AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

அமைச்சர் மரிய வில்சன் மீது லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை வேண்டும் – அன்பில் மகேஷ்

Tamil Nadu Assembly: சட்டப்பேரவையில் பேசும் அமைச்சரின் நம்பகத்தன்மை முக்கியமானது என்றும், அமைச்சராக இருக்கும் மரிய வில்சன் லஞ்சம் கொடுத்தேன் என்று கூறிய நிலையில் அவர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை மூலம் விசாரணை நடத்த வேண்டும் என்றும் அன்பில் மகேஷ் வலியுறுத்தினார்.

அமைச்சர் மரிய வில்சன் மீது லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை வேண்டும்  – அன்பில் மகேஷ்
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 24 Aug 2026 17:06 PM IST

ஆகஸ்ட் 24, 2026: சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், இன்று சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வித்துறை சார்பான மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றதாகத் தெரிவித்தார். நவோதயா பள்ளிகள் தேவையா, தேவையில்லையா என்ற கேள்விக்கு ஆளும் கட்சி சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

மேலும், கல்வித்துறைக்கு சமக்ர சிக்‌ஷா திட்டத்தின் மூலம் கிடைக்க வேண்டிய நிதியை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் மற்றும் பள்ளிக்கல்வித்துறையின் சாதனைகள் தொடர்பான அறிக்கை தற்போது ஆளும் அரசால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அன்பில் மகேஷ் தெரிவித்தார்.

மாணவர்களுக்கு ஒதுக்கப்படும் நிதி செலவு அல்ல – அன்பில் மகேஷ்:

பாரதிதாசன் என்ற மாணவர், அண்ணல் அம்பேத்கர் திட்டத்தின் கீழ் தங்களுக்கு கிடைக்க வேண்டிய நிதியை விடுவிக்க வேண்டும் என அமைச்சர் வன்னி அரசுவிடம் கோரிக்கை வைத்துள்ளதாகவும், மாணவர்களுக்கு வழங்கப்படும் நிதி செலவு அல்ல; அது முதலீடு என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் படிக்க: பரந்தூர் விமான நிலையத்திட்டத்தை கைவிடுவதால் புதிய தொழில் நிறுவனங்கள் சென்னைக்கு வர தயங்கும் – உதயநிதி ஸ்டாலின்..

இங்கிலாந்தில் விசா தொடர்பாக பிரச்சினைகள் நிலவி வரும் நிலையில், அது தொடர்பாக ஒன்றிய அரசிடம் ஏதேனும் கோரிக்கை வலியுறுத்தப்பட்டுள்ளதா என்பதை தெரிந்துகொள்ள வேண்டும் என்றும் அன்பில் மகேஷ் கூறினார்.

அமைச்சர் கூறியது தவறானது – சட்டப்பேரவை பொதுக்கூட்டம் அல்ல:

பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்கு மற்றொரு துறையும் ஒதுக்கப்பட்டுள்ளது. அது எவ்வளவு அழுத்தமான பொறுப்பு என்பது தனக்குத் தெரியும் என்றும், பள்ளிக்கல்வித்துறையில் அர்ப்பணிப்புடன் செயல்பட்டால் மட்டுமே சிறப்பாகப் பணியாற்ற முடியும் என்றும் அவர் தெரிவித்தார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக இருந்தபோது கொண்டுவந்த திட்டங்களையும், அதற்கான வழித்தடத்தையும் தமிழ்நாடு அரசு தொடர்ந்து செயல்படுத்தினாலே போதும் என்றும் அன்பில் மகேஷ் கூறினார்.

மேலும் படிக்க: அண்ணன் எடப்பாடியார் என குறிப்பிட்டு பேசத்தொடங்கிய எஸ்.பி வேலுமணி.. முதல்வர் விஜய், அண்ணாமலைக்கு நன்றி தெரிவித்து உரை..

சட்டப்பேரவையில் நின்று யார் என்ன பேசினாலும் அதற்கு அவர்கள்தான் பொறுப்பு என்றும், சட்டப்பேரவை என்பது பொதுக்கூட்டம் அல்ல என்றும் அவர் தெரிவித்தார். சட்டப்பேரவையில் நின்று லஞ்சம் கொடுத்தேன் என்று கூறுவது தவறானது என்றும் குறிப்பிட்டார்.

அமைச்சர் வரிய வில்சன் மீது லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை வேண்டும்:

சட்டப்பேரவையில் பேசும் அமைச்சரின் நம்பகத்தன்மை முக்கியமானது என்றும், அமைச்சராக இருந்து கொண்டு லஞ்சம் கொடுத்தேன் என்று கூறிய அமைச்சர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை மூலம் விசாரணை நடத்த வேண்டும் என்றும் அன்பில் மகேஷ் வலியுறுத்தினார். அரசு வழக்கறிஞர் லஞ்சம் பெற்றதாக குற்றம்சாட்டிய வழக்கறிஞரையே கட்சியில் இருந்து நீக்கியதாகவும் அவர் கூறினார். இந்த அரசாங்கத்தை நடத்துவது யார் என இடதுசாரி தலைவர்களே கேள்வி எழுப்பியுள்ளதாகவும் தெரிவித்தார்.

ஆளும் கூட்டணியில் நிலவும் பிரச்சினைகளை திசைதிருப்புவதற்காகவே சட்டப்பேரவையில் இதுபோன்ற விவாதங்கள் முன்னெடுக்கப்படுவதாகவும் அன்பில் மகேஷ் குற்றம்சாட்டினார்.

ரசிகர் மனநிலையில் பேசுவதை தவிர்க்க வேண்டும்:

மேலும், முதலமைச்சர் விஜய் பிரதமராக வருவார் என சட்டப்பேரவையில் தமிழக வெற்றிக் கழக உறுப்பினர்கள் ரசிகர் மனநிலையில் பேசுவதாக காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் கூறியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். அடுத்த 7 மாதங்களில் தமிழகம் 100 சதவீத கல்வியறிவு பெற்ற மாநிலமாக மாறும் என்றும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நம்பிக்கை தெரிவித்தார்.

Follow Us