AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

கேஒய்சி மோசடி.. ஏமாறாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?.. ஆர்பிஐ அறிவுரை!

What To Do To Prevent Yourself From KYC Scam | சமீப காலமாக கேஒய்சி தொடர்பான மோசடிகள் அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில், கேஒய்சி மோசடிகளில் இருந்து பாதுகாப்பாக இருப்பது எப்படி, மோசடிகள் நடைபெறாமல் தடுக்க என்ன செய்ய வேண்டும் என்று ஆர்பிஐ அறிவுரை வழங்கியுள்ளது.

கேஒய்சி மோசடி.. ஏமாறாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?.. ஆர்பிஐ அறிவுரை!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 20 Aug 2026 23:04 PM IST

தற்போதைய சூழலில் அரசு, ரேஷன் கார்டு (Ration Card) முதல் கேஸ் சிலிண்டர் (Gas Cylinder) வரை என அனைத்திற்கும் கேஒய்சியை (KYC – Know Your Customer) கட்டாயமாக்கியுள்ளது. இந்த நிலையில், கேஒய்சி என்ற வார்த்தையை பயன்படுத்தி ஏராளமான மோசடி சம்பவங்கள் நடைபெறுகிறது. இதன் காரணமாக ஏராளமான பொதுமக்கள் தங்களது பணத்தை இழந்துள்ளனர். இந்த நிலையில் தான், கேஒய்சி என்ற பெயரில் நடைபெறும் மோசடிகளில் இருந்து பாதுகாப்பாக இருக்க சில வழிகாட்டு நெறிமுறைகளை இந்திய ரிசர்வ் வங்கி (RBI – Reserve Bank Of India) வெளியிட்டுள்ளது.

ஆர்பிஐ வெளியிட்ட முக்கிய அறிவுரை

உங்கள் வாடிக்கையாளர் ஆளரி விவரங்களை புதுப்பிக்கவும் (KYC), இல்லையெனில் உங்கள் வங்கி கணக்கு முடக்கப்படும் என்ற செய்தி உங்களுக்கு வந்துள்ளதா?,  அது குறித்து பதற்றப்பட வேண்டாம். இத்தகைய செய்திகள் உங்கள் மொபைல் எண்ணுக்கு வரும் பட்சத்தில், லிங்குகளை கிளிக் செய்வதற்கு முன்னதாக சிந்திக்க வேண்டும் என கூறியுள்ளது.

இதையும் படிங்க : லலிதா ஜுவல்லரி ஐபிஓ ஏலமிடல் முடிவு.. பங்கு ஒதுக்கீடு மற்றும் பட்டியலிடல் விவரங்கள்!

அவசர நிலையை உருவாக்கும் மோசடிக்காரர்கள்

மோசடிக்காரர்கள் அவசர நிலையை உருவாக்கி, பொதுமக்களிடம் சுலபமாக மோசடி செய்கின்றனர். எனவே, பொதுமக்கள் இத்தகைய மோசடிகளில் சிக்கிக்கொள்ளாமல் இருக்க இந்த சில விஷயங்களை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று ஆர்பிஐ கூறியுள்ளது.

அவசரம் படுவதை தவிர்க்க வேண்டும்

கேஒய்சி தொடர்பாக இத்தகைய அவசரப்படுத்தும் குறுஞ்செய்திகள் எதுவும் வந்தால் உடனடியாக செயல்பட வேண்டாம்.

சிந்தித்து செயல்பட வேண்டும்

வங்கிகள், NBFC-கள் உங்கள் வாடிக்கையாளர் ஆளரி விவரங்களை புதுப்பிப்பதற்காக ஒருபோது உங்களுக்கு லிங்குகளை அனுப்ப மாட்டார்கள். எனவே அத்தகைய லிங்குகள் ஏதேனும் வந்தால் சிந்தித்து செயலாற்றுங்கள்.

இதையும் படிங்க : EPFO : பிஎஃப் கணக்குகளில் கேட்பாரற்று கிடைக்கும் ரூ.8,000 கோடி.. இபிஎஃப்ஓ வெளியிட்ட தகவல்!

உறுதிப்படுத்துவது கட்டாயம்

உங்களுக்கு இத்தகைய குறுஞ்செய்தி வரும் பட்சத்தில் லிங்குகளை கிளிக் செய்யாதீர்கள். ஓடிபி, பின் மற்றும் கடவுச்சொற்களை பகிர வேண்டாம். இத்தகைய குறுஞ்செய்திகள் குறித்து NBFC-யிடன் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.

Follow Us