AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

ஐ அம் கேம் படத்தில் நடிகர் துல்கர் சல்மான் இணைந்தது எப்படி? இயக்குநர் ஓபன் டாக்

Director Nahas Hidhayath | மலையாள சினிமாவில் பிரபல இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் நஹாஸ் ஹிதாயத். இவரது இயக்கத்தில் அடுத்ததாக ஐ அம் கேம் படம் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் அந்தப் படத்தில் நாயகன் துல்கர் சல்மான் இணைந்தது குறித்து பேசியுள்ளார்.

ஐ அம் கேம் படத்தில் நடிகர் துல்கர் சல்மான் இணைந்தது எப்படி? இயக்குநர் ஓபன் டாக்
நஹாஸ் ஹிதாயத் மற்றும் துல்கர் சல்மான்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 27 Aug 2026 11:38 AM IST

மலையாள சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் துல்கர் சல்மான். இவரது நடிப்பில் மலையாள சினிமாவில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. மேலும் நடிகர் துல்கர் சல்மான் மலையாள சினிமாவில் நாயகனாக அறிமுகம் ஆகி இருந்தாலும் அவர் தொடர்ந்து பான் இந்திய மொழிகளிலும் முக்கிய வேடத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து பான் இந்திய மொழிகளில் பிசியான நாயகனாக வலம் வரும் நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் அடுத்ததாக மலையாள சினிமாவில் வெலியாக உள்ள படம் ஐ அம் கேம். இந்தப் படத்தினை இயக்குநர் நஹாஸ் ஹிதாயத் எழுதி இயக்கி உள்ளார். மேலும் இந்தப் படத்தில் துல்கர் சல்மான் உடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர்.

அதன்படி இந்த ஐ அம் கேம் படத்தில் நடிகர் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிகை கயாடு லோஹர் நடித்து உள்ளார். இந்தப் படத்தின் போஸ்ட் புரடெக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வரும் நிலையில் ஐ அம் கேம் படம் வருகின்ற செப்டம்பர் மாதம் 03-ம் தேதி 2026-ம் ஆண்டு திரையரங்களில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் படத்தின் இயக்குநர் சமீபத்தில் அளித்தப் பேட்டி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

ஐ அம் கேம் படத்தில் நடிகர் துல்கர் சல்மான் இணைந்தது எப்படி?

ஐ அம் கேம் படத்தை எனது அறிமுகப் படமாக உருவாக்கவே நான் எப்போதும் விரும்பினேன். கடந்த ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக இக்கதையை உருவாக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறேன். கதையை எழுதும்போதே, அதில் வரும் கதாபாத்திரத்திற்கு துல்கர் சல்மானைத்தான் மனதில் வைத்திருந்தேன். ஆனால், ஒரு அறிமுக இயக்குநராக துல்கர் போன்ற ஒரு நட்சத்திரத்தை அணுகுவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. அதற்கு ஒருவித நம்பகத்தன்மை தேவைப்படுகிறது. அதனால்தான் எனது நண்பர்களுடன் இணைந்து ஆர்டிஎக்ஸ் படத்தை உருவாக்கினேன். அப்படம் கிடைத்த வரவேற்பு, துல்கரை அணுகுவதற்கான நம்பிக்கையை எனக்கு அளித்தது. அவருக்கு ஒரு செய்தி அனுப்பினேன். உடனடியாக சென்னைக்கு வந்து அவரிடம் கதையை விவரித்தேன். கதையைக் கேட்ட பிறகு துல்கர், இந்தக் கதையின் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. நானே இதைத் தயாரிக்கிறேன், என்று கூறினார்.

Also Read… அரசன் பட ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த இசையமைப்பாளர் அனிருத்

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… பென்ஸ் படக்குழுவினர் மீது அதிருப்தியில் இருக்கும் நிவின் பாலி – வைரலாகும் வீடியோ

Follow Us