AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

மீண்டும் வரும் சென்னையின் ராயல் கெத்து.. டபுள் டெக்கர் பஸ் இந்த ரூட்லதான் ஓடப்போகுதா? MTC வெளியிட்ட மாஸ் அப்டேட்!

Chennai Double Decker Bus Route : சென்னையில் டபுள் டெக்கர் பேருந்துகள் இயக்கப்படுவதற்கான வழித்தடங்கள் தேர்வு செய்யும் பணிகளில் மாநகர போக்குவரத்துக் கழக அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். உத்தேசமாக தேர்வு செய்யப்பட்ட வழித்தடம் என்ன என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

மீண்டும் வரும் சென்னையின் ராயல் கெத்து.. டபுள் டெக்கர் பஸ் இந்த ரூட்லதான் ஓடப்போகுதா? MTC வெளியிட்ட மாஸ் அப்டேட்!
டபுள் டக்கர் பேருந்து
Gowtham Kannan s
Gowtham Kannan S | Updated On: 23 Aug 2026 11:37 AM IST

சென்னையில் கடந்த 1970- ஆம் ஆண்டுகளில் சிவப்பு நிற டபுள் டெக்கர் பேருந்துகள் சென்னையின் அடையாளமாக இருந்து வந்தது. சில நிர்வாக காரணங்களால் டபுள் டெக்கர் பேருந்து கடந்த 2008- ஆம் ஆண்டு நிறுத்தப்பட்டது. இந்த நிலையில், தற்போதைய இளம் தலைமுறைகள் மற்றும் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் மீண்டும் டபுள் டெக்கர் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இதற்காக வழித்தடங்கள் தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக சென்னை மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது: சென்னையில் டபுள் டெக்கர் பேருந்து சேவையை மீண்டும் தொடங்குவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில், குளோபல், அசோக் லேலாண்ட் நிறுவனத்தின் துணை நிறுவனமான ஓ.ஹெச். எம். ஈகிள் கன்ஸ்ட்ரக்சன் அண்ட் கோ ஆகிய நிறுவனங்கள் டெண்டரில் பங்கேற்று உள்ளது.

மேலும் படிக்க: சென்னை மக்களுக்கு குட் நியூஸ்.. வண்டலூர் பட்டாம்பூச்சி பூங்கா மீண்டும் திறப்பு… பல்வேறு அம்சங்கள் புதுப்பிப்பு!

உத்தேசமாக தேர்வு செய்யப்பட்ட வழித்தடங்கள்

இதில், ஒப்பந்ததாரர் தேர்வு செய்யப்பட்டு சுமார் 20 டபுள் டெக்கர் அரசு பேருந்துகள் அடுத்த 3 மாதங்களில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட உள்ளது. தற்போது, இந்த பேருந்துகள் இயக்கப்படுவதற்கான வழித்தடங்கள் தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில்,

  • கடற்கரை முதல் கோவளம் வரை.
  • பிராட்வே முதல் டி. எம். எஸ் வரை (அல்லது)
  • கிண்டி முதல் பூந்தமல்லி நெடுஞ்சாலை வரை.
  • கோயம்பேடு முதல் அண்ணா சதுக்கம் வரை.
  • கலங்கரை விளக்கம் முதல் சுங்கச்சாவடி வழியாக 2 வழித்தடங்கள்.

அதிகாரப்பூர்வ வழத்தடங்கள் விரைவில் அறிவிப்பு

ஆகிய வழித்தடங்கள் உத்தேசமாக தேர்வு செய்யப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இந்த பேருந்து வழித்தடத்துக்கான இறுதிக்கட்ட ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு உறுதி செய்த பின்னர் மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என்று தெரிவித்தார். சென்னையில் இளைஞர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பை பெற்ற டபுள் டெக்கர் அரசு பேருந்துகள் தாம்பரம் பேருந்து நிலையத்தில் இருந்து சென்னை உயர்நீதிமன்றம் வரை இயக்கப்பட்டு வந்தது. மிகவும் வரவேற்பை பெற்ற இந்த பேருந்தில் பயணிப்பதற்காக தினந்தோறும் ஏராளமான பயணிகள் படையெடுக்க தொடங்கினர்.

18 ஆண்டுகளுக்கு பிறகு டபுள் டெக்கர் பேருந்து சேவை

அதன்படி, பொதுமக்களின் வரவேற்பு அதிக அளவில் இருந்ததாலும், அந்த பேருந்துகளுக்கான பராமரிப்பு செலவு அதிகரித்து காணப்பட்டதாலும் கடந்த 2008- ஆம் ஆண்டு டபுள் டெக்கர் பேருந்து சேவைகள் நிறுத்தப்பட்டிருந்தன. தற்போது, சுமார் 18 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சென்னையில் டபுள் டெக்கர் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இந்த பேருந்துகள் பயன்பாட்டுக்கு வரும் பட்சத்தில், மீண்டும் சுற்றுலா பயணிகள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெறும் என்பதில் ஐயமில்லை.

மேலும் படிக்க: பூனையை கண்டுபிடித்தால் ரூ.50 ஆயிரம் சன்மானம்.. ஈரோடு உரிமையாளரின் அட்ராசிட்டி பாசம்.. சோஷியல் மீடியாவில் வைரல் விளம்பரம்!

Follow Us