Bank Holiday : செப்டம்பர் மாதத்தில் மொத்தம் 8 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை.. லிஸ்ட் இதோ!
8 Days Bank Holiday Declared For September 2026 | வங்கிகளுக்கு ஒவ்வொரு நாளும் சில நாட்கள் விடுமுறை அளிக்கப்படும். அந்த வகையில், செப்டம்பர் மாதத்தில் மொத்தம் 8 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், எந்த எந்த நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்பது குறித்து பார்க்கலாம்.
ஒவ்வொரு மாதமும் வார விடுமுறை, அரசு விடுமுறை உள்ளிட்டவற்றின் காரணமாக சில நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும். அந்த வகையில், செப்டம்பர் மாதத்தில் மொத்தம் எத்தனை நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை (Bank Holiday) அளிக்கப்பட்டுள்ளது என்பது தொடர்பான பட்டியல் வெளியாகியுள்ளது. அதாவது, செப்டம்பர் மாதத்தில் மொத்தம் 8 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், எந்த எந்த நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்பது குறித்து பார்க்கலாம்.
செப்டம்பர் மாதத்தில் மொத்தம் 8 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை
- செப்டம்பர் 04, 2026 – கிருஷ்ண ஜெயந்தி என்பதால் அன்றைய தினம் தமிழகத்தில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
- செப்டம்பர் 06, 2026 – ஞாயிற்று கிழமை என்பதால் அன்றைய தினம் தமிழகத்தில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
- செப்டம்பர் 12 – மாதத்தின் இரணாடது சனிக்கிழமை என்பதால் அன்றைய தினம் தமிழகத்தில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
- செப்டம்பர் 13, 2026 – ஞாயிற்று கிழமை என்பதால் அன்றைய தினம் தமிழகத்தில் உள்ள அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
- செப்டம்பர் 15, 2026 – விநாயகர் சதுர்த்தி என்பதால் அன்றைய தினம் தமிழகத்தில் உள்ள அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
- செப்டம்பர் 20, 2026 – ஞாயிற்று கிழமை என்பதால் அன்றைய தினம் தமிழகத்தில் உள்ள அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
- செப்டம்பர் 26, 2026 – மாதத்தின் நான்காவது ஞாயிற்று கிழமை என்பதால் அன்றைய தினம் தமிழகத்தில் உள்ள அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
- செப்டம்பர் 27, 2026 – ஞாயிற்று கிழமை என்பதால் அன்றைய தினம் தமிழகத்தில் உள்ள அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : பழைய தங்கத்தை Exchange செய்தால் வரி செலுத்த வேண்டுமா?.. கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!
வங்கிகள் விடுமுறையின்போது என்ன செய்யலாம்?
இன்றளவும் பண பரிவர்த்தனை உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக பலரும் வங்கிகளை தான் பயன்படுத்துகின்றனர். இந்த நிலையில், வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும்போது வங்கிகளின் இதர சேவைகளாக ஏடிஎம் (ATM – Automated Teller Machine), நெட் பேங்கிங் (Net Banking), செயலிகள், யுபிஐ (UPI – Unified Payment Interface) உள்ளிட்டவற்றை பயன்படுத்தி பண பரிவர்த்தனை, கட்டணம் செலுத்துவது உள்ளிட்ட நிதி சார்ந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.