AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

தியேட்டரில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம்.. கையை நீட்டிய இளைஞருக்கு ஈரோடு நீதிமன்றம் சவுக்கடி தீர்ப்பு!

Erode Youth Sentenced : ஈரோடு மாவட்டத்தில் தியேட்டரில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக எழுந் த புகாரில் இளைஞருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதித்து மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்து உள்ளது .

தியேட்டரில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம்.. கையை நீட்டிய இளைஞருக்கு ஈரோடு நீதிமன்றம் சவுக்கடி தீர்ப்பு!
கோப்புப்படம்.
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 26 Aug 2026 17:17 PM IST

ஈரோடு மாவட்டம், கவுந்தம்பாடி பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் ( 27 வயது). இவர், தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில், கடந்த 2023- ஆம் ஆண்டு அந்த பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் திரையரங்கத்தில் படம் பார்ப்பதற்காக சென்றிருந்தார். அப்போது, அதே திரையரங்குக்கு கல்லூரி மாணவி ஒருவரும் படம் பார்க்க வந்திருந்தார். படம் திரையிடப்பட்டு பொதுமக்கள் அனைவரும் பார்த்துக் கொண்டிருந்த நிலையில், இடைவேளை விடப்பட்டது. அப்போது, அனைவரும் தியேட்டர் அறையில் இருந்து இயற்கை உபாதை கழிப்பதற்காக வெளியே சென்றனர். அந்த நேரத்தில், மேற்கண்ட அந்த கல்லூரி மாணவியும் வெளியே நடந்து சென்ற போது, இளைஞர் கிருஷ்ணகுமார் பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது. உடனே, அந்த பெண் சத்தமிட்டு அந்த இளைஞரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

தியேட்டரில் மாணவிக்கு இளைஞர் பாலியல் தொல்லை

உடனே, தியேட்டர் உரிமையாளர்கள் அந்த கல்லூரி மாணவி மற்றும் இளைஞர்களிடம் விசாரணை  மேற்கொண்டனர். தொடர்ந்து, இந்த சம்பவம் தொடர்பாக அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில், போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். பின்னர், அந்த இளைஞரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். இதில், தியேட்டரில் இளம் பெண்ணுக்கு, அந்த இளைஞர் பாலியல் தொல்லை அளித்தது உறுதி செய்யப்பட்டது.

மேலும் படிக்க: யானைக்கவுனியில் மரணக் கிணறு.. விஷவாயு தாக்கி தந்தை- மகன் பரிதாப பலி.. சென்னையில் பேரதிர்ச்சி!

போக்சோ சட்டத்தின் கீழ் இளைஞர் கைது

இது தொடர்பாக, அந்த இளம் பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில், போலீசார் போக்ஸோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து இளைஞர் கிருஷ்ணகுமாரை கைது செய்தனர். தொடர்ந்து, அவரை ஈரோடு மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு தொடர்பான விசாரணை, மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில், புகார் அளித்த இளம் பெண் மற்றும் குற்றச்சாட்டுக்கு உள்ளான இளைஞர் உள்ளிட்டோரிடம் நீதிபதி சொர்ண குமார் விசாரணை மேற்கொண்டு இருந்தார்.

இளைஞருக்கு 4 ஆண்டு சிறை- ரூ.5 ஆயிரம் அபராதம்

இதில், பல்வேறு நபர்களிடம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், வழக்கு இறுதி கட்டத்தை எட்டியது. அதன்படி, இந்த வழக்கு ஈரோடு மகளிர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு விசாரித்த நீதிபதி சொர்ண குமார், குற்றம் சுமத்தப்பட்ட கிருஷ்ணகுமாருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இதை தொடர்ந்து, இளைஞர் கிருஷ்ணகுமார் சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும் படிக்க: நேபாள நாட்டில் ஏற்பட்ட கடும் வெள்ளப் பெருக்கு… 49 தமிழர்களின் நிலை என்ன.. பெரும் பரபரப்பு!

Follow Us