AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியில் இணையும் பிரபல நடிகையின் மகள்.. அட இவரா?

Bigg Boss Tamil Season 10: மக்கள் மத்தியில் அதிகம் எதிர்பார்க்கப்பட்டுவரும் ரியாலிட்டி நிகழ்ச்சியாக இருந்துவருவது பிக் பாஸ் சீசன் 10. இந்த நிகழ்ச்சியானது மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திவரும் நிலையில், இந்த சீசனில் பிரபல நடிகை ஒருவரின் மகள் போட்டியாளாராக இணைகிறாராம். அது யார் என பார்க்கலாம்.

பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியில் இணையும் பிரபல நடிகையின் மகள்.. அட இவரா?
பிக் பாஸ் தமிழ்Image Source: Social Media
Barath Murugan
Barath Murugan | Published: 24 Aug 2026 20:30 PM IST

தமிழ் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ரியாலிட்டி நிகழ்ச்சியாக இருந்துவருவது பிக் பாஸ் (Bigg Boss). இந்த நிகழ்ச்சியானது மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திவருகிறது. தமிழ் விஜய் தொலைக்காட்சியில் ஆண்டுதோறும் ஒளிபரப்பாகிவரும் இந்த நிகழ்ச்சியானது, கிட்டத்தட்ட 9 சீசன்களை கடந்துள்ளது. அதில் இறுதியாக வெளியான பிக் பாஸ் சீசன் 9 (Bigg Boss 9) நிகழ்ச்சியில் வெற்றியாளராக சீரியல் நடிகை திவ்யா கணேசன் (Divya Ganesh) டைட்டில் வின்னர் என்ற பட்டத்தை தட்டிச்சென்றார். இந்த நிகழ்ச்சிக்கு பின் பிக் பாஸ் சீசன் 10 (Bigg Boss Season 10 ) எப்போது தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 2026ம் ஆண்டு செப்டம்பர் 06ம் தேதியில் ஒளிபரப்பாகிறது.

இந்த நிகழ்ச்சியை நடிகர் விஜய் சேதுபதி தொகுக்கும் நிலையில், யார் யார் போட்டியாளர்களாக கலந்துகொள்கிறார்கள் என இணையத்தில் தகவல்கள் வைரலாகப் பரவிவருகிறது. அதில் பிரபல தமிழ் நடிகையின் மகள் போட்டியாளராக கலந்துகொள்வதாக வட்டாரங்கள் கூறுகிறது.

இதையும் படிங்க: துருவ் விக்ரமின் குரலில்.. நயன்தாரா – கவினின் ஹாய் திரைப்படத்திலிருந்து குடிகார நெஞ்சு பாடல் வெளியீடு!

போலிக் பாஸ் சீசன் 10ல் போட்டியாளராக இணையும் பி[பிரபல நடிகையின் மகள்:

ஏற்கனவே தமிழ் பிக் பாஸில், நடிகை வனிதா விஜயகுமாரின் மகள் ஜோதிகா விஜயகுமார் போட்டியாளராக கலந்துகொண்டார். அந்த போட்டியில் கலந்துகொண்ட ஜோவிகா விமர்சனங்களும், பிரபலத்தையும் பெற்றிருந்தார். இந்த வரிசையில், தற்போது பிரபல நடிகையின் மகள் போட்டியாளராக கலந்துகொள்கிறாராம்.

இதையும் படிங்க: பூஜையுடன் தொடங்கிய ஜி.வி.பிரகாஷ் குமாரின் நிஞ்சா பட ஷூட்டிங் – வைரலாகும் வீடியோ!

அது வேறுயாருமில்லை, நடிகை தேவியானியின் மகளும், சின்னத்திரை பிரபல பாடகியான இனியா ராஜகுமாரன் கலந்துகொள்கிறாராம். இனியா ராஜகுமாரன் பாடகியாக மக்கள் மத்தியில் பிரபலமான நிலையில், தற்போது பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியில் போட்டியாளாராக இணைவதாக கூறப்படுகிறது. இதனால பாடகியாக இல்லாமல், இனியா ராஜகுமாரனாக இவருக்கு மேலும் வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இனியா ராஜகுமாரனின் இன்ஸ்டாகிராம் போட்டோஷூட் பதிவு:

 

View this post on Instagram

 

A post shared by Iniyaa Rajakumaran (@iniyaa_110)

இனியா ராஜகுமாரன் தமிழ் சின்னத்திரை நிகழ்ச்சியான சரிகமப சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டிருந்தார். இந்த நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் மேலும் பிரபலம் இவருக்கு கிடைத்தது.

பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியானது, விஜய் சேதுபதி தொகுக்க வரும் 2026ம் ஆனது செப்டம்பர் 06ம் தேதியில் ஒளிபரப்பாகிறது. இந்த நிகழ்ச்சியில் பல்வேறு தமிழ் பிரபலங்கள் மற்றும் தி காமன் மேன் நிகழ்ச்சியின் வெற்றியாளர்களை கலந்துகொள்கிறார்கள். மற்ற பிக் பாஸ் சீசன்களை விடவும் பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியானது வித்தியாசமாக இருக்கும் என கூறப்படுகிறது.

Follow Us