Tamil Nadu Weather Alert: வானிலை மையம் எச்சரிக்கை – இந்த மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழை பெய்யும்!
Tamil Nadu weather today : தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களின் ஒரு சில பகுதிகளில் கனமழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை, ஆகஸ்ட் 25 : தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுவதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக ஆகஸ்ட் 25, 2026 இன்று கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளாக வானிலை மையம் அறிவித்துள்ளது.
இந்த மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழை பெய்யும்!
மேலும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பிற மாவட்டங்கள் மற்றும் , சென்னை, திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, மதுரை, சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன்கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகத்தின் பிற பகுதிகளில் ஒரு சில இடங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : ஊழல் ஆதாரம் இருந்தா நடவடிக்கை எடுங்க… எதிர்க்கட்சிகளை அச்சுறுத்தாதீங்க.. மார்க்சிஸ்ட் செயலர் பெ.சண்முகம்!




அதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 26, 2026 நாளையும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும், தமிழகத்தின் பிற பகுதிகளில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் அறிவித்துள்ளது.
சென்னையை பொறுத்தவரை ஆகஸ்ட் 25, 2026 நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெப்ப நலையை பொறுத்தவரை அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 முதல் 27 டிகிரி செல்சியஸ் வரை இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : நெல்லை- தென்காசியில் 20 டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட்.. மதுக்கடைகள் மூடல்.. பெரும் போராட்டம்!
சென்னையில் கடந்த சில நாட்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில் ஆகஸ்ட் 24, 2026 நேற்று இரவில் திடீரென இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்து. சென்னையில் குறிப்பாக எழும்பூர், நுங்கம்பாக்கம், கிண்டி, கோயம்பேடு, ஈக்காட்டுதாங்கல் உள்ளிட்ட பகுதிகளில் அரை மணி நேரத்திற்கும் மேலாக மழை வெளுத்து வாங்கியது. திடீர் மழையை எதிர்பார்க்காத மக்கள் பலரும் குடை எதுவும் இல்லாததால், மழையில் நனைந்தபடி வீடு திரும்பினர்.