யாழ்ப்பாணத்தில் பெரும் அசம்பாவிதம்… பிரான்பற்று முருகன் கோயில் பக்தர்களுக்கு திடீர் கண் பாதிப்பு.. லேசர் லைட்டால் வந்த வினை!
Sri Lanka Devotees Suffered Eye Injuries : இலங்கை யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள முருகன் கோயிலில் நடைபெற்ற விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு லேசர் லைட்டால் கண் பாதிப்பு ஏற்பட்டது. அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் .
இலங்கை, யாழ்ப்பாணத்தில் பிரசித்தி பெற்ற பண்டத்தரிப்பு பிரான்பற்று முருகன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் நேற்று ஆகஸ்ட் 22- ஆம் தேதி ( சனிக்கிழமை ) இரவு விழா நடைபெற்றது. அப்போது, ஏராளமான பக்தர்கள் கோவில் வளாகத்தில் கூடி இருந்தனர். அன்று இரவு நிகழ்ச்சிகளின் போது ஏராளமான வானவேடிக்கைகள் மற்றும் அதிக சக்தி கொண்ட லேசர் ஒளிக்கீற்றுகள் பயன்படுத்தப்பட்டன. இவை பக்தர்களில் கண்களில் பட்ட நிலையில் பக்தர்களின் கண்களில் பாதிப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக ஏராளமான பக்தர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அதன்படி, சுமார் 385 பக்தர்கள் கண் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் இலங்கையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
லேசர் லைட்டுகள் பயன்படுத்திய நபர் கைது
இது தொடர்பாக, கோவில் நிகழ்ச்சியில் பங்கேற்ற பக்தர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், பக்தர்கள் யாருக்கேனும் கண் எரிச்சல், கண்களில் சிறு பாதிப்பு ஏதேனும் தென்பட்டால் உடனடியாக அருகில் உள்ள மருத்துவரை அணுக வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் எல்லைக்குட்பட்ட போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில், கோவில் நிகழ்ச்சியின் போது அதீத லேசர் ஒலிக்கீற்றுகளை பயன்படுத்தியதாக சிலர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: 21 இந்தியர்கள் இருந்த கப்பலைச் சுற்றி வளைத்து ஈரான் தாக்குதல்.. ஹார்முஸ் நீரிணையில் நடுக்கடலில் நடந்த அதிர்ச்சி.. பரபரப்பு வீடியோ!!




சீன தயாரிப்பு விளக்குகள் பறிமுதல்- சோதனை
மேலும், இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. கோவிலில் பயன்படுத்தப்பட்ட சீன நாட்டு தயாரிப்பு விளக்குகள் பலவற்றை போலீசார் பறிமுதல் செய்து தொழில்நுட்ப பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். அவற்றின் மின்சார விவரக் குறிப்புகள், ஒளிச்செறிவு உள்ளிட்டவை தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை கண் மருத்துவர்கள் கூறுகையில், லேசர் ஒளிக்கீற்றுகளால் பாதிக்கப்பட்ட 58 ஆண்கள், 44 பெண்கள் மற்றும் 55 குழந்தைகள் உட்பட 157 பேருக்கு கண்களில் புறவுதான் கதிர்களால் காயம் ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளார்.
பக்தர்களின் கண்களில் ஏற்பட்ட பாதிப்புகள்
தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பக்தர்களுக்கு கண்களில் கடுமையான வலி, எரிச்சல், நீர் வடிதல், கண்களை திறப்பதில் சிரமம் உள்ளிட்ட பாதிப்புகள் தெரிந்து வருகிறது இந்த அறிகுறிகள் அதிகப்படியான புற ஊதா கதிர்களின் வெளிப்பாட்டால் கண்ணின் மேற்பரப்பில் ஏற்படும் கடுமையான பாதிப்பான ஃபோட்டோகெராடிடிஸுடன் பாதிப்புடன் தொடர்புடையதாக இருப்பதாக கூறினார்.
மேலும் படிக்க: இலங்கையில் பேரதிர்ச்சி.. செம்மணியில் தோண்ட தோண்ட வந்த 582 மனித எலும்புக்கூடுகள்.. மரண ரகசியத்தின் பின்னணி என்ன!