AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

விமானத்தை அருகில் பார்க்க நினைத்த இளைஞர்களுக்கு நடந்த சோகம்.. சாலை விபத்தில் சம்பவ இடத்திலேயே பலி!

Two Young Men Killed In Road Accident | இருசக்கர வாகனத்தில் சென்றுக்கொண்டு இருந்த இளைஞர்கள், விமானத்தை அருகில் பார்க்க நினைத்த நிலையில், கட்டுப்பாட்டை இழந்த விமானம் சுற்றுசுவர் மீது மோதி விபத்துக்குள்ளானதால் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர்.

விமானத்தை அருகில் பார்க்க நினைத்த இளைஞர்களுக்கு நடந்த சோகம்.. சாலை விபத்தில் சம்பவ இடத்திலேயே பலி!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 23 Aug 2026 07:40 AM IST

மதுரை, ஆகஸ்ட் 23 : மதுரையில் (Madurai), விமானத்தை அருகில் பார்க்க ஆசைப்பட்ட இளைஞர்கள் இரண்டு பேர் இருசக்கர வாகனத்தில் விபத்தில் சிக்கி பலியான சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விமான நிலையம் ஓட்டி இருகசக்கர வாகனத்தில் சென்றுக்கொண்டு இருந்த அவர்கள், விமானம் ஓடுபாதையில் வருகிறதா என் எட்டிப்பார்த்தபோது இந்த விபத்து நடைபெற்றுள்ளது. இந்த நிலையில், விமானத்தை பார்க்கும் ஆசையில் இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

விமானத்தை பார்க்கும் ஆசையில் உயிரை பலி கொடுத்த இளைஞர்கள்

விருதுநகர் மாவட்டம், பரளச்சி பகுதியை சேர்ந்தவர் பாண்டிதுரை. இவருக்கு வயது 22. திருச்சி சேவைக்காரன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முனீஸ்வரன், இவருக்கு வயது 24. இவரும் நண்பர்கள். இவர்கள் இருவரும் இணைந்து கட்டிட பணியாளர்களாக வேலை செய்து வந்துள்ளனர். மதுரை மாவட்டம், திருப்பாலை பகுதியில் தங்கி வேலை செய்து வந்த இருவரும், ஊர் திருவிழாவுக்காக இருசக்கர வாகனத்தில் கிளம்பியுள்ளனர்.

இதையும் படிங்க : தூத்துக்குடி – நரசாபூர் இடையே சிறப்பு ரயில்கள் அறிவிப்பு – எந்தெந்த ரயில் நிலையங்களில் நிற்கும்?

எட்டி பார்த்தபோது ஏற்பட்ட விபத்து

இருசக்கர வாகனத்தில் சென்றுக்கொண்டு இருந்த இளைஞர்கள், மதுரை விமான நிலையம், சின்ன உடைப்பு தேசிய நெடுஞ்சாலையில் சென்றுக்கொண்டு இருந்தனர். அப்போது விமான ஓடுபாதையில் நின்றுக்கொண்டு இருந்த விமானம் புறப்படுகிறதா என்ற ஆர்வத்தில் இருவரும் எட்டி பார்த்துள்ளனர். இந்த நேரத்தில் தான், அவர்கள் சென்ற இருசக்கர வாகனம் நிலைத்தடுமாறி கட்டுப்பாட்டை இழந்து அந்த பகுதியில் சாலையோரம் இருந்த தடுப்பு சுவர் மீது வேகமாக மோதி கடும் விபத்துக்குள்ளானது.

இதையும் படிங்க : சிறுமியை சீரழித்து கொன்ற வாலிபர்.. சாகும் வரை சிறை தண்டனை விதித்த தூத்துக்குடி நீதிமன்றம்!

இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தனர். இதன் காரணமாக இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சென்ற போலீசார், இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Follow Us