இன்று 10 மாவட்டங்களில் கொட்டப்போகும் மழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
Weather Update Today | தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குரிச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்கள் இடம்பெற்றுள்ளன.
சென்னை, ஆகஸ்ட் 23 : சென்னை (Chennai), செங்கல்பட்டு (Chengalpattu) உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று (ஆகஸ்ட் 23, 2026) இடி, மின்னல் உடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அவ்வப்போது லேசானது முதல் மிதமான மழை பெய்து வரும் நிலையில், வானிலை ஆய்வு மையம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த நிலையில், இன்றைய வானிலை நிலவரம் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
பலவீனமான காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவி வருகிறது
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, தமிழக கடலோர பகுதிகள், கீழ்மட்ட வளி மண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்த தாழ்வு பாதை நிலவி வருகிறது. இதன் காரணமாக, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குரிச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் இன்று இடி, மின்னல் உடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.