தர்மன் பட ஷூட்டிங்கிற்காக ஹைதராபாத் சென்ற சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் – வைரலாகும் வீடியோ
Dharman Movie Shooting Update | தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நாயகனாக தற்போது நடித்து வரும் படம் தர்மன். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைப்பெற்று வரும் நிலையில் ஷூட்டிங் தொடர்பான அப்டேட்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் சூப்பர் டூப்பர் ஹிட் படங்களை கொடுத்து ரசிகர்களிடையே சூப்பர் ஸ்டாராக வலம் வருகிறார் நடிகர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் தொடர்ந்து தமிழ் சினிமாவில் வெளியாகும் படங்கள் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் கூலி. இந்தப் படம் கடந்த 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானது. இந்த நிலையில் நடிகர் ரஜின்காந்த் நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் ஜெயிலர் 2. இயக்குநர் நெல்சன் திலீப் குமார் எழுதி இயக்கி உள்ள இந்தப் படம் வருகின்ற அக்டோபர் மாதம் 15-ம் தேதி 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்தின் போஸ்ட் புரடெக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக தற்போது நடைப்பெற்று வரும் நிலையில் அடுத்தடுத்தப் படங்களில் ஒப்பந்தம் ஆகி தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் பிசியாக் நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது தனது 173-வது படமான தர்மன் படத்தில் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். இந்தப் படத்தை இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து எழுதி இயக்கி வருகிறார்.




தர்மன் பட ஷூட்டிங்கிற்காக ஹைதராபாத் சென்ற ரஜினிகாந்த்:
தொடர்ந்து படத்தின் படப்பிடிப்பு பணிகள் கடந்த ஜூலை மாதம் பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து விறுவிறுப்பாக நடைப்பெற்று வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு குறித்த புதிய தகவல் சினிமா வட்டாரங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றது. அதன்படி ராமோஜி ஃபிலிம் சிட்டி அரங்கில் படப்பிடிப்பு தொடங்கவுள்ள தர்மன் திரைப்படத்திற்காக, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று ஹைதராபாத் சென்றடைந்தார். இப்படத்தில் தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவருக்கான காட்சிகளின் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் ஒரு பகுதியாக சண்டைக் காட்சிகளும் படமாக்கப்படவுள்ளன.
Also Read… தவெகவில் இணையும் நடிகர் தேவன் – கேரள மாநில தலைவராகிறார்? – பரபரப்பு தகவல்
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
#SuperstarRajinikanth reached Hyderabad today for the shooting of #Dharman, which begins today at the RFC set.
Telugu actor #RAPO / #RamPothineni is playing a key role in the film. His portions are scheduled to begin shooting by the end of this month.
Action sequences will also…
— Movies Singapore (@MoviesSingapore) August 24, 2026
Also Read… சினிமாவை ஒருபோதும் அப்படி எடுத்துக்கொள்ளாதீங்க – நடிகர் யாஷ்