AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

பப்ளியாக இருக்கும் இந்த சிறுவன் யார் தெரியுமா? தமிழ் ரசிகர்களின் கனவு கண்ணன்.. அட இந்த ஹீரோதான்!

Tamil Actors Childhood Photo: சினிமா வட்டாரங்களில் நடிகர்கள் மற்றும் நடிகைகளின் சிறுவயது புகைப்படங்கள் வைரலாகிவருவது வழக்கமே. அந்த விதத்தில், இந்த போட்டோவில் இருக்கும் சிறுவன் யார் என தெரிகிறதா. தளபதி விஜய்யுடன் நடித்த முதல் படத்திலே பிரபலமானவர். எந்த நடிகர் என தெளிவாக பார்க்கலாம்.

பப்ளியாக இருக்கும் இந்த சிறுவன் யார் தெரியுமா? தமிழ் ரசிகர்களின் கனவு கண்ணன்.. அட இந்த ஹீரோதான்!
தமிழ் நடிகரின் சிறுவயது புகைப்படம்Image Source: Social Media
Barath Murugan
Barath Murugan | Published: 24 Aug 2026 08:37 AM IST

தமிழ் சினிமாவில், நடிகர்கள் மற்றும் நடிகைகளின் அடையாளம் தெரியாத சிறுவயது புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பரவிவருவது வழக்கமே. அந்த விதத்தில் மேலே உள்ள போட்டோவில் பப்ளியாக இருக்கும் சிறுவன் யார் என தெரிகிறதா?. இவர் தமிழ் சினிமாவில் ரசிகர்களின் கனவு கண்ணனாக வளம் வருகிறார். இவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜின் (Lokesh Kanagaraj) இயக்கத்தில் வெளியான படத்தின் மூலம் சினிமாவில் பிரபலமானவர். நடிகராக நுழைந்த முதல் திரைப்படத்தின் மூலமாகவே மக்கள் மத்தியில் பிரபலமானார். இவரின் குரலுக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது.

இவர் தமிழ் மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளில் வெளியான படங்களில் வில்லனாகவும் நடித்துள்ளார். தளபதி விஜய் (Thalapathy Vijay) மற்றும் சூர்யாவின் (Suriya) படங்களிலும் நடித்துள்ளார். தற்போது சினிமாவில் லீட் நாயகனாகவே படங்களில் நடிக்க தொடங்கிவிட்டார். அட ந்த நடிகர் வேறுயாருமில்லை அர்ஜுன்தாஸ்தான் (Arjun Das).

இதையும் படிங்க: நான் மது அருந்துவதை விடுவதற்கு காரணம் அவர்தான் – ரஜினிகாந்த் தெரிவித்த விஷயம்!

நடிகர் அர்ஜுன் தாஸின் இன்ஸ்டாகிராம் போட்டோஷூட் பதிவு:

 

View this post on Instagram

 

A post shared by Arjun Das (@imarjundas)

நடிகர் அர்ஜுன் தாஸ் கடந்துவந்த சினிமா பாதை:

நடிகர் அர்ஜுன் தாஸ் தமிழில் 2012ம் ஆண்டில் வெளியான பெருமான் என்ற படத்தின் மூலம் சினிமாவில் நுழைந்தார். அதன் பிறகு ஆக்சிஜன் என்ற தெலுங்கு திரைப்படத்திலும் நடித்திருந்தார். மேலும் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் வெளியான கைதி என்ற படத்திலும் அன்பு என்ற வேடத்தில் நடித்தார். பின் அந்தகாரம் மற்றும் மாஸ்டர் போன்ற படங்களில் நடித்தார். இதில் முதல்வர் விஜய்யுடன் நடித்த மாஸ்டர் திரைப்படத்தின் மூலமாக பிரபலமானார். இதில் தாஸ் என்ற வேடத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.

இதையும் படிங்க: உள்ள ஒளிச்ச உயிரே இப்ப பிரியாதிரு நீ… வைரலாகும் தளபதி விஜயின் ஃபேரவல் வீடியோ!

விக்ரம் படத்திலும் இணைந்து நடித்திருந்தார். மேலும் முன்னணி நாயகனாக அநீதி, ரசவாதி, பாம்ப், கும்கி 2 மற்றும் கான் சிட்டி போன்ற திரைப்படங்களில் நடித்திருந்தார். தற்போது இவரின் நடிப்பில் வெளியாக காத்திருக்கும் படம் ஒன்ஸ் மோர். இந்த படத்தில் அதிதி சங்கர் மற்றும் சோனா ஒலிக்கல் போன்ற நடிகைகளுடன் இணைந்து நடித்துள்ள, 2026ம் ஆண்டு ஆகஸ்ட் 28ம் தேதியில் திரையரங்குகளில் வெளியாகிறது. பீல் குட் காதல் கதைக்களத்தில் உருவாகியுள்ள, இப்படத்தின் ட்ரெய்லர் அண்மையில் வெளியிடப்பட்டது. அர்ஜுன் தாஸ் நடிப்பில் சிறப்பான லவ் ஸ்டோரி படமாக உருவாகியுள்ள நிலையில், நிச்சயம் மக்கள் மத்தியில் வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us