலையில் சென்னையில் இருந்து கேரள நகரங்களுக்கான விமான கட்டணம் வழக்கத்தை விட பன்மடங்கு உயர்ந்துள்ளது. இது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஓணம் பண்டிகை! சென்னையில் விமான கட்டணம் பன்மடங்கு உயர்வு – பயணிகள் அதிர்ச்சி
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 22 Aug 2026 22:20 PM IST

சென்னை, ஆகஸ்ட் 22 : தமிழ்நாட்டில் சென்னை, கோவை போன்ற நகரங்களில் ஏராளமான கேரளாவை சேர்ந்த மக்கள் படிப்பிற்காகவும், வேலைக்காகவும் தங்கியிருக்கின்றனர். தமிழ்நாடடில் தீபாவளி, பொங்கலைப் போல கேரளத்தில் ஓணம் பண்டிகை வெகு சிறப்பாககொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த 2026 ஓணம்பண்டிகை வருகிற ஆகஸ்ட் 26, 2026 அன்று கொண்டாடப்படுகிறது. இதனையடுத்து தமிழ்நாட்டில் வசிக்கும் கேரளத்தை சேர்ந்தவர்கள் ஊருக்கு போக திட்டமிட்டு வருகின்றனர். இந்த நிலையில் கேரள நகரங்களுக்கு செல்ல விமான கட்டணங்கள் பல மடங்கு உயர்ந்துள்ளது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியள்ளது.

தமிழ்நாட்டில் வசிக்கும் கேரளாவை சேர்ந்தவர்கள் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்களுடன் ஓணம் பண்டிகையைக் கொண்டாட கேரளா செல்ல திட்டமிட்டு வருகின்றனர். குறிப்பாக வார இறுதி விடுமுறையை சேர்த்து பலர் ஆகஸ்ட் 22, 2026 இன்றே கேரள செல்ல திட்டமிட்டுள்ளனர். இதற்காக தமிழ்நாட்டில் இருந்து சிறப்பு ரயில்கள் மற்றும் பேருந்துகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இருப்பினும் சென்னையில் இருந்து கேரளா செல்ல பல மணி நேர பயணம் என்பதால் பலரும் பேருந்து, ரயில்களை விட விமானத்தில் செல்ல திட்டமிடுகிறார்கள். இந்த நிலையில் விமான கட்டணம் பன்மடங்கு உயர்ந்துள்ளதாக தகவல்கள்த தெரிவிக்கின்றன.

இதையும் படிக்க : மகனால் தாய்க்கு நேர்ந்த சோகம்.. பிணத்தை புகைப்படம் எடுத்து அண்ணனுக்கு அனுப்பிய பயங்கரம்.. திருச்செந்தூரில் கொடூர சம்பவம்!

அதிக பயணிகள் தேவை காரணமாக விமான நிலையங்களில் இருந்து மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. சென்னையில் இருந்து கொச்சி, திருவனந்தபுரம், கோழிக்கோடு,கண்ணூர் போன்ற கேரள நகரங்களுக்கு செல்ல விமான கட்டணம் பன்மடங்கு உயர்ந்துள்ளது. வழக்கமாக சென்னையில் இருந்து கொச்சிக்கு விமான கட்டணம் ரூ.5,336 என கூறப்படும் நிலையில் ஆகஸ்ட் 22, 2026 இன்று விமான கட்டணம் ரூ.14, 843 வரை உயர்ந்துள்ளது. அதே போல சென்னையில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் விமானங்களுக்கான கட்டணம் வழக்கமா ரூ.5000 என்று இருக்கும் நிலையில் ஆகஸ்ட் 22, 2226 இன்று 14, 700 ஆக உயர்ந்துள்ளது.

இதையும் படிக்க : நெல்லையில் பரபரப்பு.. பெண் அளித்த ஒற்றை புகார்.. தூக்கப்பட்ட இன்ஸ்பெக்டர்.. அதிரடி காட்டிய DIG!

மேலும் சென்னையில் இருந்து கோழிக்கோடுக்கு வழக்கமாக விமான கட்டணம் ரூ.6000 என்ற அளவில் இருப்பதாக கூறப்படும் நிலையில் கிட்டத்தட்ட ரூ.11,000 அதிகரித்து ரூ.17,678 ஆக அதிகரித்துள்ளது. அதே போல சென்னையில் இருந்து கண்ணூருக்கு வழக்கமாக விமான கட்டணம் ரூ. 5000 என்ற அளவில் இருப்பதாக கூறப்படும் நிலையில், ஆகஸ்ட் 22, 2026 இன்று கட்டணம் ரூ.12,270 என்ற உயர்த்தப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மேலும் சென்னையில் இருந்து கொச்சிக்கு விமான கட்டணம் ரூ.21, 694 என்று அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. விமான கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Follow Us