AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சென்னையில் வீட்டில் தூங்கிய சிறுமி.. 2 முறை கடித்த நல்ல பாம்பு.. அடுத்து நடந்த விபரீதம்!

Chennai Girl Dies Snakebite : சென்னை மாவட்டத்தில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த 16 வயது சிறுமியை நல்ல பாம்பு கடித்ததில் அ வர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக எண்ணூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர் .

சென்னையில் வீட்டில் தூங்கிய சிறுமி.. 2 முறை கடித்த நல்ல பாம்பு.. அடுத்து நடந்த விபரீதம்!
கோப்புப்படம்.
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 23 Aug 2026 10:05 AM IST

சென்னை மாவட்டம், எண்ணூர் அருகே உள்ள எர்ணாவூர் ஜெய்ஹிந்த் நகர் பகுதி பசும்பொன் தெருவை சேர்ந்தவர் பாபு. இவன், கட்டட தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு யாஷினி ( 16 வயது) என்ற மகள் இருந்தார். இவர், திருவொற்றியூர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் 12- ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், பாபு தான் வசித்து வந்த வீட்டை இடித்து அகற்றிவிட்டு அதே இடத்தில் புதிதாக வீடு கட்டி வருகிறார். இதன் காரணமாக அருகில் உள்ள ஓட்டு வீட்டில் பாபு தனது மனைவி மற்றும் மகளுடன் வசித்து வருகிறார். இந்த நிலையில், சம்பவத்தன்று இரவு சிறுமி யாஷினி தரையில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது, திடீரென வீட்டுக்குள் புகுந்த நல்ல பாம்பு ஒன்று யாஷினியின் வலது கையில் அடுத்தடுத்து இருமுறை கடித்துள்ளது.

தூங்கிக்கொண்டிருந்த சிறுமியை கடித்த நல்ல பாம்பு

இதனால், வலியால் தூக்கத்தில் இருந்து எழுந்த சிறுமி அலறல் சத்தம் போட்டார். உடனே, அவரது பெற்றோர் எழுந்து பார்த்தபோது, சிறுமியின் அருகே நல்ல பாம்பு ஒன்று சுருண்டு படுத்து கிடந்தது. இதை தொடர்ந்து, சிறுமியை உடனடியாக மீட்டு திருவொற்றியூர் எல்லையம்மன் கோவில் அருகே உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, சிறுமையை பரிசோதித்த மருத்துவர்கள் முதலுதவி அளித்துவிட்டு, தீவிர சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு அறிவுறுத்தினர்.

மேலும் படிக்க: அதிவேகமாக வந்த லாரி மோதல்.. சாலையில் இழுத்து செல்லப்பட்ட கார்.. அடுத்தடுத்து பலியான 2 இளைஞர்கள்.. கிருஷ்ணகிரியில் சோகம்!

தீவிர சிகிச்சையில் இருந்த சிறும் உயிரிழப்பு

அதன் அடிப்படையில், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிறுமி யாஷினி அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த சிறுமி யாஷினி திடீரென சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதை தொடர்ந்து, அவரது சடலம் பிரேத பரிசோதனை மேற்கொள்வதற்காக கொண்டு செல்லப்பட்டது. இந்த சம்பவம் குறித்து சிறுமியின் தந்தை பாபு எண்ணூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நல்ல பாம்பை லாவகமாக பிடித்த தீயணைப்பு வீரர்கள்

மேலும், சிறுமி வசித்து வந்த வீட்டின் அருகே புதர் மண்டி காணப்படுகிறது. இதனால், அந்த புதர் பகுதியில் இருந்து வந்த நல்ல பாம்பு கடித்ததில் தான் சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது குறித்த புகாரின் பேரில், அந்த பகுதியில் பதுங்கி இருந்த நல்ல பாம்பை தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் வீரர்கள் லாபகமாக பிடித்து சென்று காட்டில் விட்டனர். பாம்பு கடித்து சிறுமி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க: சென்னையில் பெண் காக்கிக்கு ஆண் காக்கி பாலியல் தொல்லை.. கமிஷனரிடம் பரபரப்பு புகார்.. விசாரணையில் இறங்கிய விசாகா கமிட்டி!

Follow Us