AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

சென்னை ஆழ்வார்பேட்டையில் நவீன கண் அறுவை சிகிச்சை தொழில்நுட்பம்.. தொடங்கி வைத்த முதல்வர் விஜய்..

கண்புரை, விழித்திரை பிரச்சினைகள், ஒளிவிலகல் குறைபாடுகள் உள்ளிட்ட பல்வேறு கண் பாதிப்புகளுக்கு நவீன முறையில் சிகிச்சை அளிக்க இந்தத் தொழில்நுட்பம் உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. லேசர் மற்றும் கணினி சார்ந்த நவீன கருவிகளின் உதவியுடன் குறைந்த அளவிலான காயத்துடனும், விரைவாக குணமடையும் வகையிலும் சிகிச்சை மேற்கொள்ளும் வகையில் இந்த புதிய தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளது.

சென்னை ஆழ்வார்பேட்டையில் நவீன கண் அறுவை சிகிச்சை தொழில்நுட்பம்.. தொடங்கி வைத்த முதல்வர் விஜய்..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 27 Aug 2026 12:06 PM IST

ஆகஸ்ட் 27, 2026: சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள பிரபல தனியார் கண் மருத்துவமனையில் அதிநவீன கண் அறுவை சிகிச்சை தொழில்நுட்பத்தின் அறிமுக விழா இன்று நடைபெற்றது. இதில் தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, நவீன கண் அறுவை சிகிச்சை முறையை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்தார். நவீன மருத்துவத் துறையில் நோய்களுக்கு ஏற்றவாறு பல்வேறு புதிய சிகிச்சை முறைகள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன.

அதி நவீன கண் அறுவை சிகிச்சை – தொடங்கி வைத்த முதல்வர் விஜய்:

குறிப்பாக, கண் தொடர்பான பிரச்சினைகளுக்கு விரைவாகவும், துல்லியமாகவும் சிகிச்சை அளிக்கும் வகையில் நவீன மருத்துவத் தொழில்நுட்பங்கள் தொடர்ந்து பயன்பாட்டுக்கு வருகின்றன. அந்த வகையில், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனையில் நவீன கண் அறுவை சிகிச்சை தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனை முதலமைச்சர் ஜோசப் விஜய் தொடங்கி வைத்தார்.

மேலும் படிக்க: நேபாளத்தை புரட்டிப்போட்ட வெள்ளப்பெருக்கு.. 133 இந்தியர்களின் நிலை என்ன?

முதலமைச்சர் விஜயின் வருகையை முன்னிட்டு மருத்துவமனை வளாகத்தில் ஏராளமான பொதுமக்கள் திரண்டிருந்தனர். அவர்களைப் பார்த்த முதலமைச்சர் கையை அசைத்தும், சைகை காட்டியும் வரவேற்றார்.

இந்த அறிமுக விழாவில் டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனையின் முன்னணி கண் மருத்துவ நிபுணர்கள், மூத்த நிர்வாகிகள், அரசு உயர் அதிகாரிகள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

சிகிச்சையின் சிறப்புகள் என்ன?

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களுக்கு இந்த நவீன சிகிச்சை முறை பெரும் பயனுள்ளதாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகத் தரம் வாய்ந்த கண் சிகிச்சைகளை குறைந்த நேரத்தில், அதிக துல்லியத்துடன் வழங்கும் நோக்கில் இந்த புதிய அறுவை சிகிச்சை தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: சென்னை முதல் குமரி வரை 8 வழிச்சாலை.. ரூ. 2 லட்சம் கோடி மதீப்பீட்டில் சாலை திட்டங்கள் – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

குறிப்பாக, கண்புரை, விழித்திரை பிரச்சினைகள், ஒளிவிலகல் குறைபாடுகள் உள்ளிட்ட பல்வேறு கண் பாதிப்புகளுக்கு நவீன முறையில் சிகிச்சை அளிக்க இந்தத் தொழில்நுட்பம் உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. லேசர் மற்றும் கணினி சார்ந்த நவீன கருவிகளின் உதவியுடன் குறைந்த அளவிலான காயத்துடனும், விரைவாக குணமடையும் வகையிலும் சிகிச்சை மேற்கொள்ளும் வகையில் இந்த புதிய தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளது.

Follow Us