சென்னையில் இன்றுமுதல் குறிப்பிட்ட மின்சார ரயில்கள் ரத்து – வெளியான அறிவிப்பு
Chennai Night Train Cancellation : சென்னை எழும்பூர் ரயில் நிலையம் அருகே இரும்பு நடைமேடை அமைக்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இன்று முதல் செப்டம்பர் 6, 2026 வரை இரவு நேர மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சென்னை, ஆகஸ்ட் 25 : சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் கடந்த சில மாதங்களாக மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் இரும்பு நடைமேம்பாலம் பணி நடைபெற்று வரும் நிலையில் ஆகஸ்ட் 25, 2026 இன்று முதல் செப்டம்பர் 6, 2026 வரை மின்சார ரயில்கள் செல்லும் தண்டவாள பகுதியில் பணிகள் நடைபெறவுள்ளது. இதனையடுத்து ஆகஸ்ட் 25, 2026 இன்று இரவு 11.15 மணி முதல் அதிகாலை 4.15 மணி வரையில் 5 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன.
சென்னையில் இன்றுமுதல் குறிப்பிட்ட மின்சார ரயில்கள் ரத்து
அதன் படி ஆகஸ்ட் 25, 2026 இன்று முதல் செப்டம்பர் 6, 2026 வரை 13 நாட்களுக்கு சென்னை கடற்கரையில் இருந்து இரவு 10.20 மணி முதல் இரவ 11.59 வரையும் அதிகாலை 3.50 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன.செங்கல்பட்டு மற்றும் தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும் ரயில்கள், கடற்கரை – தாம்பரம் இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது. இதனால் அந்த வழித்தடத்தில் பயணிப்பவர்கள் மாற்று ஏற்பாடு செய்துகொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : அடேங்கப்பா இது லிஸ்ட்லயே இல்லையே… 9-ஆம் வகுப்பு முதல் மாணவர்களுக்கு இலவச டேப்லெட்.. முதல்வர் அதிரடி அறிவிப்பு!




மேலும் சாமல்பட்டி – திருப்பத்தூர் ரயில் நிலையங்களுக்கு இடையே காகங்கரை ரயில்வே பகுதியில் சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், இதன் காரணமாக ஆகஸ்ட் 25, 2026 இன்று ஈரோடு – ஜோலார்பேட்டை இடையே இயக்கப்படும் பாசஞ்சர் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதன் படி வண்டி எண் 56108 ஈரோடு – ஜோலார்பேட்டை பாசஞ்சர் ரயில் ஈரோட்டில் இருந்து 6 மணிக்கு புறப்பட்டு மொரப்பூர் ரயில் நிலையத்துடன் நிறுத்தப்படும். மொரப்பூரில் இருந்து ஜோலார்பேட்டைக்கு ரயில் செல்லாது. மேலும், வண்டி எண் 56107 ஜோலார்பே்டை – ஈரோடு பேசஞ்சர் ரயில் ஆகஸ்ட் 25, 2026 இன்று ஜோலார்பேட்டைில் பிற்பகல் 2.45 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக மொரப்பூர் யில் நிலையத்தில் இருந்து பிறப்கல் 3.47 மணிக்கு புறப்பட்டு ஈரோடு செல்லும். இந்த ரயில் ஜோலார்பேட்டை – மொரப்பூர் இடையே இயக்கப்படாது என சேலம் ரயில்வேகோட்டம் தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க : உயர்கல்வி மாணவர்களுக்கு ரூ.20 லட்சம் வரை பிணையில்லா கடன்.. அமைச்சர் விஸ்வநாதன் அசத்தல் அறிவிப்பு!
சென்னை பறக்கும் ரயில் சேவையை தமிழக அரசிடம் ஒப்படைக்க தெற்கு ரயில்வே ஒப்புதல் அளித்துள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியான அறிக்கையில், இதன்மூலம் பயணிகள் தடங்கலற்ற, எளிமையான பலவகை போக்குவரத்துச் சேவையைப் பெற முடியும் என்றும், இந்த ஒப்பந்தம் செய்யப்பட்ட 90 நாட்களுக்குள் இந்த ஒப்படைப்பு செயல்முறை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்பின் நிகழும் 24 மாத இடைக்கால பெயர்ச்சி காலத்தில் தெற்கு ரயில்வே தொடர்ந்து ரயில்களை இயக்கி பராமரிக்கும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.