AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

நீங்களும் விட மாட்டீங்க.. உங்களையும் விடாது.. பிக் பாஸ் சீசன் 10 கிராண்ட் லான்ச் எப்போது? வெளியான அப்டேட் இதோ!

Bigg Boss Season 10: தென்னிந்திய சின்னத்திரையில் மிகவும் பிரம்மாண்டமான ரியாலிட்டி நிகழ்ச்சியாக இருந்துவருவது பிக் பாஸ். தமிழில் இதுவரை சீசன் 9 வரை வெளியாகியிருக்கும் நிலையில், பிக் பாஸ் சீசன் 10 எப்போது தொடங்கும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நீங்களும் விட மாட்டீங்க.. உங்களையும் விடாது.. பிக் பாஸ் சீசன் 10 கிராண்ட் லான்ச் எப்போது? வெளியான அப்டேட் இதோ!
பிக் பாஸ் தமிழ் 10Image Source: Social Media
Barath Murugan
Barath Murugan | Published: 23 Aug 2026 20:35 PM IST

தமிழ் மொழியில் மிகவும் பிரம்மாண்டமான ரியாலிட்டி நிகழ்ச்சியாக இருந்துவருவது பிக் பாஸ் (Bigg Boss). நடிகர் விஜய் சேதுபதி (Vijay Sethupathi) தொகுப்பாளராக இந்த நிகழ்ச்சியை தொகுத்துவரும் நிலையில், இதுவரை மொத்தம் 9 சீசன்கள் வெளியாகியிருக்கிறது. இறுதியாக வெளியன் பிக் பாஸ் சீசன் 9 (Bigg Boss 9) நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராக திவ்யா கணேஷ் வெற்றிபெற்றிருந்தார். இந்த சீசனுக்கு பின் பிக் பாஸ் சீசன் 10 (Bigg Boss Season 10 Tamil) நிகழ்ச்சியின் மீது மக்களுக்கு அதிக ஆர்வம் இருந்துவருகிறது. இந்த சீசனில் சாதாரண மக்களும் கலந்துகொள்கிறார்கள். பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியில் போட்டியாளர்களை தேர்ந்தெடுப்பதற்கான, பிக் பாஸ் தி காமன் மேன் (Bigg Boss The Common Man) நிகழ்ச்சி நடைபெற்றுவருகிறது.

இந்த நிகழ்ச்சியிலிருந்து 2 அல்லது 3 போட்டியாளர்கள் பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சிக்குள் நுழைவார்கள் என கூறப்படுகிறது. அந்த விதத்தில் பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சி எப்போது தொடங்குகிறது என்பது குறித்த அதிகாரபூர்வ தேதி வெளியாகியுள்ளது. இது குறித்த தகவல்கள் தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: பிளாக்பஸ்டர் ஹிட்.. 10 நாட்களில் சூர்யாவின் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் பட வசூல் எவ்வளவு தெரியுமா?

பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியின் தொடக்கம் எப்போது:

விஜய் சேதுபதி தொகுப்பாளராக தொகுக்கும் பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியானது, மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திவருகிறது. அந்த விதத்தில், இந்த போட்டியில் எந்த பிரபலங்கள் கலந்துகொள்வார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியானது வரும் 2026ம் ஆண்டு செப்டம்பர் 06ம் தேதி, மாலை 06:00 மணியளவில் தொடங்குகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:  எப்போதும் எனது சொக்கத் தங்கம் அவர்கள்தான் – சிவகார்த்திகேயன் பேச்சு!

பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சி தொடக்கம் குறித்து வெளியான எக்ஸ் பதிவு:

பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியில் பங்குபெறும் சின்னத்திரை நட்சத்திரங்கள்:

இந்த பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியில் ஜனனி அசோக்குமார், ஃபரீனா ஆசாத், குக் வித் கோமாளி புகழ், உமைர் லதீப் மற்றும் நடிகர் புவி அரசு போன்ற சின்னத்திரை பிரபலகங்கள் பங்கேற்கிறார்களாம். மேலும் இந்த நிகழ்ச்சியில் பிக் பாஸ் காமன் மேன் நிகழ்ச்சியின் வெற்றியாளர்களும் பங்குபெறுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us