AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சினிமாவை ஒருபோதும் அப்படி எடுத்துக்கொள்ளாதீங்க – நடிகர் யாஷ்

Actor Yash Speech : பான் இந்திய மொழிகளில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் யாஷ். இவர் சமீபத்தில் டாக்ஸிக் படத்தின் ப்ரீ ரிலீஸ் விழாவில் கலந்துகொண்டு பேசிய போது சினிமா குறித்து பேசியது தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

சினிமாவை ஒருபோதும் அப்படி எடுத்துக்கொள்ளாதீங்க – நடிகர் யாஷ்
நடிகர் யாஷ்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Updated On: 23 Aug 2026 19:50 PM IST

பான் இந்திய மொழிகளில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் யாஷ். இவரது நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் டாக்ஸிக். மிகப்பெரிய பட்ஜெட்டியில் பிரமாண்டமாக உருவாகி உள்ள இந்த டாக்ஸிக் படத்தை இயக்குநர் கீது மோகன் தாஸ் இயக்கி உள்ளார். மேலும் இந்தப் படத்தின் திரைக்கதையை இயக்குநர் கீது மோகன் தாஸ் உடன் இணைந்து நடிகர் யாஷும் எழுதி உள்ளது குறிப்பிடத்தக்கது. படத்தில் நாயகனாக நடித்தது மட்டுமின்றி திரைக்கதையும் எழுதி உள்ளது அவரது ரசிகர்களிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்து உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்தப் படத்தில் நடிகர் யாஷ் உடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். அது மட்டும் இன்றி பான் இந்திய மொழிகளில் பிரபல நாயகிகளாக உள்ள பலர் இந்தப் படத்தில் நடித்து உள்ளனர்.

அதன்படி நடிகர்கள் கியாரா அத்வானி, நயன்தாரா, ஹுமா குரேஷி, தாரா சுதாரியா, ருக்மணி வசந்த், அக்ஷய் ஓபராய், டாரல் டி சில்வா, சுதேவ் நாயர், பாலாஜி மனோகர்,
சஞ்சீதா ஷேக், கைல் பால், பீட்ரிஸ் டாஃபென்பாக், சுர்ஜித் கோபிநாத், அமித் திவாரி, பெனடிக்ட் காரெட், டெட்டியான கைடர், ஹரிஷ் பரமகிரி என பலர் இந்தப் படத்தில் நடித்து உள்ளனர். இந்தப் படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து.

சினிமாவை ஒருபோதும் அப்படி எடுத்துக்கொள்ளாதீங்க:

இந்த நிலையில் நேற்று தெலுங்கு மொழியில் டாக்ஸிக் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடைப்பெற்றது. அந்த விழாவில் நடிகர் யாஷ் பேசியது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. அதில் அவர் பேசியதாவது, சினிமாவை ஒருபோதும் மிகத் தீவிரமாக எடுத்துக்கொள்ளாதீர்கள். நாம் இதில் பெரிதாக ஒன்றும் சாதித்துவிடவில்லை. வாழ்க்கையில் நீங்கள் எதைச் செய்ய விரும்புகிறீர்களோ, அதைக் கனவு காணுங்கள்; அதற்காக உழையுங்கள். அப்போது உங்களுக்கு மரியாதையும் வெற்றியும் கிடைக்கும். ஏதேனும் ஒன்றில் நாம் தோல்வியடைந்தால், அதற்காக உலகத்தைக் குறை கூறாதீர்கள்; அதற்கு நாமேதான் பொறுப்பு என்று அவர் தெரிவித்துள்ளார். அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… தனுஷுடன் மீண்டும் கைகோர்க்கும் சாய் அபயங்கர்.. அட இந்த படத்திற்கா?

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… Radhimaa: சாய் அபயங்கர் – பாக்யஸ்ரீ போர்ஸின் ரதிமா இண்டீ பாடல் புரோமோ வெளியானது!

Follow Us