AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ஜனநாயகன் படத்தை மாபெரும் வெற்றிப்படமாக்கியதற்கு நன்றி – தயாரிப்பாளர் வெங்கட் கே நாராயணா

KVN producer Venkat K Narayana | தென்னிந்திய மொழிகளில் பிரபல தயாரிப்பாளராக வலம் வருபவர் தயாரிப்பாளர் வெங்கட் கே நாராயணா. இவர் டாக்ஸிக் பட விழாவில் பேசியபோது ஜன நாயகன் படத்தினை மாபெரும் வெற்றிப்படமாக மாற்றியதற்காக தமிழக மக்களுக்கு நன்றி தெரிவித்தார்.

ஜனநாயகன் படத்தை மாபெரும் வெற்றிப்படமாக்கியதற்கு நன்றி – தயாரிப்பாளர் வெங்கட் கே நாராயணா
வெங்கட் கே நாராயணாImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 25 Aug 2026 11:28 AM IST

தென்னிந்திய மொழிகளில் பிரபல தயாரிப்பு நிறுவனமாகவும், விநியோக நிறுவனமாகவும் வலம் வருகின்றது கேவிஎன் தயாரிப்பு நிறுவனம். இந்த நிறுவனத்தின் தலைவர் தயாரிப்பாளர் வெங்கட் கே நாராயணா நேற்று தமிழ் நாட்டில் நடைப்பெற்ற டாக்ஸிக் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசியது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. அதன்படி தயாரிபாளர் வெங்கட் கே நாராயணா தமிழ் சினிமாவில் நடிகர் தளபதி விஜய் நடிப்பில் உருவான ஜன நாயகன் என்ற படத்தை தயாரித்ததன் மூலம் தயாரிப்பாளராக அறிமுகம் ஆனார். இந்த நிறுவனம் தமிழ் மொழியில் தயாரித்த முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை தொடர்ந்து தமிழ் சினிமாவில் அடுத்தடுத்துப் படங்களை தயாரிக்கவும் அந்த நிறுவனம் தொடர்ந்து பேச்சு வார்த்தையை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

கன்னட சினிமாவில் தனது தயாரிப்பு பணியை முதன்முதலாக தொடங்கிய வெங்கட் கே நாராயணா தொடர்ந்து தென்னிந்திய மொழிகளான மலையாளம், தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் படங்களை தொடர்ந்து தயாரித்து வருகிறார். இவரது தயாரிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் டாக்ஸிக். இந்தப் படத்தின் தமிழ் பிரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போது தயாரிப்பாளர் வெங்கட் கே நாராயணா பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

ஜனநாயகன் படத்தை மாபெரும் வெற்றிப்படமாக்கியதற்கு நன்றி:

‘ஜனநாயகன்’ படத்தை மாபெரும் வெற்றியடையச் செய்தமைக்கு நன்றி. தமிழக மக்களுக்கும், நாடு மற்றும் உலகம் முழுவதும் உள்ள விஜய் சார் ரசிகர்களுக்கும் நன்றி. விஜய் சார் திரையில் கடைசியாக ஒருமுறை தோன்றினார்… ஆனால், அது ஒருவிதமான வெறுமை உணர்வை ஏற்படுத்துகிறது. அவரை மீண்டும் திரையில் காண நாங்கள் ஆவலாக உள்ளோம். அவரை மீண்டும் ஒருமுறை திரையில் தோன்றும்படி நாம் வேண்டுகோள் விடுக்கலாமா? என்றும் அவர் தெரிவித்துள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… பப்ளியாக இருக்கும் இந்த சிறுவன் யார் தெரியுமா? தமிழ் ரசிகர்களின் கனவு கண்ணன்.. அட இந்த ஹீரோதான்!

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… மண்டாட்டி பட ஷூட்டிங்கை முடித்த சூரி… நெக்ஸ்ட் ப்ளான் என்ன?

Follow Us