AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Gold Price : தங்கம் விலை திடீர் டிவிஸ்ட்.. 2 நாட்களாக தொடர் சரிவு.. காரணம் என்ன?

Gold Price Continuously Reducing For Second Day | ஆகஸ்ட் மாதத்தில் தங்கம் விலை தொடர் உயர்வை சந்தித்து ஒரு கிராம் ரூ.15,000-க்கு மேல் விற்பனையான நிலையில், ஆகஸ்ட் 25, 2026 முதல் தொடர் சரிவை சந்தித்து வருகிறது. அதன் காரணம் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

Vinalin Sweety
Vinalin Sweety | Published: 27 Aug 2026 12:10 PM IST
ஆகஸ்ட் மாதத்தில் சரசரவென உயர்ந்த தங்கம், ஒரு கிராம் ரூ.15,000-த்தை தாண்டி விற்பனை செய்யப்பட்டது. ஆனால், கடந்த இரண்டு நாட்களாக தங்கம் விலை சரிவை சந்தித்து வருகிறது. இந்த திடீர் விலை சரிவு நகை பிரியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், இந்த திடீர் விலை மாற்றத்திற்கான காரணம் குறித்து தெரிந்துக்கொள்வது அவசியமாக உள்ளது. 

1 / 5
ஆகஸ்ட் மாதத்தில் ஆகஸ்ட் 24, 2025 அன்று அதிகபட்சமாக 22 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.15,030-க்கும், ஒரு சவரன் ரூ.1,20,240-க்கும் விற்பனை செய்யப்பட்டது. ஆனால் ஆகஸ்ட் 25, 2026 மற்றும் இன்று (ஆகஸ்ட் 27, 2026) தங்கம் விலை சரிந்து ஒரு கிராம் ரூ.14,940-க்கு, ஒரு சவரன் ரூ.1,19,520-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

2 / 5
ஆகஸ்ட் மாதத்தில் தொடர் உயர்வை சந்தித்து வந்த தங்கம், இரண்டு நாட்களாக சரிவை சந்தித்தது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, தொடர் உயர்வை சந்தித்து வந்த தங்கம், திடீரென விலை சரிவை சந்திக்க காரணம் என்ன என்றும், தற்போதைய சூழலில் தங்கத்தில் முதலீடு செய்யலாமா என்றும் குழப்பம் நிலவி வருகிறது.

3 / 5
ஈரான் - ஓமன் நாடுகள் இணைந்து ஹோர்முஸ் நீரிணையை நிர்வாகம் செய்யவும், தற்காலிக வழித்தடத்தில் கப்பல்களை இயக்கவும் ஆலோசனை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக கடந்த 3 நாட்களாக கச்சா எண்ணெய் விலை உயர்வை சந்தித்துள்ளது தங்கத்தின் விலையில் எதிரொலித்து சரிவை சந்தித்துள்ளது.

4 / 5
அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ்-ன் தலைவர் கெவின் வார்ஷ் நாளை (ஆகஸ்ட் 28, 2026) முக்கிய நிகழ்ச்சியான ஜாக்சன் ஹோம் சிம்போசியம் நிகழ்வில் பேச உள்ளார். கெவின் வார்ஷ் பேச்சுக்கு பிறகு தான் தங்கம் விலை எத்தகைய மாற்றம் ஏற்படும் என்பதை கணிக்க முடியும் என கூறப்படுகிறது குறிப்பிடத்தக்கது. 

5 / 5
Follow Us