3 தமிழர்கள் மீதும் அருகிலிருந்து துப்பாக்கிசூடு – பிரதே பரிசோதனையில் வெளியான பகீர் தகவல்
Karnataka Tamil Shooting Case : கர்நாடகா மாநிலத்தில் 3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரத்தில் அவர்கள் பிரேத பரிசோதனையில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில் 3 தமிழர்களும் மிக அருகில் இருந்து சுடப்பட்டது அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த வழக்கு முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது.
கர்நாடகா மாநிலம் சாம்ராஜ் நகர் மாவட்டம் சாக்கியா என்ற கிராமத்தை ஒட்டிய வனப்பகுதியில் கடந்த ஆகஸ்ட் 15, 2026 அன்று வனத்துறையினரால் ஜான் ரோஸ் பீட்டர், செபஸ்டின் டேவிட் குமார், அந்தோணி சாமி ஆகிய 3 தமிழர்கள் வனவிலங்குகளை வேட்டையாடியதாக சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இறந்தவர்களின் பிரேத பரிசோனை முடிவுகள் ஆகஸ்ட் 24, 2026 நேற்று வெளியானது. அதில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
3 தமிழர்கள் மீதும் அருகிலிருந்து துப்பாக்கிசூடு
இந்த நிலையில் வெளியான பிரேத பரிசோதனை அறிக்கையில், இறந்த 3 பேரில் ஒருவரான செபஸ்டின் டேவிட் குமாரின் உடலில் இருந்த குண்டுகள் அவரை மிக அருகில் இருந்து சுடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவரது உடலில் நெஞ்சு மற்றும் வயிற்றுப் பகுதிகளில் துப்பாக்கி குண்டுகள் துளைத்ததற்கான காயங்கள் இருந்ததாகவும் மேலும் அவரது உள்காயங்கள் இருந்ததாகவும் வெளியான அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளன.
இதையும் படிக்க : “நீர் திறந்து விட முடியாது!”.. ஒழுங்காற்றுக் குழு பரிந்துரைத்தும் பிடிவாதம் பிடிக்கும் கர்நாடகா.. காவிரி விவகாரத்தில் பின்னடைவு!!




ஏற்கனவே சம்பவ இடத்தில் கண்டெடுக்கப்பட்ட குண்டுகளும் அவரது உடலில் இருந்த குண்டுகளும் ஒரே அளவில் இருந்ததால் அவரை மிகவும் அருகில் இருந்து சுடப்பட்டிருக்கலாம் என்பதை காட்டுவதாக கூறப்படுகிறது. மேலும் அவர்களது உடலில் மிகவும் ஆழமான காயங்கள் இருந்ததாகவும் அது எப்படி ஏற்பட்டது என தெரியவில்லை என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பிரேத பரிசோதனை அறிக்கை இந்த வழக்கில் மிக முக்கிய திருப்பமாக பார்க்கப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக ஏற்கனவே ஹனூர் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இறந்த 3 பேரும் தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட கர்நாடக மாநிலத்தில் வாழும் தமிழர்கள் என்பதும் தெரியவந்தது. இவர்கள், மாரியமங்கலம் வனப்பகுதிக்குள் மான்களை வேட்டையாடுவதற்காக துப்பாக்கிகளுடன் சென்றது கண்டறியப்பட்டது.
இதையும் படிக்க : சென்னையில் இன்றுமுதல் குறிப்பிட்ட மின்சார ரயில்கள் ரத்து – வெளியான அறிவிப்பு
முன்னதாக இதுகுறித்து பேசிய கர்நாடக மாநில முதல்வர் டி.கே.சிவகுமார், கர்நாடகா மாநில விவகாரத்தில் தமிழகம் தலையிடக்கூடாது என்று தெரிவித்தார். மேலும் பேசிய அவர், உங்கள் வேலையை நீங்கள் பாருங்கள். எங்கள் வேலையை நாங்கள் பார்க்கிறோம். ஒரு மாநிலத்தின் நிர்வாகத்தில் மற்றொரு மாநிலங்கள் தலையிடக்கூடாது. ஓ. பன்னீர்செல்வம் அல்லது வேறு யாராக இருந்தாலும் இந்த அடிப்படை புரிதலை கொண்டிருக்க வேண்டும். தமிழகத்தின் சட்டம்- ஒழுங்கு விவகாரங்களில் என்னால் தலையிட முடியாது. ஒவ்வொரு மாநிலத்துக்கும் அதற்கு உரிய பிரச்சனைகள் உள்ளன. எங்கள் மாநிலத்தை எவ்வாறு பாதுகாப்பது என்பது எங்களுக்கு தெரியும் என்பதை தமிழக ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.