AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

அமைச்சர் வன்னி அரசு பேச்சுக்கு சோபா மாடல் என திமுக கிண்டல்.. பேரவையில் காரசாரமான சூழல்!

DMK Mocked Minister Vanni Arasu Speech : தமிழக சட்டப்பேரவையில் அமைச்சர் வன்னி அரசின் பேச்சுக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் எம்எல்ஏக்கள் சோபா மாடல்.. சோபா மாடல் என கேலி, கிண்டல் செய்தனர். இதனால், அவையில் காரசாரமான சூழல் நிலவியது.

அமைச்சர் வன்னி அரசு பேச்சுக்கு சோபா மாடல் என திமுக கிண்டல்.. பேரவையில் காரசாரமான சூழல்!
அமைச்சர் வன்னி அரசு
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 27 Aug 2026 15:13 PM IST

தமிழக சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரம் தொடங்கி நடைபெற்றது. இதில், சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு உரையாற்றினார். அப்போது, தலித் பிரதிநிதித்துவம் மற்றும் திராவிட கட்சிகளின் அணுகுமுறை தொடர்பாக கேள்வி எழுப்பினார். இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் முழக்கமிட்டனர். தொடர்ந்து, அமைச்சர் வன்னி அரசு பேசுகையில், தலித் சமுதாயத்தின் அரசியல் உரிமை மற்றும் ஆட்சியில் அதிகார பகிர்வு குறித்து மிக காரசாரமான கேள்விகளை முன் வைத்திருந்தார். இதில், தலித் சமுதாயத்தை சேர்ந்த தன்னை சட்டமன்றத்தில் சுதந்திரமாக பேசவிடாமல் தடுக்கின்றனர். திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் அதிமுக ஆகிய கட்சிகள் மீது கடுமையான விமர்சனங்கள் உள்ளன. விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்த போதிலும், திமுக தனது ஆட்சிக் காலத்தில் அதிகாரத்திலும், அமைச்சரவையிலும் பங்கு வழங்கவில்லை.

அமைச்சர் வன்னி அரசு கூறிய வார்த்தை

தலித் தலைவர்களை பொதுத் தொகுதிகளில் போட்டியிட வைப்பதை சுட்டி காட்டி பெருமை பேசுவது. அவர்களை சம உரிமையோடு பார்க்காமல் பரிதாபத்தின் அடிப்படையில் அணுகுவதையே எடுத்துக்காட்டுகிறது. விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு வெறும் வெறும் 2 சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டுமே இருக்கும் நிலையில், தமிழக வெற்றிக் கழக அரசு அவர்களுக்கு மதிப்பு அளித்து அமைச்சரவையில் இடம் வழங்கி சமூக நீதியை நிலை நாட்டி உள்ளது என்று வன்னி அரசு தெரிவித்தார்.

மேலும் படிக்க: முதல்வர் விஜய் புகைப்படம் வாங்கியதிலேயே ஊழலா? மதுரை உயர்நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு!

சோபா மாடல்.. சோபா மாடல்.. என திமுகவினர் கிண்டல்

இதற்கு, எதிர்க்கட்சியினர் கடும் ஆக்ரோஷம் அடைந்து, அமைச்சர் வன்னி அரசு பேசிக் கொண்டிருந்த போதே, சோபா மாடல்.. சோபா மாடல்.. என்று கேலி, கிண்டல் செய்து குரல் எழுப்பினர். இதனை தொடர்ந்து, அமைச்சர் வன்னி அரசின் பேச்சுக்கு திராவிட முன்னேற்ற கழக எம்எல்ஏக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், பலர் ஆவேசமாக எழுந்து ஒரே நேரத்தில் முழக்கங்களை எழுப்பினர். தொடர்ந்து, அமைச்சர் வன்னி அரசை பேச விடாமல் தடுத்ததுடன், அவையில் அமலில் ஈடுபட்டனர்.

சட்டப்பேரவையில் காரசாரமான சூழல்

இதன் காரணமாக சட்டமன்றத்தில் சில நிமிடங்கள் காரசாரமான சூழல் நிலவியது. அப்போது, பேரவை தலைவர் அனைவரையும் அமருமாறு கூறினார். இதைத் தொடர்ந்து, அனைவரும் அமைதி ஆகினர். தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியானதை தொடர்ந்து, தமிழக வெற்றிக் கழக அரசு பெரும்பான்மையே நிரூபித்தது. இதற்கு ஆதரவாக வாக்களித்த கட்சிகளின் தலைவர்களை முதல்வர் விஜய் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார். அப்போது, எதிர்க்கட்சிகளின் தலைவர்களுக்கு தவெக சார்பில் சோபா வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதை தான் எதிர்க்கட்சிகள் ஷோபா மாடல் என்று கேலி செய்தனர்.

மேலும் படிக்க: தமிழக அரசுப் பணிகளில் 20% இட ஒதுக்கீடு.. யாருக்கெல்லாம் தெரியுமா.. கவர்னர் காட்டிய பச்சைக் கொடி!

Follow Us