AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

தமிழக அரசுப் பணிகளில் 20% இட ஒதுக்கீடு.. யாருக்கெல்லாம் தெரியுமா.. கவர்னர் காட்டிய பச்சைக் கொடி!

TN Government Jobs R​reservation : தமிழக அரசுப் பணிகளில் தமிழ் வழி கல்வியில் பயின்றவர்களுக்கு 20 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் சட்ட திருத்த மசோதாவுக்கு மாநிலத்தின் பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் ஒப்புதல் அளித்து உள்ளார் .

தமிழக அரசுப் பணிகளில் 20% இட ஒதுக்கீடு.. யாருக்கெல்லாம் தெரியுமா.. கவர்னர் காட்டிய பச்சைக் கொடி!
அரசு பணியில் 20 சதவீத இட ஒதுக்கீடு
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 26 Aug 2026 15:02 PM IST

தமிழகத்தில் கடந்த 2010- ஆம் ஆண்டு தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு அரசு பணிகளில் 20 சதவீதம் முன்னுரிமை வழங்கும் சட்டம் கொண்டு வரப்பட்டது. அதன்படி, தற்போது தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு அரசுப் பணிகளில் 20 சதவீதம் முன்னுரிமை வழங்கப்பட்டு வருகிறது. இதில், காவல் உதவி ஆய்வாளர் பணியிட நியமனங்களுக்கு ஏற்கனவே காவல்துறையில் 5 ஆண்டுகள் காவலராக பணிபுரிந்தவர்களுக்கு மட்டும் வழங்கப்படும் 20 சதவீத துறை ஒதுக்கீட்டில் இந்த முன்னுரிமை வழங்கப்படுவது இல்லை. அதன்படி, அரசு பணிகளில் நேரடி நியமன வழியாக நியமனங்களில் முழுமையாக தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20 சதவீதம் முன்னுரிமை அளிக்கும் வகையில் சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில், இந்த மசோதாவுக்கு தமிழக பொறுப்பு ஆளுநர் அர்லேகர் ஒப்புதல் அளித்துள்ளார்.

20 சதவீத ஒதுக்கீடு யாருக்கு பொறுந்தும்

இதில், புதிதாக நிரப்பப்படும் பணி நியமனங்களுக்கு மட்டுமே இந்த திருத்த சட்டம் செல்லுபடி ஆகும் என்றும், 1- ஆம் வகுப்பு முதல் அரசு வேலைக்கான வரையறுக்கப்பட்ட கல்வி தகுதி வரை முழுவதும் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு மட்டுமே இந்த ஒதுக்கீடு பொருந்தும். இதர மொழிகளை பயிற்று மொழியாக படித்தவர்கள், தேர்வுகளை மட்டும் தமிழில் எழுதியவர்களுக்கு இந்த இட ஒதுக்கீடு பொருந்தாது. 1- ஆம் வகுப்பில் பள்ளியில் சேராமல் வயதின் அடிப்படையில் கல்வி உரிமை சட்டத்தின் கீழ் 2- ஆம் வகுப்பு முதல் 8- ஆம் வகுப்பு வரை நேரடியாக பள்ளிகளில் சேர்ந்து தமிழ் மொழியை பயிற்று மொழியாக படித்து தேர்ச்சி பெற்றவர்கள்.

மேலும் படிக்க: முந்திரி காட்டில் நள்ளிரவில் கேட்ட துப்பாக்கிச் சத்தம்.. தப்பியோட முயன்ற பிரபல ரவுடிக்கு நேர்ந்த கதி!!

தமிழ் மொழியை பயிற்று மொழியாக படித்தவர்கள்

இதே போல, வேறு மாநிலங்களில் தமிழ் மொழியை பயிற்று மொழியாக படித்து, பின்னர் தமிழகத்தில் தங்களது கல்வியை சேரும் வகுப்பில் இருந்து தமிழ் வழியில் பயின்றவர்களும், மேற்படி முன்னுரிமை வழங்க தகுதியுடையவர்கள் ஆவர். பள்ளிக்கு செல்லாமல் நேரடியாக தனித்தேர்வர்களாக தமிழ் வழியில் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்கள் மேற்படி முன்னுரிமை வழங்க தகுதி உடையவர்கள் ஆவர். பள்ளியில் 10- ஆம் வகுப்பு மற்றும் 11- ஆம் வகுப்பு, 12- ஆம் வகுப்பு போன்ற பொது தேர்வுகள் எழுதி, அதில் 1 அல்லது அதற்கு மேற்பட்ட பாடங்களில் தேர்ச்சி பெறாமல், தனி தேர்வார்களாக தேர்வு எழுதி அந்த பாடங்களில் தேர்ச்சி பெற்றவர்கள்.

தமிழ் வழியில் பயின்ற சான்றிதழ் பெற வேண்டும்

தொடர்ந்து பள்ளி மற்றும் கல்லூரிகளில் தமிழ் வழியில் படித்து தேர்ச்சி பெற்ற மாணவர்கள் 20 சதவீத இட ஒதுக்கீட்டை பெறுவதற்கு தகுதி உடையவர்கள் ஆவர். அரசு பணிகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட கல்வி தகுதி வரை அவர்கள் படித்த சம்பந்தப்பட்ட அனைத்து கல்வி நிறுவனங்களில் இருந்தும் தமிழ் வழியில் கல்வி பயின்றதற்கான சான்றிதழ் பெற்று விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: “10 MLAக்கள் ராஜினாமா செய்ய போறாங்களா?”.. தமிழக அரசியல் சூழல் குறித்து ஆளுநரிடம் டிடிவி தினகரன் பரபரப்பு புகார்!!

Follow Us