AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

டாக்ஸிக் பட விழாவில் நடந்த விபத்து… மாணவர்களுக்கு காயம்

Students injured at Toxic pre-release event | நடிகர் யாஷின் நடிப்பில் உருவாகி உள்ள டாக்ஸிக் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் ஒரு சிறிய விபத்து ஏற்பட்ட நிலையில் அங்கு இருந்த மாணவர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

டாக்ஸிக் பட விழாவில் நடந்த விபத்து… மாணவர்களுக்கு காயம்
டாக்ஸிக் பட விழாவில் விபத்துImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 23 Aug 2026 12:20 PM IST

கன்னட சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் யாஷ் (Actor Yash). இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் நடிகர் யாஷ் நடிப்பில் தற்போது உருவாகி உள்ள படம் டாக்ஸிக். இந்தப் படத்தின் போஸ்டர் வெளியானதில் இருந்தே தொடர்ந்து ரசிகர்களிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது. மேலும் இந்த டாக்ஸிக் படத்தின் திரைக்கதையை நடிகர் யாஷே எழுதி இருப்பதுதான் படத்தின் மீதான எதிர்பார்ப்பை ரசிகர்களுக்கு அதிக அளவில் தூண்டியது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த டாக்ஸிக் படத்தினை இயக்குநர் கீது மோகன் தாஸ் இயக்கி இருந்த நிலையில் படத்தில் நடிகர் யாஷ் உடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர்.

அதன்படி நடிகர்கள் நயன்தாரா, கியாரா அத்வானி, தாரா சுதாரியா, ருக்மணி வசந்த், ஹுமா குரேஷி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் தனித்தனியாக படத்தில் ஒரு கதை இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் படம் வருகின்ற 26-ம் தேதி ஆக்ஸ்ட் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

டாக்ஸிக் பட விழாவில் நடந்த விபத்தில் மாணவர்களுக்கு காயம்:

படம் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் படத்தின் நிகழ்ச்சிகள் தொடர்ந்து ஒவ்வொரு மாநிலத்திலும் நடைப்பெற்று வருகின்றது. அதன்படி நேற்று தெலுங்கு ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நேற்று நடைப்பெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் யாஷ் பேசிக்கொண்டு இருந்த போது ஒலிபெருக்கிக்காக வைக்கப்பட்டு இருந்த கம்பிகள் சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. அப்போது அந்த கம்பியில் சிலர் அமர்ந்து இருந்ததால் அங்கு இருந்த மாணவர்களுக்கு சிறிய காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… டிசி படத்திற்காக கடுமையான உடற்பயிற்சியில் ஈடுபட்ட லோகேஷ் கனகராஜ் – வைரலாகும் வீடியோ

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… அந்த கதாப்பாத்திரங்களுக்கு நிறைய நோ சொல்லிவிட்டேன் – நடிகர் அர்ஜுன் தாஸ்

Follow Us