AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

சென்னைக்கு 7 பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்.. யார் யார் தெரியுமா? முழு விவரம்..

சென்னையின் 15 மண்டலங்களும் பொறுப்பு அமைச்சர்களின் கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன. மண்டலங்களில் நடைபெறும் வளர்ச்சிப் பணிகளை துரிதப்படுத்துதல், பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுதல், மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் மற்றும் பேரிடர் காலங்களில் நிவாரணப் பணிகளை ஒருங்கிணைத்தல் உள்ளிட்ட பணிகளை பொறுப்பு அமைச்சர்கள் மேற்கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னைக்கு 7 பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்.. யார் யார் தெரியுமா? முழு விவரம்..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 26 Aug 2026 16:05 PM IST

ஆகஸ்ட் 26, 2026: சென்னையில் உள்ள 15 மாநகராட்சி மண்டலங்களின் வளர்ச்சிப் பணிகளை ஒருங்கிணைக்கவும், பேரிடர் காலங்களில் நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்தவும் பொறுப்பு அமைச்சர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களையும் ஒருங்கிணைக்கும் பொறுப்பு அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

சென்னையில் வடகிழக்கு பருவமழை உள்ளிட்ட பேரிடர் காலங்களில் ஏற்படும் பாதிப்புகளை விரைந்து கையாளவும், மழைநீர் தேங்கும் பகுதிகளில் உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, மண்டலங்களின் பணிகளை நேரடியாகக் கண்காணிக்கும் வகையில் பொறுப்பு அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சென்னைக்கு 7 பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்:

அதன்படி, திருவொற்றியூர் மற்றும் மணலி மண்டலங்களுக்கு பொறுப்பு அமைச்சராக ரமேஷ் நியமிக்கப்பட்டுள்ளார். தண்டையார்பேட்டை மற்றும் மாதவரம் மண்டலங்களுக்கான பொறுப்பு அமைச்சராக லோகேஷ் தமிழ்செல்வன் நியமிக்கப்பட்டுள்ளார்.

ராயபுரம் மற்றும் திரு.வி.க. நகர் மண்டலங்களின் பொறுப்பு அமைச்சராக அருண்ராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். அம்பத்தூர், அண்ணாநகர் மற்றும் தேனாம்பேட்டை மண்டலங்களுக்கான பொறுப்பு அமைச்சராக விஜய் பாலாஜி நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும் படிக்க: யானைக்கவுனியில் மரணக் கிணறு.. விஷவாயு தாக்கி தந்தை- மகன் பரிதாப பலி.. சென்னையில் பேரதிர்ச்சி!

அதேபோல், கோடம்பாக்கம் மற்றும் வளசரவாக்கம் மண்டலங்களுக்கான பொறுப்பு அமைச்சராக பிரபு நியமிக்கப்பட்டுள்ளார். ஆலந்தூர் மற்றும் அடையாறு மண்டலங்களின் பொறுப்பு அமைச்சராக விஜய் தமிழன் பார்த்திபன் நியமிக்கப்பட்டுள்ளார்.

பெருங்குடி மற்றும் சோழிங்கநல்லூர் மண்டலங்களுக்கான பொறுப்பு அமைச்சராக விக்னேஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.

வளர்ச்சி பணிகளுக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்:

இதன்படி, சென்னையின் 15 மண்டலங்களும் பொறுப்பு அமைச்சர்களின் கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன. மண்டலங்களில் நடைபெறும் வளர்ச்சிப் பணிகளை துரிதப்படுத்துதல், பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுதல், மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் மற்றும் பேரிடர் காலங்களில் நிவாரணப் பணிகளை ஒருங்கிணைத்தல் உள்ளிட்ட பணிகளை பொறுப்பு அமைச்சர்கள் மேற்கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: தமிழக அரசுப் பணிகளில் 20% இட ஒதுக்கீடு.. யாருக்கெல்லாம் தெரியுமா.. கவர்னர் காட்டிய பச்சைக் கொடி!

சென்னை மாநகராட்சியின் நிர்வாகப் பணிகள் மற்றும் மண்டல அளவிலான நடவடிக்கைகள் ஒருங்கிணைக்கப்படுவதன் மூலம், பொதுமக்களின் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வு காண முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us