வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை.. சென்னையில் 15 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமனம்..
2026-ம் ஆண்டுக்கான வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் சென்னையில் முன்னெச்சரிக்கை மற்றும் மீட்புப் பணிகளைத் தீவிரப்படுத்துவதற்காக 15 மண்டலங்களிலும் கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ஒவ்வொரு மண்டலத்திற்கும் தலா ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி கண்காணிப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 26, 2026: வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை மற்றும் மீட்புப் பணிகளை மேற்கொள்வதற்காக சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களிலும் கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ஆண்டுதோறும் வடகிழக்கு பருவமழை அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரை நீடிக்கும். இந்தக் காலகட்டத்தில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்யும் வாய்ப்பு உள்ளதால், பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கும் நிலை ஏற்படுகிறது. இதனால் பொதுமக்களின் அன்றாட வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.
தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும், பருவமழைக் காலங்களில் தாம்பரம், முடிச்சூர், வரதராஜபுரம், மடிப்பாக்கம், வேளச்சேரி, சோழிங்கநல்லூர், வடசென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கும் பிரச்சினை நீடித்து வருகிறது.
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை – 15 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமனம்:
இந்நிலையில், 2026-ம் ஆண்டுக்கான வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் சென்னையில் முன்னெச்சரிக்கை மற்றும் மீட்புப் பணிகளைத் தீவிரப்படுத்துவதற்காக 15 மண்டலங்களிலும் கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ஒவ்வொரு மண்டலத்திற்கும் தலா ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி கண்காணிப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: “டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணை திறப்பு!”.. சேலம் செல்கிறார் முதல்வர் விஜய்.. பாதுகாப்பு வளையத்தில் மேட்டூர்!!
எந்தெந்த மண்டலங்களுக்கு யார் யார் நியமனம்?
அதன்படி, திருவொற்றியூரில் கே. பாலசுப்பிரமணியம், மணலியில் பி. குமரவேல், மாதவரத்தில் எஸ். அருள்ராஜ், தண்டையார்பேட்டையில் ஆர். கண்ணன், ராயபுரத்தில் ஆஷா அஜித், திரு.வி.க. நகரில் பி. கணேசன், அம்பத்தூரில் கே. விவேகானந்தன், அண்ணா நகரில் காயத்ரி கிருஷ்ணன், தேனாம்பேட்டையில் கிறிஸ்துராஜ், கோடம்பாக்கத்தில் கோபாலசுந்தரராஜ், வளசரவாக்கத்தில் விஜயா ராணி, ஆலந்தூரில் பி. சங்கேத் பால், அடையாறில் செந்தில்ராஜ், பெருங்குடியில் மகேஸ்வரி ரவிக்குமார், சோழிங்கநல்லூரில் பாஸ்கர பாண்டியன் ஆகியோர் கண்காணிப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் படிக்க: திருமண தோஷம் கழிக்கிறேன் என கூறி… பெண்ணை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை.. கோவை ஜோதிடரின் காம லீலை!
பருவமழைக் காலத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், மழைநீர் தேங்கும் பகுதிகளில் உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் இந்தக் கண்காணிப்பு அதிகாரிகள் ஒருங்கிணைப்புப் பணிகளை மேற்கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.