AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

FIH World Cup 2026: நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் தோல்வி.. இந்தியாவின் அரையிறுதி பயணம் முடிந்துவிட்டதா?

IND vs NER Hockey Game: நெதர்லாந்து வீரர்கள் ஆட்டத்தின் வேகத்தை அதிகரித்து, இன்னும் ஆக்ரோஷமாகத் தொடங்கினர். நெதர்லாந்து வீரர்கள் இந்தியாவின் 'டி-வட்டத்திற்குள்' நுழைந்து பெனால்டி கார்னர் பெற முயன்றனர். இருப்பினும், இந்திய கோல்கீப்பரும் டிபெண்டர்களும் மிகுந்த பொறுமையைக் கடைப்பிடித்து, அவர்களின் அனைத்து முயற்சிகளையும் முறியடித்தனர்.

FIH World Cup 2026: நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் தோல்வி.. இந்தியாவின் அரையிறுதி பயணம் முடிந்துவிட்டதா?
இந்திய ஹாக்கி அணிImage Source: Hockey India/ Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 22 Aug 2026 22:00 PM IST

2026 ஹாக்கி உலகக் கோப்பையின் (FIH World Cup 2026) அரையிறுதிப் போட்டியில் இடத்தைப் பிடிப்பதற்காக இன்று அதாவது 2026 ஆகஸ்ட் 22ம் தேதி இந்தியாவுக்கும் நெதர்லாந்துக்கும் இடையே ஒரு முக்கியமான போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்று இந்திய அணி (Indian Hockey Team) விரும்பியது. ஆனால் அது நடக்கவில்லை. இந்தியா, நெதர்லாந்திடம் 1-3 என்ற கோல் கணக்கில் தோற்றது. நெதர்லாந்தும் அரையிறுதிக்கு முன்னேறியது.நெதர்லாந்து முதல் கால்பகுதியில் இருந்தே தங்கள் ஆடுகளத்தில் பெரும்பாலான பந்தைக் கைவசம் வைத்துக்கொண்டு, ஆக்ரோஷமான தாக்குதல்களை நடத்தினர். ஆனால், இந்த முறை இந்தியா சிறப்பாகத் தடுத்து, கோல் எதுவும் அடிக்கப்படாமல் தடுத்தது. இதன் காரணமாக, 15 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் கோல் கணக்கு 0-0 என்றே இருந்தது.

ALSO READ: பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா.. ஹாக்கி உலகக் கோப்பையில் கலக்கிய ஹர்மன்பீரித் படை!

இரண்டாவது கால்பகுதியில், நெதர்லாந்து வீரர்கள் ஆட்டத்தின் வேகத்தை அதிகரித்து, இன்னும் ஆக்ரோஷமாகத் தொடங்கினர். நெதர்லாந்து வீரர்கள் இந்தியாவின் ‘டி-வட்டத்திற்குள்’ நுழைந்து பெனால்டி கார்னர் பெற முயன்றனர். இருப்பினும், இந்திய கோல்கீப்பரும் டிபெண்டர்களும் மிகுந்த பொறுமையைக் கடைப்பிடித்து, அவர்களின் அனைத்து முயற்சிகளையும் முறியடித்தனர். எனவே, இந்தக் கால்பகுதியிலும் கோல் கணக்கு 0-0 என்றே இருந்தது.

இரண்டாம் பாதியில் பின்தங்கிய இந்திய அணி:

மூன்றாவது கால்பகுதியில், நெதர்லாந்து அணி இறுதியாக ஒரு கோல் அடித்தது. இதன் காரணமாக, இந்தப் போட்டியில் இந்திய அணி 0-1 என்ற கோல் கணக்கில் பின்தங்கியது. நெதர்லாந்து அணி தங்களது தாக்குதலின் வேகத்தை பெருமளவில் அதிகரித்து, வலுவான தாக்குதல்களை நடத்தியது. அதுமட்டுமின்றி, நெதர்லாந்து அணியானது இந்திய அணியின் டிபெண்டர்கள் மீது தொடர்ச்சியான அழுத்தத்தை கொடுக்கத் தொடங்கினர். ஆனால் இறுதியில், நெதர்லாந்தின் டுக்கோ டெல்கன்காம்ப் இந்திய அணியின் பாதுகாப்பு அரணை உடைத்து ஒரு ஃபீல்டு கோல் அடித்தார். ஒரு கோல் பின்தங்கிய பிறகு, இந்திய அணியும் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

4வது கால்பகுதியில் இந்திய அணி மீண்டு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதற்கு நேர்மாறாக, ஆட்டம் தொடங்கிய முதல் சில நிமிடங்களிலேயே நெதர்லாந்து ஒரு கோல் அடித்து, இந்தியாவை 0-2 என்ற கோல் கணக்கில் பின்தங்க வைத்தது. பின்னர், கடைசி சில நிமிடங்களில் இந்திய அணி மீண்டு வர முயற்சித்தது. ஹர்மன்பிரீத் சிங் ஒரு கோல் அடித்து, கோல் கணக்கை 1-2 என மாற்றினார். ஆனால், நெதர்லாந்து மீண்டும் தாக்குதல் நடத்தி, கோல் கணக்கை 1-3 என மாற்றியது.

ALSO READ: அரையிறுதிக்கு தகுதி பெறுமா இந்திய ஹாக்கி அணி? சமன்பாடு என்ன..?

இந்தியாவின் சவால் முடிந்துவிட்டதா?

2026 ஹாக்கி உலகக் கோப்பையில் நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் தோற்ற பிறகு, இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறுவது மிகவும் கடினமாகிவிட்டது. சவால் ஏறக்குறைய முடிந்துவிட்டது என்று சொல்வது மிகையாகாது. இப்போது அவர்கள் அர்ஜென்டினாவுக்கு எதிரான போட்டியில் பெரிய வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். ஆனால் இது சாத்தியமில்லை. ஏனென்றால், கிராஸ்ஓவர் சுற்றுக்கு வருவதற்கு முன்பே, இந்தியா 2 கோல்கள் பின்தங்கியிருந்தது. இந்தப் போட்டியில், நெதர்லாந்துக்கு எதிரான தோல்வி இந்த நிலையை மேலும் மோசமாக்கியுள்ளது. இந்திய அணி மேலும் இரண்டு கோல்கள் பின்தங்கியுள்ளனர். எனவே, இந்திய அணி 4 கோல்கள் பின்தங்கியுள்ளனர்.

Follow Us