AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Hi: துருவ் விக்ரமின் குரலில்.. நயன்தாரா – கவினின் ஹாய் திரைப்படத்திலிருந்து குடிகார நெஞ்சு பாடல் வெளியீடு!

Kudikara Nenju song: நடிகை நயன்தாரா மற்றும் கவினின் காம்போவில் உருவாகியுள்ள புது திரைப்படம்தான் ஹாய். இதை இயக்குநர் விஷ்ணு எடவன் இயக்க, நயன்தாராவின் ரௌடி பிக்ச்சர் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்திலிருந்து ஏற்கனவே 4 பாடல்களை வெளியாகியுள்ள நிலையில், 5வது பாடலாக குடிகார நெஞ்சு என்ற பாடல் வெளியாகியுள்ளது.

Hi: துருவ் விக்ரமின் குரலில்.. நயன்தாரா – கவினின் ஹாய் திரைப்படத்திலிருந்து குடிகார நெஞ்சு பாடல் வெளியீடு!
குடிகார நெஞ்சு பாடல்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 24 Aug 2026 19:03 PM IST

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நட்சத்திர நடிகைகளில் ஒருவராக இருந்துவருபவர் நயன்தாரா (Nayanthara). இவரின் நடிப்பில், பான் இந்திய மொழிகளில்லும் படங்கள் வெளியாகிவருகிறது. இந்நிலையில் தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 3 ஆண்டுகளுக்கு பின் வெளியாக காத்திருக்கும் புத்தம் புது படம்தான் ஹாய் (Hi). இதை இயக்குநர் விஷ்ணு எடவன் (Vishnu Edavan) இயக்க, ரௌடி பிக்ச்சர்ஸ் மற்றும் செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் போன்ற நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது. இதில் நயன்தாரா மற்றும் கவின் இருவருமே முக்கியமான வேடத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜென் மார்ட்டின் (Jen Martin) இசையமைத்துள்ள நிலையில், இப்படத்திலிருந்து இதுவரை மொத்தமாக 4 பாடல்கள் வெளியாகியுள்ளது.

அதை தொடர்ந்து இன்று (24/08/2026) வெளியாகியுள்ள 5வது பாடல்தான் “குடிகார நெஞ்சு” (Kudikara Nenju). இதை ஜென் மார்ட்டின் இசைக்க, நடிகர் துருவ் விக்ரம் (Dhruv Vikram) பாடியுள்ளார். தற்போது வெளியான இந்த பாடல் மக்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: தர்மன் பட ஷூட்டிங்கிற்காக ஹைதராபாத் சென்ற சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் – வைரலாகும் வீடியோ

ஹாய் படத்தில் துருவ் விக்ரம் பாடிய குடிகார நெஞ்சு பாடல் குறித்து படக்குழு வெளியிட்ட பதிவு:

ஹாய் திரைப்படத்தில் நயன்தாரா நாயகியாக நடிக்க, அவருக்கு ஜோடியாக கவின் நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் அவருடன் நடிகர்கள் அறிவு, கே.பாக்யராஜ், பூர்ணிமா, ராதிகா சரத்குமார் மற்றும் பல்வேறு நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர். பீல் குட் காதல் கதைக்களத்தில் இப்படம் உருவாக்கப்பட்டிருக்கும் நிலையில், மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்த படத்திற்கு சென்சார் குழு யு/ ஏ தரச் சான்றிதழை வழங்கப்பட்டுள்ளதாம்.

இதையும் படிங்க: இரும்புத்திரை படத்தின் கதையை அர்ஜுன் சார் கேட்கவே மறுத்துவிட்டார் – பி.எஸ்.மித்திரன்

இந்த படத்தில் நயன்தாரா தேவியானி என்ற வேடத்திலும், நடிகர் கவின் மயில்சாமி என்ற வேடத்திலும் நடித்துள்ளனர். இதில் கவின் சாதுவான ஆணாகவும், நடிகை நயன்தாரா அடாவடி மற்றும் தைரியமான பெண்ணாகவும் நடித்துள்ளார். இப்படம் 2026ம் ஆண்டு ஆகஸ்ட் 28ம் தேதியில் திரையரங்குகளில் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us