AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

21 இந்தியர்கள் இருந்த கப்பலைச் சுற்றி வளைத்து ஈரான் தாக்குதல்.. ஹார்முஸ் நீரிணையில் நடுக்கடலில் நடந்த அதிர்ச்சி.. பரபரப்பு வீடியோ!!

Indian sailors attack video: ஹார்முஸ் நீரிணையில் 21 இந்திய மாலுமிகள் பயணித்த வணிகக் கப்பலை ஈரானின் IRGC படைகள் சுற்றி வளைத்து ஆர்பிஜி மூலம் தாக்குதல் நடத்திய திகிலூட்டும் வீடியோ வெளியானது. மோதல் மண்டலங்களில் பயணிக்கும் இந்திய மாலுமிகளுக்குத் தகுந்த கடற்படைப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என மாலுமிகள் நலச் சங்கம் அரசை வலியுறுத்தியுள்ளது.

21 இந்தியர்கள் இருந்த கப்பலைச் சுற்றி வளைத்து ஈரான் தாக்குதல்.. ஹார்முஸ் நீரிணையில் நடுக்கடலில் நடந்த அதிர்ச்சி.. பரபரப்பு வீடியோ!!
தாக்குதலுக்கு உள்ளான இந்திய கப்பல்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 21 Aug 2026 10:45 AM IST

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் தீவிரப் போர்ச் சூழலுக்கு இடையே, சர்வதேச கடல்சார் வர்த்தகப் பாதையான ஹார்முஸ் நீரிணையில் பயணிக்கும் வணிகக் கப்பல்களின் பாதுகாப்பு மிகப்பெரிய கேள்விக்குறியாக மாறியுள்ளது. குறிப்பாக, வணிகக் கப்பல்களில் பணியாற்றும் ஆயிரக்கணக்கான இந்திய மாலுமிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ள சூழலில், ஈரானிய ஆயுதப் படைகளால் இந்திய மாலுமிகள் நிறைந்த கப்பல் ஒன்று சுற்றி வளைக்கப்பட்டுத் தாக்குதலுக்கு உள்ளான திகிலூட்டும் பழைய வீடியோ காட்சி ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி சர்வதேச அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க: பழைய வீட்டை சீரமைக்கும்போது கிடைத்த புதையல்.. ரூ.98 கோடி மதிப்பு.. ஆச்சர்யத்தை ஏற்படுத்திய சம்பவம்!

இந்திய கப்பல் மீது நடந்த தாக்குதல்:

இந்தியக் கடற்படை மாலுமிகளின் நலனுக்காகச் செயல்படும் ‘ஃபார்வர்ட் சீமென் யூனியன் ஆஃப் இந்தியா’ (FSUI) அமைப்பு சமீபத்தில் இந்த வீடியோவைப் பகிர்ந்துள்ளது. ஏப்ரல் 22 அன்று நடந்த இச்சம்பவத்தின் போது, 21 இந்திய மாலுமிகள் உட்பட மொத்தம் 22 பணியாளர்களுடன் பயணித்த வணிகக் கப்பலை ஈரானின் ‘இஸ்லாமிய புரட்சிகர காவல் படை’ (IRGC) கடற்படைக்குச் சொந்தமான சிறிய வேகப் படகுகள் சுற்றி வளைத்தன. தொடர்ந்து, அந்தப் படகுகளில் இருந்து கப்பலை நோக்கித் ராக்கெட் மூலம் இயக்கப்படும் கையெறி குண்டுகள் வீசித் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், உயிருக்குப் பயந்து மாலுமிகள் பாதுகாப்பான இடங்களுக்கு ஓடி ஒளிந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூடுதல் பாதுகாப்பு கோரும் கடற்படை தொழிற்சங்கம்:

ஹார்முஸ் நீரிணை போன்ற ஆபத்தான மோதல் மண்டலங்களில் செல்லும் வர்த்தகக் கப்பல்களுக்கு வெறும் வழிசெலுத்தல் எச்சரிக்கைகளும் வழிகாட்டுதல்களும் மட்டும் போதாது என்று சுட்டிக்காட்டியுள்ள கடற்படை தொழிற்சங்கம், இந்திய மாலுமிகள் மற்றும் வணிகக் கப்பல்களின் பாதுகாப்பை உறுதி செய்யக் கூடுதல் கடற்படைப் பாதுகாப்பை வழங்க வேண்டும் என அரசை வலியுறுத்தியுள்ளது. ஏற்கனவே இப்பகுதியில் நடந்த பல்வேறு தாக்குதல்களில் இந்திய மாலுமிகள் உயிரிழந்த சம்பவங்களும் நிகழ்ந்துள்ளதால், மாலுமிகளின் குடும்பத்தினர் பெரும் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

இதையும் படிக்க: பாகிஸ்தான்–சவுதி–துருக்கி பாதுகாப்பு ஒப்பந்தம்.. ஈரான் கொடுத்த எச்சரிக்கை – உன்னிப்பாக கவனிக்கும் இந்தியா

இந்திய கப்பல்கள் மீது நிலவும் அச்சுறுத்தல்:

மத்திய கிழக்கில் அதிகரிக்கும் பதற்றத்திற்கு இடையே, ஹார்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் இந்தியக் கப்பல்கள் மீது தொடர்ந்து அச்சுறுத்தல் நிலவி வருவது சர்வதேச வர்த்தகத்திற்கும் ஆற்றல் வள விநியோகத்திற்கும் பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது. இந்த விவகாரத்தில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் ஈரானிய அதிகாரிகளிடம் தனது தீவிர கவலையைப் பதிவு செய்துள்ள நிலையில், மாலுமிகளின் பாதுகாப்பை முழுமையாக உறுதி செய்ய சர்வதேச அளவில் வலுவான நடவடிக்கைகள் தேவை என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

Follow Us