AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

கல்லூரி மாணவர்களுக்கு ஜாக் பாட்.. கூகுள் அறிவித்த இலவச AI Plus திட்டம்.. முழு விவரம் இதோ!

AI Plus Scheme For College Students | தற்போதைய காலக்கட்டத்தில் அனைத்து துறைகளிலும் செயற்கை நுண்ணறிவு அம்சம் பிரதானமாக மாறியுள்ளது. எனவே, அனைவரும் ஏஐ தெரிந்துக்கொள்ள வேண்டிய கட்டாயமும் உருவாகியுள்ளது. இந்த நிலையில், மாணவர்களுக்கான ஏஐ திட்டத்தை கூகுள் அறிமுகம் செய்துள்ளது.

கல்லூரி மாணவர்களுக்கு ஜாக் பாட்.. கூகுள் அறிவித்த இலவச AI Plus திட்டம்.. முழு விவரம் இதோ!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 25 Aug 2026 18:26 PM IST

தற்போதைய சூழலில் ஒட்டுமொத்த உலகையுமே இயக்கிக்கொண்டு இருக்கும் முக்கிய அம்சமாக செயற்கை நுண்ணறிவு (AI – Artificial Intelligence) செயல்பட்டு வருகிறது. அனைத்து துறைகளிலும் செயற்கை நுண்ணறிவு அம்சத்தின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. இந்த சூழலில் அனைவரும் செயற்கை நுண்ணறிவு அம்சத்தை கற்றுக்கொள்ள வேண்டும் என்பது கட்டாயமாக உள்ளது. இந்த நிலையில் தான், இந்திய கல்லூரி மாணவர்களுக்கு கூகுள் (Google) நிறுவனம் ஒரு அசத்தல் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது, இந்தியா உள்ளிட்ட சில நாடுகளில் உள்ள தகுதியான மாணவர்களுக்கு ஏஐ பிளஸ் (AI Plus) என்ற இலவச பயிற்சி அம்சத்தை வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது.

இந்த நிலையில், கல்லூரி மாணவர்களுக்காக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ள இந்த அசத்தல் அம்சத்தின் சிறப்புகள் என்ன என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இலவச ஏஐ பிளஸ் அம்சத்தை அறிவித்த கூகுள்

வரும் தலைமுறையினர் ஏஐ கற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இதன் காரணமாக பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை கட்டணம் செலுத்தில், ஏஐ படிப்புகளை படிக்க வைக்கின்றனர். இந்த நிலையில் தான், உலக நாடுகளில் இருக்கும் தகுதியான மற்றும் திறமையான மாணவர்களுக்கு இந்த இலவச ஏஐ பிளஸ் அம்சத்தை வழங்க உள்ளதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.

இதையும் படிங்க : வாட்ஸ்அப்பில் முக்கிய ஏஐ அம்சங்கள் – இது தெரியுமா உங்களுக்கு?

கூகுளின் ஏஐ பிளஸ் – சிறப்பு அம்சங்கள் என்ன என்ன?

கூகுளின் இந்த திட்டத்தில், தகுதியான மாணவர்கள் ஜெமினி ஆம்னி (Gemini Omni) வசதியை பெற முடியும். இந்த திட்டத்தில் மாணவர்களுக்கு வழக்கமான ஏஐ பயனர்களை விடவும் இரண்டு மடங்கு அதிகமான பயன்பாட்டு வரம்பு வழங்கப்படும். அதுமட்டுமன்றி, இந்த திட்டத்தில் பயன்பெறும் மாணவர்களுக்கு சுமார் 400 ஜிபி கிளவுட் சேமிப்பு வசதி வழங்கப்படும். இதற்காக மாணவர்களிடம் இருந்து எந்தவித கட்டணமும் விதிக்கப்படாது. இது முற்றிலும் இலவசமானது ஆகும்.

இதையும் படிங்க : ஏஐ முதல் யுபிஐ வரை… வாட்ஸ்அப்பின் 5 முக்கிய அம்சங்கள்

மேலும் விளம்பரம் இல்லாமல் இசை மற்றும் வீடியோக்களை பெற விரும்பும் மாணவர்களுக்காக மற்றொரு அசத்தல் அம்சத்தையும் கூகுள் வழங்க உள்ளது. அதாவது, கூகுள் ஏஐ ப்ரோ (Google AI Pro) மற்றும் யூடியூப் ப்ரீமியம் (YouTube Premium) ஆகியவற்றை 70 சதவீதம் தள்ளுபடியுடன் வழங்க உள்ளது. இந்த திட்டத்தில் பயன்பெற விரும்பும் மாணவர்கள், கூகுள் ஒன் (Google One) பக்கத்தில் உள்ள மாணவர் சலுகை என்ற பக்கத்திற்கு சென்று தங்களது தனிப்பட்ட கூகுள் கணக்கு மூலம் லாக் இன் செய்து இந்த சலுகையை பெற்றுக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us